Wednesday, June 29, 2016

ஹோரா பலம்

                                                      ஹோரா  பலம்

                                                      சூரிய ஓரை
பிரதிஷ்டை , பிரம்ம விசாரம் , அத்யயனம் , ஊர்த்வ முக விவசாயம்.

                                                          சந்திரன்
விரை விடுதல் , மருந்து உண்ணல் , ரோக  முக்த ஸ்நானம், பட்டாபிஷேகம் , மருந்து தயாரித்தல் , மந்திர சுவீகாரம் .

                                                         செவ்வாய்
ஆயுத அப்பியாசம் , மருந்து தயாரித்தல் , மருந்துண்ணல் , ரோக முக்த ஸ்நானம், எதிரியை அடக்குதல், தேவி உபாசனை.

                                                            புதன்
வித்யாப்யாஸம், புதுக்கணக்கு, வியாபாரம் ஆரம்பித்தல், தங்கம் கொள்முதல்.

                                                         வியாழன்
மந்திரம், தீக்ஷா க்ரஹணம், யாத்திரை, எல்லா சுபகாரியங்களும்.

                                                           சுக்கிரன்
விவாகம் ,ஆபரணம் அணிதல், வஸ்த்திரம் தரித்தல், மாங்கல்ய தேவதா ஆராதனம், ரதி போகம், சங்கீத வித்யா.

                                                              சனி
கலகம், விஷ்ணு பூஜை, அப்யஞ்சனம்,(எண்ணெய் குளியல்), புதிய உடை அணிதல், நீண்ட நாட்களான பிரச்சினைகளை முடித்தல்.
ஆகியவைகளாகும்.

                ஹோரைகள் தரும் பலன்கள்

1.சூரிய ஹோரை: ************** செய்யக்கூடியவை: ----

------- இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம் உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம். பத்திரங்கள் பார்க்கலாம் சிவ தரிசனம் செய்யலாம் . செய்யகூடாதவை சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது

2.சந்திர ஹோரை ************** செய்யக்கூடியவை : --------------

----------- புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம் செய்ய கூடாதவை: -------------------------- தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.

3.செவ்வாய் ஹோரை ****************** செய்யக்கூடியவை :

----------------------- சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் . செய்ய கூடாதவை: -------------------------- கடன் வசூல் செய்ய போகக்கூடாது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .

4.புதன் ஹோரை ************* செய்யக்கூடியவை :

கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் . கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.

செய்ய கூடாதவை: -------------------------- பெண்பார்க்கும் சம்பவம் கூடாது. வீடு,நிலம்பற்றி பேச கூடாது. சொத்துகளை பார்வையிடக்கூடாது.

5.குரு ஹோரை ************* செய்யக்கூடியவை : ------------------

------- சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை. பொன் நகைகள் வாங்கலாம். புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் . வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம். யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.

செய்ய கூடாதவை: --------------------------- முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது. புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.

6.சுக்கிர ஹோரை ************** செய்யக்கூடியவை : --------------------------- பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம். செய்ய கூடாதவை: --------------------------- நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.

7.சனி ஹோரை ************ செய்யக்கூடியவை : -------------------

சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம். செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.

செய்ய கூடாதவை: ---------------------------

நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது. முதல் முதலாக பிறந்த குழந்தையை போய்ப்பார்க்க கூடாது . துக்கம் விசாரிக்க கூடாது.

தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Tuesday, June 28, 2016

பாகவதம் கூறும் உண்மைகள்

#கருட_புராணம்

#தவறு_செய்தால்_நமக்கு_ஆண்டவன்

#கொடுக்கும்_தண்டனைகள்_இதோ

#தன்டனைகளின்_விவரம்

===============================

#தாமிஸிர_நரகம்:

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும்.

அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும்.

 பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும்.

இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

===========================

#அநித்தாமிஸ்ர_நரகம்:

 கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும்.

கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும்.

 இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

===============================

#ரௌரவ_நரகம்:

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது,

 பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும்.

இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

===========================

#மகா_ரௌரவ_நரகம்:

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.

 இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும்.

இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

==============================

#கும்பிபாகம்:

வாயில்லா   விலங்குகளை ,  உயிர்களை வதைத்தும்  பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது.

 எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

===============================

#காலகுத்திரம்:

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும்.

 இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

==============================

#அசிபத்திரம்:

தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது.

இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள்.

 இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

================================

#பன்றி_முகம்:

குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும்.

 நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும்.

 இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும்.

 அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

===============================

#அந்தகூபம்:

 உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது.

கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

==============================

#அக்னிகுண்டம்:

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.

 இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

===============================

#வஜ்ரகண்டகம்:

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம்.

 நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

=============================

#கிருமிபோஜனம்:

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும்.

 பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

============================

#சான்மலி:

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது.

 இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

==============================

#வைதரணி:

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது.

வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

===============================

#பூபோதம்:

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது.

 இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்

==========================

#பிராணி_ரோதம்:

 பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது.

 இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

============================

#விசஸனம்:

பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

============================

#லாலா_பக்ஷம்:

 மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

=============================

#சாரமேயாதனம்:

வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

===============================

#அவீசி:

பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Wednesday, June 22, 2016

சித்தர்களின் பிறப்பு

18 சித்தர்களின் வாழ்க்கை அட்டவணை:
------------------------------------------------------------------
எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.
------------------------------------------------------------
1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
------------------------------------------------------------
2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
------------------------------------------------------------
3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
------------------------------------------------------------
4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
------------------------------------------------------------
5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
------------------------------------------------------------
6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
------------------------------------------------------------
7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
------------------------------------------------------------
8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
------------------------------------------------------------
9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.
------------------------------------------------------------
10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
------------------------------------------------------------
11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
------------------------------------------------------------
12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
------------------------------------------------------------
13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
------------------------------------------------------------
14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.
------------------------------------------------------------
15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
------------------------------------------------------------
16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.
------------------------------------------------------------
17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.
------------------------------------------------------------
18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Thursday, June 16, 2016

கேந்திராதிபத்தியம் ஒரு பார்வை


  
                                         கேந்திராதிபத்தியம் ஒரு பார்வை 



1)       ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் குரு  பத்தாமிடத்தில்  சுக்கிரன்
     நான்கில் சந்திரன் ஆகியோர் இருப்பின் அது கேந்திராதிபத்திய தோஷம்
     எனப்படும் .
2)      ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் புதன் பத்தாமிடத்தில்  சுக்ல சந்திரன்
மூன்றாமிடத்தில் குரு  ஆகியோர் இருப்பின் கேந்திராதிபத்திய தோஷம் எனப்படும் .


              இதன் பலன்கள்  யாதேனில்

இந்த ஸ்தானங்களில் உள்ள கிரகங்களின் திசைகள்  மற்றும் புக்திகளில்
தனக்கு என்று வாழவும் அனுபவிக்கவும் சேர்த்து வைத்த  பொருட்களையும்
சொத்துக்களையும் சுற்றத்தார் மற்றும் குடுபத்தினரையும் , உடனிருந்து அனுபவிக்கவிடாமல் செய்வதே கேந்திராதிபத்திய தோஷமாகும் .
ஆனால் மற்றவர்களுக்கென்று எந்தகாரியாத்தில் ஈடுபட்டாலும் அவை
உடனே கை கூடுகிறது .
இருக்கக்கூடிய தோஷங்களிலேயே மிகவும் கொடிய தோஷமாக இது உள்ளது .
இதற்க்கு தீர்வாக கேந்திரத்தில் உள்ள கிரஹங்களுக்கு பாப சம்பந்தம்
ஏற்ப்பட்டால் கேந்திராதிபத்தியம் வேலை செய்யாது என்று கூறுகின்றனர்
கல்வியிற் சிறந்த பெரியோர்கள் .ஆனாலும் அது தன குணத்தினை முழுவதுமாக காட்டியே தீருகிறது .
எனக்கு தெரிந்து நான் ஆராய்ச்சி செய்து பாரத்ததி  ௦௦ ஜாதகத்தில் ௯
ஜாதகங்கள் மிகச்சரியாக பலன்களை செய்துள்ளது .
எனக்கென்னவோ இதற்க்கு ஒரே தீர்வு சிவக்ஷேத்திரம் ஒன்றுதான்
என்று தோன்றுகிறது.
வேறுவழியில் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை .
ஆனால் சிவக்ஷேத்திரத்திக்கு சென்று மனமுருகி பிரார்த்திக்க அவன்
நிச்சயமாக அனுக்க்ரகிப்பான் .
இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.



