Monday, December 24, 2018

தஸவாயுக்கள்

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் .

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .

உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .
என்ற நிலை அமைகிறது .

பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.

Friday, November 23, 2018

27தீபங்களும்_அதன்_பயன்களும்

*27தீபங்களும்_அதன்_பயன்களும் !*

தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

*தினமும்_27_விளக்குகள்...*

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

*கோலமிடப்பட்ட_வாசலில்: ஐந்து விளக்குகள்*

*திண்ணைகளில்: நான்கு விளக்குகள்*

*மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்*

*நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்*

*நடைகளில்: இரண்டு விளக்குகள்*

*முற்றத்தில்: நான்கு விளக்குகள்*

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

*பூஜையறையில்:* இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

*சமையல்_அறையில்:* ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம்_முதலான_வெளிப்பகுதிகளில்: *யம தீபம்* ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு_பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

*தீபத்தின்_வகைகள்*

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

*சித்ர_தீபம்:* தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.

*மாலா_தீபம்:* அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.

*ஆகாச_தீபம்:* வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.

*ஜல_தீபம்:*
நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.

*நௌகா (படகு) தீபம்:*
கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.

*சர்வ_தீபம்:* வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

*மோட்ச_தீபம்:* முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

*சர்வாலய_தீபம்:* கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

*அகண்ட_தீபம்:* மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.

*லட்ச_தீபம்:*
ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.

*மாவிளக்கு_தீபம்:*
அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `#மண்டை_விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.

*விருட்ச_தீபம்:* ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

Ambharish.g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

சர்க்கரை வியாதி குணமாக

சர்க்கரை வியாதி என்று உங்களை  ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை வெட்ட வேண்டாம்:

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

Friday, April 27, 2018

உள்ளத்தெளிவு

பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே

பார்ப்பான் அகத்தின் ஐந்து புலன்களாகிய உணர்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், காணுதல் என்ற பசுக்களால் மனம் பயனில்லாமல் தறி கெட்டுத் கொண்டு திரிவதை உணர்ந்து
அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்தால் அந்தப் பசுக்கள் ஞானப்பால் சொரியுமே.....

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

Saturday, April 21, 2018

மஹாபெரியவா அஷ்டோத்திரம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மகாஸ்வாமிகள்
அஷ்டோத்தர சத நாமாவளி:

1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய
நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்
ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர
பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவாளி ஸம்பூர்ணம்
உங்கள் இல்லங்களில் நடக்கும்விஷேசங்களில் பரிசுப்பொருட்கள் தருவதைப்போல் இதையும் பிரசுரித்துக்கொடுத்தால்
அனைவரும்படித்து பயன் பெறுவர்
                            

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

பஸ்மதாரணம்

திருக்கணஞ்சோி கிராமம்
திருவள்ளூா்....

விபூதியை நெற்றியில்  அணியும் போது செய்யக்கூடாதது என்ன? என்ன?

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது

2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது

3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது

4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது

5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்

6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது

7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்

8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்

9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது

10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது

11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது

12.விபூதியை கீழே சிந்தக்கூடாது

13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது

14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது

15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது

16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

Wednesday, April 18, 2018

பலி பீடம்

*பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம் பிடிக்கும்!*

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570