Wednesday, March 26, 2025

குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம்


 குண்டலினி சக்தி நம்

முதுகுதண்டின் அடிப்பகுதியில்

குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று

பார்த்தால் தனிமங்களே!! 

🌹🌹🌹அத்தனிமத்தின் பெயர்

வெண்பாஸ்பரஸ்.

இந்த வெண்பாஸ்பரஸ்

காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு

கீழேயும் காற்று செல்வதில்லை.

இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை

வழியாக காற்றை மூலாதாரத்திற்கு

கொண்டு செல்லும் போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு

வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலேஎழுகின்றது.

இதுவே யோகமுறையில்

குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில்மூலத்தில் தான் கண்டறிய முடியும். அந்த

வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது.

அடுத்து அந்த அனல் மேலே எழும்பி


🔥🔥சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே

உள்ள தனிமத்தின் பெயர்

 🌹🌹கார்பன். மேலே

எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப

டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே

குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.

இதனால் அனல் மேலும் மேலே எழுந்து

🔥🔥மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது

வினைபுரியும்🌹🌹🌹 தனிமத்தின் பெயர்

ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே

வெப்பநிலை மேலும் அதிகரித்து  🔥🔥அனாகதத்தை

அடைகின்றது.அனாகதத்தில் உள்ள

தனிமத்தின் பெயர்🌹🌹 சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த

ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்

எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.

எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து🔥🔥விசுத்தியை அடைகின்றது.🌹🌹 ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள

தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்

நிகழ்ந்து மேலேறுகின்றது.

அடுத்ததாக உள்ள

சக்கரத்தின் பெயர் 🔥🔥ஆக்கினை. அங்கே🌹🌹 சுத்த

நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே

எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,🔥🔥அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,

ஒரு குருவின்

பெருமைகளை வெறும் வார்த்தைகளால்

விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்

அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

🔥🔥🔥"சிரம் முட்டும் பொழுதில் வரம் தட்டும் குருவே

தரம் பார்த்துன்னை பரம் ஆக்கிடு வான்"🌹🌹

🔥🔥ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்

திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய

பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக

சக்கரம் விழிப்படைதலே காரணம்.🔥 பக்தி

நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,

🔥முக்தி நிலைக்கு சகஸ்ராரம்

விழிப்படைதலும்,

🔥யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,

🔥ஞானத்தேடலுக்கு மூலாதாரம்

விழிப்படைதலும் காரணமாகும்.

🌹🌹🌹நாதத்தின்

மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு

விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.

மேலும் நாம் தியானத்தில் அமரும் போது

🔥🔥குண்டலினியானது புருவமத்தி அல்லது

சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்

விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது

விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).

குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு

முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்

விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக

அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள

மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து

வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.மேலும் உடலில்

நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக

புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U " நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்

உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்

தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.

சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்

வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்

வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி

சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்

பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம்.

அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக

உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய

உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்

வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு

கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.உடல் அடையாளமாக சாதாரணமாகவே

உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்

புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது

உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்

ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு

உருண்டையாக இருந்துகொண்டு எதையும்

நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு

உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள் இருக்கும் ‘வெளிப்படாத சக்தி’. அதாவது அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்

கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.

ஆம், ‘அசையாத

வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்

அது எழுச்சியுற்று, வெளிப்பட

ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்

உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்

மலைத்துப் போவீர்கள்.

இக்காரணத்தினால்தான்

இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’

குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு நகர

ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.

அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும் இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி

எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்கூட நினைத்திடாத அதிசயங்கள் உங்களுக்குள் நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,

அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள் நிகழ, அனைத்துமே வேறு வகையில்

இயங்கும்.குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்

வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)

இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை.

எங்கோ ஓரிடத்தில் ஒரு

பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை

உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க

முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்

உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க முடியும்.

பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை

நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?

அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று

தெரியாமல் இருந்தாலும், ஒரு

மின்சாதனத்தை

இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,

அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்

குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்

அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்

பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்

பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்

இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்

கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக

இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப்

போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5

பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்

இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்

(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்

பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்பற்றிய

அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போதுஉங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க

முடியும். இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக

சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும்பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி

தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டியஅவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்

சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு

க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத

சக்தியின் மூலத்தோடு தொடர்பு

கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.யோகா செய்வதன் அடிப்படையேஅவர்களுக்குள் ஒரு சமநிலையை

ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.

அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,

எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து

தொடர்பில் இருப்பீர்கள்.

சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்

‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.

யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின் இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க

உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக செயல்முறை என்றாலே உங்களின் உணரும்

திறனைஅதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை

எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே இருக்கிறது.  

வளமுடன் வாழ்க . . .

🔥🔥🔥🔥

இந்த குண்டலினி யோகத்தை தக்க குருவின் துணையுடன் செய்வது நல்லது 

🔥🔥🔥

சரியான முறையில் செய்யவில்லை என்றால் மனநிலை பாதிப்பு ஏற்படும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பயிற்சி செய்யும் போது உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.

ambharish G 

Savithaastro@gmIl.com 

savithaastro.blogspot.com

9790111570


கரணம் கரணங்கள்-11 பற்றி அறிந்து கொள்வோம்

.

ஜோதிடத்தில் முக்கிய அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டு பஞ்ச பூத தத்துவத்தில் இயக்கப்படுகிறது.  இவற்றில் கரணம் திதியில் பாதி. ஒரு திதியின் 12 பாகையில், 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். அதாவது 30 திதிக்கும் 60 கரணங்களாக வரும். அதிலும் கரணம் அவற்றோடு தொடர்புடைய கரண நாதன் முக்கியமானவர். 

மொத்தமாக 11 கரணங்கள் ஆகும். அவற்றில்   சர கரணங்களான பவ, பாலவ, கெளலவ, தைதுல, கரஜை கரணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது. மற்ற கரணங்களான பத்ர(விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன கரணங்கள் அசுப தன்மை பெற்றது. இவற்றில் சர கரணத்தில் உள்ள வணிஜை மற்றும் ஸ்திர கர்ணத்தில் சதுஷ்பாதமும் மத்திம சுப தன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று அவசியம் மற்றும் ஒரு மனிதனின் ஏற்ற தாழ்வு செயலுக்கு கர்ம காரஹன் சனி பகவான் நிலை தேவை. அதனால் தான்  கரணத்தின் கிரஹம் கர்மகாரகன் சனி என்றும், இது காற்று தத்துவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கரணநாதன் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப கரணம் சூட்சுமம் தெரியவில்லை என்றால் மரணதிற்கு நிகரான கெட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பது சிறு கூற்று.

ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது. அது கரணாதிபதி நிலையை பொறுத்து குணம், செயல்கள் மாறுபடும். ஜோதிட சூட்சுமத்தில் ஜாதகருக்கு தெய்வ அருள் பெற, திதியின் பாதியாக உள்ள கரண நாதனை வணங்கினால் நன்று. முக்கியமாக கிரகங்கள், அதிதேவதை மற்றும் அவற்றின் தொடர்புள்ள அனைத்தையும் கொண்டு கரண நாதனை இயக்க வேண்டும். ஒருவருக்கு தோஷம் இருந்தால் அந்த தோஷம் பெற்ற வீட்டை கரண நாதன் சுப நிலையில் பார்த்தால் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப, அவருக்கு  தோஷத்தைக் குறைக்கும் என்பது விதி. அது அசுப நிலையிலிருந்தால் பலன் பெற கொஞ்சம் கடினம். 

இன்னும் அடுத்த கட்டத்தில் ஆராய்ந்தால், கரணத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும், கரஜை கரணத்தில் வாழ்க்கை துவங்குது நன்று, இந்த கரண தம்பதியர்கள்  ஒற்றுமை பலம் பெரும். அசுப கரணத்தில் வாழ்க்கையை துவங்கக்கூடாது, குழந்தைப் பாக்கியம் பெற, கரணாதிபதி மூலம் பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாலும் சுப நிலையில் உள்ள கரண நாதன் பார்வை பெற்றால் புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சோதனை குழாய் முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

