Thursday, April 25, 2024

பிரசன்ன ஜோதிஷ நிமித்தங்கள்

ப்ரஸ்ன ஜோதிஷம் பார்க்கும் போது ஜோதிஷர்கள் கவனிக்க வேண்டிய நிமித்தங்கள்,


1.ஸமயா (Samaya)

கேள்வி கேட்கப்படும் நேரம்,


2.தெஸா(Direction)

கேள்வி கேட்பவர் நிற்கும் திசை.


3.ஸ்வாஸா(Breathing)

ஜோதிஷன் சுவாஸ ஸ்திதி.


4.அவஸ்தா (Avastha)

ஜோதிஷனின் தற்போதைய மனோநிலை.


5.ஸ்பர்ஸா(Sparsa-touching)

ஜாதகர் தன் ஸரீர பாகங்களை தொடும்போது கவனித்தல்.


6.ப்ரஸ்ன இராசி, (Prassana rasi)

ப்ரஸ்ன லக்கினத்தின் இராசி ஸ்திதி.


7.ஸம்பிதானா தெஸா;(Direction of. Place)

ப்ரஸ்னம் காட்டும் திக்கு.


8.ப்ரஸ்னக்ஷரா. (The first word  spoken by the native)

ஜாதகர் சொல்லும் முதல் வார்த்தை.


9..விருச்சிகன் ஸ்திதி,

(Natives sitting position)

ஜாதகர் அமர்ந்திருக்கும் நிலை.


10.ஜ்யேஷ்டா(Nativesactivity)

ஜோதிஷம் கேட்க வந்தவர்களின் ஸரீர பாக செயல்பாடுகள்.


11.மனோபாவா(Natives thoughts)

ஜாதகரின் அப்போதைய. மனோநிலை.


12.விலோக்கினம்.

(Natives  looking  directions)

ஜாதகர் எங்கேயெல்லாம் பார்க்கிறார்,

என்பதை கவனிப்பது.


13.வஸ்திரா(Natives  Dressing positions) 

ஜாதகரின் வஸ்திர தரித்த நிலைகளை

கண்டுகொள்வது.


14.நிமித்தா(Situation around the person doing prasnam  )

ப்ரஸ்னம் பார்க்கும் போது ஜோதிஷனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்,


ப்ரஸ்ன. ஜோதிஷம் பார்க்கும் போது ஜோதிஷர்கள் இவைகளை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்,

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

அக்னி நட்சத்திரத்தில் செய்யகூடியது செய்யகூடாததும்

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

 இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். 

அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன.

 அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும்.

 அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். 

பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

 இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

அக்னி நட்சத்திர வரலாறு :

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

 தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.

 அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.

 21 நாள்அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி தேவன் கிருஷ;ணரிடம் ஓடி, நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ;ணன் அர்ஜீனனைப் பார்த்தார். அர்ஜீனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ;ணர், 21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். 

அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் 
என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது என
நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும்.

 பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள்.

 அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் :

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள். 

அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.

ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.

சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் 

நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள்.

 அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில்  அபிஷேகம் செய்யப்படும் 

 உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால்,  பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.
Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

Wednesday, April 24, 2024

விதி மதி கதி

 விதி என்பது முன் ஜென்மத்தில் 

நாம் செய்த பாவ,

புண்ணியம் காரணமாக அனுபவித்து தீர்க்கபட வேண்டிய கர்மா.

இது ஏற்கனவே நமக்காக நாம் அனுபவிக்க தீர்மானிக்கப்பட்டது.

மதி என்பது 

இந்த ஜென்மத்தில் நாம் செய்ய போகிற பாவ,புண்ணிய

கர்மா .

அதாங்க நமக்காக நாம் அனுபவிக்க

நம்மளாலேயே 

நாம் தீர்மானிக்கப் போகிற கர்மா .

நமக்கு இனி வருங்காலத்தில் நமக்கு என்ன நன்மை தீமை வரும் என்று தீர்மானிப்பது கதி 

விதிக்கு லக்னம்

மதிக்கு சந்திரன்

கதிக்கு சூரியன் 

என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்த நியதி.

பிறப்பில் இருந்து

ஒருவருக்கு விதி 

என்கிற லக்னம் 33 வயது வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.

மதி என்கிற சந்திரன் 

34 வயது முதல் 66 வயது 

வரை தன் கர்மாவை 

அனுபவிக்க செய்யும்.

கதி என்கிற சூரியன் 

67வயது முதல் 99 வயது 

வரை தன் கர்மாவை அனுபவிக்க செய்யும்.

