Sunday, May 31, 2020

neethi vakyam

*எவரிடமும் பிரகடனப்படுத்தக் கூடாத விஷயங்கள்* 

न कञ्चिदात्मनः शत्रुं नात्मानं कस्यचिद्रि पुम्।
प्रकाशयेन्नापमानं न च निःस्नेहतां प्रभोः ।।

ந கஞ்சிதாத்மந: ஶத்ரும் ஆத்மாநம் கஸ்யசித்ரிபும் ।
ப்ரகாஶயேந்நாபமாநம் ந ச நி:ஸ்நேஹதாம் ப்ரபோ: ।।

எவரையும் தனக்கு எதிரி என்றோ . எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே, தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் ப்ரியமாக
இல்லையென வெளிப்படையாகக் கூறாதே. வேறொருவர் இதனைப் பயன்படுத்தி எஜமானனுக்கு மேலும் வெறுப்பேற்படச் செய்யக்கூடும்.

*இந்த உலக வாழ்க்கையில் ஸுகத்தை கொடுப்பவை*

आरोग्यमानृण्यमविप्रवासः सद्भिर्मनुष्यैः सह संप्रयोगः ।
स्वप्रत्यया वृत्तिरभीतवासः षट् जीवलोकस्य सुखानि राजन् ॥ 

ஆரோக்யமாந்ருண்யமவிப்ரவாஸ:
ஸத்பிர்மனுஷ்யை: ஸஹ ஸம்ப்ரயோக: |
ஸ்வப்ரத்யயா வ்ருத்திரபீதவாஸ:
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகானி ராஜன் ||

ஓ அரசனே,
௧) நோயின்மை,
௨) கடனின்மை, 
௩) உற்றார் உறவினரிடமிருந்து பிரியாமை, 
௪) நல்லோரிணக்கம்,
௫) தன் வசத்திலுள்ள பிழைப்புக்
கான வழி (தொழில் முதலியவை),
௬) பயமற்ற குடியிருப்பு
இவை ஆறும் உலக வாழ்க்கையில் ஸுகம் தருபவை.

savithaastro@gmail.com
ambharishg@gmail.com
savithaastro.blogspot.com
ambharishg.blogspot.com
9443711056
9790111570