ஒவ்வொருவருக்கும் எது சரியான தொழில், அது வெற்றியின் உச்சத்தை அடையமுடியுமா என்று பார்க்க இது ஒரு சூட்சும விதி. அதுவும் முக்கியமாக ஜாதகர் எந்த காரணத்தில் பிறந்தாரோ அந்த கரணத்துக்குரிய மிருகத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக வன்னிசை கரணம் பிறந்தவர்கள் மாட்டு இறைச்சி  மற்றும் தோல் வியாபாரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது அவரவர் வாழ்க்கையில் அதிக பாதிப்பை தரவல்லது. ஜாதகரின் கரண நாதனை  வழிபாடு செய்தால் வெற்றிக்கு சரியான வழியை படம் போட்டு காட்டிவிடும். ஆனால் கரணநாதன் அவயோகராகவோ, மறைவோ பெறக் கூடாது. கீழே கூறப்படும் கரணத்தின் குணநலன்கள் அனைத்தும் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றினை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். ஜாதகக் கட்டத்தில் கரண நாதன் நிலை பொறுத்து பலன் மாறுபடும். ஒவ்வொரு கரணங்களின் கிரகம், குணம், விலங்கு மற்றும் அவற்றின் வழிப்பாட்டு  பரிகார முறைகளை பார்ப்போம்.

1.பவ கரணம்.

பவ கரணத்தில் பிறந்தவர் பயப்படாதவர், சுகவாசி, வேந்தர்களிடம் வெகுமதி பெறுபவன், ஜோதிட சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளவன், வறுமையாளன், அறிவாளி, அழகன், தன்னம்பிக்கை, தைரியம் மிக்கவன், மிருதுவான தலைமுடியை உடையவன். இந்த கரணம் வீட்டில் திருமண சுப நிகழ்ச்சி செய்ய, நீண்ட தூரப் பயணம் செய்ய, அரசு மற்றும் உயர் பதவி பெற வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த கரணம். இக்கரணத்திற்கான விலங்கினம் சிங்கம். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் போல் குணநலன் கொண்டவராகவும், ஆளுமை தலைவராகவும் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதற்கு நம் தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களை உதாரணமாக சொல்லலாம்.

பவகரண அதிபதி செவ்வாய் ஆவார். அவர் சுப தன்மையுடன் எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த பாவ தொடர்புகொண்டு தொழில் செய்யலாம். பொதுவாக இவர்கள் வீரமிக்க ராணுவம் மற்றும் காவல் துறை, சமையல் துறை, நெருப்பு சம்பந்த தொழில், செங்கல் சூளை வியாபாரம், நில விற்பனை, மருத்துவம், ஆராய்ச்சி முக்கியமாக ஜோதிட ஆராய்ச்சி, நில விற்பனை, கனரக ஓட்டுநர், மற்றும் கடினமான அனைத்து துறையையும் விரும்பி ஏற்பார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் சிங்க ரூபினி அம்பாள் வழிபாடு. கோவில் குடமுழுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது நன்று. இரத்த தானம் சிறந்த பலன் தரும்.

2.பாலவ கரணம் .

இந்த கரணத்தில் பிறந்தவர் நித்தமும் தான தருமம் செய்யும் கொடையாளி, மிகுதியான இன்ப நுகர்வுகளை அனுபவிப்பான், பெரும் பணக்காரன், அழகன், வெகு சாதாரணமான  அல்லது சிறு தொழிலையோ செய்வான், பெண்ணாசை மிக்கவர், மேலான பண்புகளை கொண்டவர், உறவினர் மீது அதிக அன்பு ஆசை கொண்டவர் என்று ஜோதிட நூலில் கூறப்படுகிறது. இந்த கரணத்தில் கோவில் திருவிழா மற்றும் அனைத்து சுப காரியங்கள் செய்யலாம். இவர்களின் மிருகம் புலி. இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வேண்டிய நேரத்தில் யோசித்து, பதுங்கி பாயும் புலியாக வேலை செய்வார்கள்.

இவர்களின் கரண நாதன் ராகு பகவான். ஜாதக கட்டத்தில் ராகுவுடன் சேர்ந்த கிரகம் பாவம் பலம் கொண்டு இருந்தால் பல்வேறு தொழில்கள் செய்து உயர்வார். பொதுவாக இவர்கள் விமானம் கப்பல் துறையில் வேலை, கணினி மின்னணுவியல், அறுவை சிகிச்சை நிபுணர், தகவல் தொடர்பு துறை, நிதித் துறை, மல்யுத்த வீரர், சிஐடி, உளவுத்துறை, புதிய கண்டுபிடிப்பு, பல்வேறு புதிய தொழில்கள் செய்ய ஆர்வம் மிக்கவர், நிகழ்வு மேலாண்மை (event) தொடர்பு உடைய வேலை இவர்களுக்கு பிடிக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரங்கள்: புலித்தோல் உடுத்திய சிவன், ஐயப்பன், திருப்பட்டூர் பிரம்மா, கிராம தேவதை, குலத்தைக் காக்கும் காவல் தெய்வத்தை வணங்குவது நன்று. இறைவனுக்கு சந்தனக்காப்பு செய்வது நன்று. இவர்கள் தினமும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது நன்று.