என்று ஜோதிட சாஸ்திரம் 

வரையறுத்து உள்ளது.

விதி என்பது 

இறந்த காலம் 

நமக்கு 

தீர்மானிக்கப்பட்டது.

மதி என்பது 

நிகழ்காலம் 

நாமாகவே ,

தீர்மானிப்பது.

கதி என்பது 

எதிர்காலம் 

நமக்காக 

தீர்மானிக்கப்போவது.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

நவகிரக குளியல்:

 

நவகிரகப்ரீதி-ஸ்நானங்கள் ஒன்பது 


சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.


சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.


செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.


புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.


வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.


கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

கிரஹயுத்தம்

குரு சுக்கிரன் சனி கிரகயுத்தங்கள்:

குரு

குரு சுக்கிரனால் வெற்றிகொள்ளப்பட்டால் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள், பாகிஸ்தானின் Potohar பகுதிகள்,ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாபின் வடமேற்குப் பகுதிகள், மதுரா, சாளுவம், கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதிகளான அலகாபாத்தின் தென்மேற்குப் பகுதிகள்,வங்கதேசம் ஆகியவைகளும் கால்நடைகளும் உணவுதானியங்களும் சேதமடையும்.

குருவை செவ்வாய் ஜெயிக்குமானால் நாட்டின் மத்தியப்பகுதிகளும் அவற்றை ஆட்சி செய்பவர்களும், பசுக்களும் பாதிக்கப்படுவார்கள்.

சனி குருவை வெற்றிகண்டால் ராஜஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்கள், பாகிஸ்தானின் பகவல்பூர்,பலுசிஸ்தான் மற்றும் முல்தான் பகுதிகள் ஆகியவையும் பிராமணர்களும் பாதிக்கப்படுவார்கள். 

புதன் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள், நேர்மையாளர்கள், படைவீரர்கள் மற்றும் நாட்டின் மத்தியப்பகுதிகள் பாதிப்படையும். மேலும் யானை,குதிரை, முதல்வர் மற்றும் மந்திரிகள், சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், பண்டிதர்கள், தொண்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், இலக்கணப்பண்டிதர்கள், தத்துவ ஞானிகள், வேதபண்டிதர்கள், அரசியல்வாதிகள், உயர்ரக ஆயுதங்கள் ஆகியவை பாதிப்படையும்.

சுக்கிரன்

சுக்கிரனைக் குரு வென்றால் நாட்டின் எல்லையோர மாநிலங்களை ஆட்சி செய்பவர்கள் அழிந்து போவார்கள். பிராமணர்களும் அரசவம்சத்தினர்களும் சிக்கலைச் சந்திப்பார்கள். மழை பெய்யாது. அயோத்தி பைசாபாத் பகுதிகள்,ஒரிசா மற்றும் ஆந்திராவின் வடபகுதிகள், வங்கதேசம்,அலஹாபாத் பகுதிகள், நாட்டின் மத்தியப்பகுதிகள்,உத்தரப்பிரதேசத்தின் Braj பகுதிகள் ஆகியவை பலவிதத்திலும் பாதிக்கப்படும். 

செவ்வாய் சுக்கிரனை வெற்றிகண்டால் இராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். ஆட்சியாளர்கள் போர் காரணமாக சிறைப்படுவார்கள்.

சுக்கிரனை புதன் ஜெயித்தால் மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் பாதிக்கப் படுவார்கள். மழை பெய்யாது. பாலுக்கு பற்றாக்குறை உண்டாகும். 

சனியால் சுக்கிரன் தோற்கடிக்கப்பட்டால் நிறுவனங்களின் தலைவர்கள்,இராணுவ வீரர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், நீர்வாழ் விலங்குகள் மற்றும் பொருட்கள் ஆகியவை பாதிக்கப்படும். மேலும் மவுண்ட் அபு, புஷ்கரம், சௌராஷ்டிரா ஆகிய பகுதிகள், சூத்திரர்கள், ரைவதக மலைக்கு அருகில் வசிப்பவர்கள், தவறான செய்கையுடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள்,காட்டுப்பன்றி வேட்டையாடுபவர்கள், விதவைகள், திருடர்கள், எருமை,கழுதை, ஒட்டகம் முதலானவைகளும் பாதிக்கப்படும்.

சனி

சனியைச் சுக்கிரன் வென்றால் விலைவாசி ஏற்றமடையும். பாம்புகள், பறவைகள் மற்றும் பிரபலமான மனிதர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சனியைச் செவ்வாய் வென்றால் தக்காணம்,ஆந்திரா, இந்துகுஷ் மலைப் பகுதிகள், பஞ்சாப் மற்றும் வடகாசி ஆகியவை பாதிக்கும்.

