Monday, March 11, 2019

முகூர்த்தம்

ஒரு சுப காரியத்திற்க்கு நல்ல நாள் பாற்க்க வேண்டுமென்றால்,

மொத்தம் 30 நாட்கள், இதில் 15 தேய்பிறை நாட்கள். மீதம் 15 நாட்கள். அதில் செவ்வாய், சனி நான்கு நாட்கள் போய்விடும், மீதம் இருப்பது 11 நாட்கள்.

2. அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை பிரதமை, அஷ்டமி, நவமி என 4 நாட்கள் போய்விடும்.

3. பெண் பிறந்த கிழமை, ஆண் பிறந்த கிழமை நீக்கி, இருவரின் ஜென்ம நட்சத்திரம் நீக்கி பிறந்த மாதம் நீக்கி, இரு அமாவாசை, பவுர்ணமி வரும் மாதம் நீக்கி, இதில் மணமகளின் மாதவிலக்கு நாட்கள் நீக்கி என இருப்பது 1 அல்லது 2 நாட்கள் இருக்கும்.

4. இதில் மண்டபம் கிடைக்க வேண்டும். மணமகன், மணமகள் சொந்தத்தில் வேறு யாருக்கும் திருமணம் சுப காரியங்கள் இருக்க கூடாது.

இப்படி ஏகப்பட்ட முகூர்த்த விதிகளுக்கு நடுவே முகூர்த்தம் பார்க்க வேண்டும். இங்கு மணமகன், மணமகள் வீட்டார் விருப்பங்களுக்கு தான் முகூர்த்தம் குறிக்கப்படுகிறதே தவிர ஜாதக ரீதியாக முகூர்த்தம் குறிப்பது குறைந்து விட்டது.

5. முகூர்த்தத்திற்கு தனி பட்ட கவனம் செலுத்துவதில்லை.  பெண்ணின் இயற்கை மாதவிலக்கு சுழற்சி கூட மாத்திரை கொடுத்து மாற்றி தங்களது வசதி குறைக்காமல் இருக்கின்றனர்.

6. சாஸ்த்திரத்திற்காக முக்கியத்துவம் கொடுக்கும் காலம் போய் சடங்குகள் நோக்கம் அறியாமல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சடங்கு மட்டும் இல்லாமல் சம்பிரதாயம் குறுக்கிடும். இவற்றில் பெரும்பாலும் பெற்றோர் வசதிக்காக திருமணம் நடக்கிறது. மணமக்களுக்காக அல்ல.

ஆகவே இறையருளோடு திருவருளும் கலந்து பெரியோர்களின் ஆசியுடன் நன்மைகளை பெற்றிட

நல்ல நாட்களை நல்ல குருவின் மூலமாக தேர்ந்தெடுத்து சுபகாரியங்களை நிறைவாகச்செய்யுங்கள்.

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570

No comments:

Post a Comment