3.கௌலவ கரணம் .

கௌலவ கரணத்தில் பிறந்தவன் மன்னவர்களின் மனதிற்கு பிடித்தமானவன், வாழ்வியல் ஒழுக்கங்களை தவறாது கடைப்பிடிப்பான், மேன்மைமிக்க பெற்றோர் மீது மட்டற்ற அன்பு, மதிப்பு மரியாதை மிக்கவன். நிலபுலன்களை அதிகம் சேர்த்துக்கொள்வான். அறிவாளியாக, பல்வேறு  செயல்திறன் கொண்டவராக, யானைகளையும் குதிரைகளையும், தனக்கு வேண்டிய பல்வேறு சொகுசு வாகனங்களையும் சொந்தமாக வைத்திருப்பான். இந்த கரணத்தில் சில செய்ய முடியாத விஷயங்கள் துவங்க, சேமிப்பு தொடங்க சிறந்த சுப கரணம். இக்கரணத்தின் மிருகம் பன்றி ஆகும். 

கௌலவ கரணத்தில் அதிபதி சனி நல்ல நிலையில் இருந்தால் எந்த தொழில் செய்தாலும் பிரகாசமாக திகழ்வார். முக்கியமாக மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், அரசியல், நம்பகமிக்க துணை அதிகாரியாக, சொல்லிக்கொடுக்கும் ஆசானாக, ஒழுக்கம்,  சட்டம், நீதி சார்ந்த துறை, தார் / கருங்கற்கள் வியாபாரம், கட்டுமான பணி, பெட்ரோல், நிலக்கரி  சார்ந்த துறை, நான்காம் அதிபதி தொடர்பு கொண்டால் பழைய வீடு, வாகனம் கொண்டு பொருள் ஈட்டுவார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரங்கள்: பூவராக பெருமாள், வராகர், தஞ்சை மகா வராகி அம்மன், ஸ்ரீவாஞ்சியம், திருநள்ளாறு சனீஸ்வரன், சூரியன் ஒளி பெற்ற கோவில்களுக்குச் சென்று வணங்குவது நன்று. முடிந்தளவுக்கு ஏழை தொழிலாளிக்கு உணவு, உடை, செருப்பு வாங்கி கொடுப்பது நன்று.

4.தைதுல கரணம் .

தைதுல கரணத்தில் பிறந்தவர்கள் வேந்தர்களிடத்து வேலை பார்ப்பவர்கள், பணக்காரனாக, இளகிய மனம், பெருஞ் சுகவாசி, முரடனாக, மனஉறுதி மிக்கவர், கஞ்சன், கடின உழைப்பை மட்டும் நம்புபவன், வசீகரமானவர், தர்ம நெறியிலிருந்து பிறழ்ந்து நடப்பான். பெண்களாக இருந்தால் ஆண்களை மயக்கும் வல்லமை மிக்கவர்.  அதுவே ஆண்களாக இருந்தால், விஷம் போன்ற தீய எண்ணங்கள் நிறைந்த பெண்ணிடம் மோகம் கொண்டிருப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கரணத்தில் புதிய பொருள்களை வாங்குவது, விற்பது, கிணறு வெட்டுவது, பெண்கள் செய்யும் புதிய முயற்சிக்கு ஏற்ற நல்ல நாள். இவர்களின் மிருகம் கழுதை ஆகும்.