Ambharish G
Savithaastro@gmail.com
+91 9443711056 (whats-app)
+91 9790111570



ஹஸ்தாம் ஸம்

நமது எண்ணங்களையும் செயல்களையும் நமது கைகளைக்கொண்டே தெரிந்து கொள்ளலாம்.



savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

ராசிகளும் நதிகளும்


1.மேஷம்_______________________ கங்கை

2.ரிஷபம் _______________________ யமுனை

3.மிதுனம் ______________________  சரசுவதி

4.கடகம்  _______________________ _ நர்மதை

5.சிம்மம் ________________________ கோதாவரி

6.கன்னி  ________________________ கிருஷ்ணா

7.துலாம் _________________________ காவேரி

8.விருச்சிகம் _____________________ தாம்பிரபரணி

9.தனுசு    ________________________ சிந்து

10.மகரம்  _________________________ துங்கபத்ரா

11.கும்பம் __________________________பிரம்மபுத்ரா

12.மீனம்    _________________________ ப்ரணீதா

இந்த ராசியில் பிறந்தவர்கள்  இந்த நதிகளில் ஸ்நானம் செய்ய  அவரவர் பூர்வ ஜென்ம

பாபங்களிலிருந்து நிவர்த்தி அடையலாம்.


savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

மாதங்களும் பெயர்களும்



தமிழ்      சாந்திரமானம்   சௌரமானம்   ருதுக்கள்

1.சித்திரை,     சைத்ரம்,      மேஷம்,  ___வசந்த ருது

2.வைகாசி,     வைசாகம்,   ரிஷபம்,

3.ஆனி      ,     ஜ்யேஷ்டம்,  மிதுனம், __க்ரீஷ்ம ருது

4.ஆடி        ,      ஆஷாடம் ,   கடகம் ,  

5.ஆவணி ,     ச்ராவனம் ,    சிம்மம் , ___வருஷ ருது

6.புரட்டாசி ,    பாத்ரபதம் ,    கன்னி,

7.ஐப்பசி    ,     ஆஸ்வீஜம்,    துலாம் ,___சரத் ருது

8.கார்த்திகை,  கர்த்தீகம்  ,விருச்சிகம்,

9.மார்கழி   ,    மார்க்கசிரம்,   தனுர்   , ஹேமந்தருது

10.தை.        ,   புஷ்யம்.     ,     மகரம் ,

11.மாசி.      ,     மாகம்        ,    கும்பம் ,___சிசிர ருது

12.பங்குனி  ,    பால்குணம் ,   மீனம்,


savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Sunday, June 12, 2016

யோகங்களை காண்போம்

யோகங்கள் 27 எனப்படும்.
அவைகளாவன

1.விஷக்கம்பம்
2.ப்ரீதி
3.ஆயுஷ்மான்
4.சௌபா கியம்
5.ஸோ பனம்
6.அதிகண்டம்
7.சுகர்மம்
8.திரு தி
9.சூலம்
10.கண்டம்
11.விருத்தி
12.துருவம்
13.வியாகதம்
14.ஹர்ஷணம்
15.வஜ்ரம்
16.சித்தி
17.வியாதீபாதம்
18.வரீயான்
19.பரிகம்
20.சிவம்
21.சித்தம்
22.சாத்தியம்
23.சுபம்
24.சுப்ரம்மம்
25.பிரம்மம்
26.மஹேந்த்ரம்
27.வைத்ருதி

ஆகியவைகளாகும்

இவைகளில் சுப விசேஷங்களுக்கு ஆகாதவைகள்

1.விஷகம்பம் ( மன நடுக்கம்)
2.அதிகண்டம்( கண்டங்கள்)
3.சூலம்  ( திக் பயண இடைஞ்சல்)
4.கண்டம் (ஆபத்துக்கள்)
5.வியாகதம் ( விஷ தோஷம் )
6.வியாதீபாதம் ( விபத்து  மற்றும் ஆபத்துக்கள்)
7.வரியான்  (காயங்கள்)
8.பரிகம் ( காரிய தாழ்வு ஏற்படுத்தல்)
9.வைத்ருதி ( ஆசைகளில் கவலை, பேய் பிடித்தல்.)

ஆகியவைகள் ஏற்ப்படும்.

எனவே இந்த யோக காலங்களை தவிர்த்து  மற்றைய நாட்களில் சுப விசேஷன்களை செய்து நற்பலங்களை பெறுங்கள்.




savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056