புதன் சனியை வெற்றிகொள்ளுமானால் பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும் வியாபாரிகள், பறவைகள், கால்நடைகள், யானைகள் போன்றவையும் பாதிக்கப்படும். 

சனி குருவிடம் தோற்றால் பெண்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களும், பெண்களால் நிர்வகிக்கப்படும் மாநிலங்களும் பாதிக்கப்படும்

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

யோகி அவயோகி

ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் முதலில் அந்த ஜாதகர் எந்த யோகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அவருக்கு யோகியாக வரும் கிரகம் யார் என்றும் , யோகி சாரத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன. 

தற்போது நடைபைறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்களா என்பதை கணக்கிட

ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டுரைகள் 

   Yogi avayogi planets 

   Yogi avayogi prosperous and destruction.

போன்ற தலைப்புகளில் உள்ளதை காணலாம்.

யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த யாரோ சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்துவைக்கும் ஒரு சிலருக்கு புதனின் தோசம் அதிகமாகவே பற்றுவதால் அவர்களால் இத்திறையில் சிறப்பையும், புகழையும் ஒருகாலமும் அடைய முடியாது. புதன் கொஞ்சம் ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான்.


ஒரு குற்றம் நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன். பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.


பஞ்சாங்கம்:

நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம்.


இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த நட்சத்திரமும், நாளும்தான் தெரியும்.

இதில் உள்ள யோகம் தெரியாது.


மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும் ,யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.( அட்டவணை).

இது எவ்வாறு கணக்கிடுவது?


மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதாவது மேசம்0 to 30, 

ரிசபம் 30 to 60 , மிதுனம் 60 to 90, கடகம் 90 to 120 , சிம்மம் 120 to 150, கன்னி 150 to 180, துலாம் 180 to 210, விருச்சிகம் 210 to 240, தனுசு 240 to 270, மகரம் 270 to 300, கும்பம் 300 to 320 பாகை, மீனம் 320 to 360 பாகை என 360 பாகை கொண்ட 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தோகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).

இனி யோகி பாகையை கணக்கிட மேஷத்தில் இருந்து சூரியன் இருக்கும் பாகை+ மேசத்திலிருந்து சந்திரன் இருக்கும் பாகை + 93  20°பாகை கூட்டினால் யோகி பாக கிடைத்துவிடும்.அதை கணக்கிட்டிதான் ரெடிமேடாக நீங்க என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என குறித்து அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள். 


இப்போ பலன்களை பார்ப்போம். 

யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி. அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே!

அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும்.இப்போது சனியே யோகியாவார். சனிதசா சனி கெடுதல் செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம் ,அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.


அவயோகி:

யோகியின் நட்ஞத்திரபாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் ஆறாவது நட்சத்திரமும் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும் கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை தருவார்கள்.அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி. 


1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.

2.சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.

3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.

4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.

5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.

6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.

7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.

8. கேது யோகியென்றால் ராகு அவயோகி.

9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.

இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.


இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .

எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.


எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.

உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.bolgspot.com

9790111570

நட்சத்திர குலம்

 அஸ்வினி - வைசியகுலம்

பரணி - நீச்ச குலம்

கிருத்திகை - பிரம்ம குலம்

ரோஹிணி - க்ஷத்திரிய குலம்

மிருகசீரிடம் - வேடர் குலம்

திருவாதிரை - இராட்சச குலம்

புனர்பூசம் - வைசியகுலம்

பூசம் - சூத்திர குலம்

ஆயில்யம் - நீச்ச குலம்

மகம் - க்ஷத்திரிய குலம்

பூரம் - பிரம்ம குலம்

உத்திரம் - சூத்திர குலம்

ஹஸ்தம் - வைசியகுலம்

சித்திரை - வேடர் குலம்

ஸ்வாதி - இராட்சச குலம்

விசாகம் - நீச்ச குலம்

அனுசம் - க்ஷத்திரிய குலம்

கேட்டை - வேடர் குலம்

மூலம் - இராட்சச குலம்

பூராடம் - பிரம்ம குலம்

உத்திராடம் - சூத்திர குலம்

அபிஜித் - வைசியகுலம்

திருவோணம் - நீச்ச குலம்

அவிட்டம் - வேடர் குலம்

சதயம் - இராட்சச குலம்

பூரட்டாதி - பிரம்ம குலம்

உத்திரட்டாதி - சூத்திர குலம்

ரேவதி - க்ஷத்திரிய குலம்

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570