இவர்களின் கரணாதிபதி சுக்கிரன் ஆவார்.  சுக்கிரன் பலம் பெற்ற தைதுல கரணம் பிறந்தவர்களை தங்களுடன் வைத்திருந்தால் உயர்வு பெறுவார்கள். முக்கியமாக இவர்களால் வாழ்க்கையில் மற்றும் புதிய முயற்சியில் வெற்றியும் பொருளும் ஈட்டுவார். இவர்களின் பொதுவான தொழில் கலைத் துறை, பேஷன் டிசைனிங், திரைத் துறை, அழகு நிலையம், கட்டடத் தொழில், வைர வியாபாரம், டிராவல் ஏஜென்சி, நகை ஜவுளிக் கடை, உணவகம் என்று பல்வேறு தொழிலில் ஈடுபாடு இருக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்:  ஸ்ரீரெங்கநாதன், மஹாலக்ஷ்மி, ஜேஷ்டா தேவி வழிபாடு. நலிவுற்ற கலைத் துறையினருக்கு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் கொடுத்து உதவுதல் நன்று.

5.கரஜை கரணம் .

கரஜை கரணத்தில் பிறந்தவர்கள்  விலைமகள் மீது மோகம், அரசாரல் அதிக ஆதாயம் பெறுபவன். தன் விரோதிகளைத் தோற்கடித்து துன்புற வைக்கும் ஆற்றல் கொண்டவர், மேகத்தைப் போன்ற கொடையாளி. கரசை கரணத்தில் பூமி பூஜை செய்வது, நிலம் வாங்குவது, விவசாயம் செய்வது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம் செய்வது நன்று. 

இந்த கரணத்தின் கரணநாதன் சந்திரன் ஆவார். இவர்களுக்கு வேத வித்துவான், பொருளாதார நிபுணர்கள், வங்கி மேலாளர், வாக்கு பலிதம் ஜோதிட வித்துவான், குழந்தை மருத்துவர் முக்கியமாக டெஸ்ட் டியூப் /புதிய மருத்துவ சிகிச்சை துறையில் இருப்பார்கள், நீதித் துறை, கோவில் தர்ம கர்த்தா, மத தொடர்பு கொண்ட அனைத்து  துறைகளில் இருப்பார்கள். கரஜை கரணம் பலம் முக்கியம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: பிள்ளையார்பட்டி, திருப்பதி, இந்திரன், விநாயகர் வழிபாடு. யானைக்கு உணவு வழங்குவது, அவற்றிடம் ஆசீர்வாதம் வாங்குவது. குழந்தைகளுக்கு யானை பொம்மை வாங்கி தருவது நன்று.
  
6.வணிஜை கரணம் .

வணிஜை கரணத்தில் பிறந்தவர்கள் கடுமையான சுபாவம் கொண்டவர்கள், தன்னை தேடி வந்தடைந்தவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள், கரும்பை போல இனிய மொழி பேசுவான், பெண் பித்தன், உள்ளதை உள்ளபடி சொல்லாமல் இல்லாததும் பொல்லாததுமாக இரட்டித்து பொய் சொல்லுவார். சமூக ஒழுக்கத்திற்கு மாறான சிந்தனை உடையவர், கற்பனையாக பேசுவதில் வல்லவர். இவர்களுக்கு உடலில் குறைபாடு இருந்துகொண்டே இருக்கும் அல்லது வாழ்வில் குறைபாடு இருக்கும் என்று நூலில் கூறப்படுகிறது. இவர்கள் மிருகம் காளை/பசு ஆகும். 

வணிஜை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கரணநாதன் சூரியன். இவர்கள் புகழ் கொடுக்கும் துறைகள், கலைத் துறை, அரசியல், அதிகாரம் மிக்க துறை, தந்தை தொழில், கோதுமை வியாபாரம், அரசு தொடர்பான கம்பெனி, மருத்துவமனை, புகழ் உச்சியில் உள்ள தொழில் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: சிவலிங்கம், நந்திஸ்வரன், சிதைந்த பழம் பெரும் கோவிலுக்குப் பிரதோஷ காலங்களில் நைவேத்திய / அபிஷேக பொருள்கள், நல்லெண்ணெய்,  மலர் மாலைகள் வாங்கி  கொடுப்பது நன்று. சாலையோர மக்களுக்கு கம்பளி, போர்வை தருவது நன்மை பைக்கும்.

7.பத்ர கரணம் .

இந்த கரணத்தில் பிறந்தவர் வலிமை மிக்கவன், சுந்தரன், பேச்சில் மனதில் சஞ்சலம், சிக்கனம் கடைப்பிடிப்பான், பாவ செயல் செய்வார்கள், கொடியவன், ஆண்கள் கெடுதல் மற்றும் ஒழுக்கம் தவறி கேடுக்கட்ட செயல் செய்ய நடக்க தோணும், விரக்தியுள்ளவன், செயல் திறன் இல்லாதவன், ஆளுக்கேற்றபடி பேசும் திறன் கொண்டவர். இவற்றின் பறவை கோழி, சேவல் ஆகும். இவர்கள் முடிந்தவரை கோழி இறைச்சி உண்ணக்கூடாது. கோழி குணம் கொண்டு இவர்கள் ஒரு செயலை பிரித்துப் பார்த்து அலசும் தன்மை கொண்டவர். இதனால் ஒரு சிலர் ஆராய்ச்சி துறையில் இருப்பார்.

பத்ர கரண பகவான் கேது ஆவார். இவர் ஒரு ஆன்மிகவாதியாக, மருத்துவம், ருத்ராட்சம் மற்றும் பூஜை பொருள் விற்பனை செய்பவராக, மாந்திரீகம், மதப்பிரசாரம், அறிவியல் ஆராய்ச்சி, மருந்தகம், விஷ தன்மை முறிக்கும் நாட்டு வைத்தியராக, வக்கீல் மற்றும் சட்ட தொடர்பு உடைய துறையில் வேலை செய்வது நன்று.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள் /பரிகாரங்கள்: உங்களால் முடிந்த அளவு மக்களுக்கு நல்ல நீர், மோர் தருவது மற்றும் பறவைக்கு தானியம் தருவது நன்று. ஹனுமான், திருச்செந்தூர் முருகர், மற்றும் நீர் நிலை உள்ள கோவிலுக்குச் செல்வது நல்ல பலனைக் கொடுக்கும். 

8.சகுனி கரணம்

அன்னம் போல் அழகாய் நடக்கும் சகுனி கரணத்தில் பெரும் கௌரவம் மிக்க பணக்காரன், புத்திசாலி, மக்கள் பலமிக்கவர், தானிய சம்பத்துக்கள் கொண்டவன். மந்தம், முன்கோவம், பிரச்னை இருக்கும் இடத்தில் தீர்வு கொடுப்பார். இவர்களின் பறவை சனியின் வாகனம் காகம்.

இவர்களுக்கு சனி கிரகம் துணை நிற்கும். கறுப்பு நிறம் கொண்டவர். இவர்கள் உழைப்புக்கு ஏற்ப உயர்வார்கள். கூட்டுத் தொழில், இறைச்சிக் கடை, பாரம் தூக்குதல், சர்வர், சலூன், எண்ணெய் வியாபாரம், இரும்பு வியாபாரம், கட்டடம் கட்டுபவராக இருப்பார்கள், விவசாயம், தொண்டு நிறுவனம், மரவேலை, மண்பாண்டத் தொழில், சொந்த பந்தங்களோடு உழைக்க விரும்புவார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்: திருநள்ளாறு சனீஸ்வர வழிபாடு அவசியம். காகத்திற்கு உணவு, ஏழை மற்றும் உடல் ஊனமிக்கவர்க்கு  உதவுதல் நன்று.

9.சதுஷ்பாத கரணம் 

சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் முன்பு பேசிய வார்த்தையைப் பின்பு மாற்றிப் பேசுபவர்கள், தரித்திரம் கொஞ்சம் இருக்கும், சிலர் விலை மகளிர் மீது அளவு கடந்த ஆசை, இழிவானவன், ஆத்திரமிக்கவர், தீயவர்,  தத்துவம் மற்றும் சாஸ்திரத்தில்  ஆர்வம் கொண்டவர் என்று நூலில் கூறப்பட்டது. சிலருக்கு ஆரோக்கியம் குறைவு, வறுமை காரணத்தால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினம். இந்த கரணத்தின்போது தானம், மந்திரம் ஓதுதல் நன்று. இந்த கரணத்தில் சுப காரியம் தவிர்ப்பது நல்லது. சதுஷ்பாத கரணத்தின் வீட்டுவிலங்கு நாய்.

இந்த கரணத்தின் கிரகம் குரு ஆவார். இவர்கள் குறைவான வருமானத்திற்கு கடுமையான உழைப்பார்கள். வங்கி மேலாளர், பொருளாதார வல்லுநர், வழக்குரைஞர், நீதிபதி, தர்மகர்த்தா, பேராசிரியர், ஜோதிட தொழில், பொற்கொல்லர், கால்நடை வளர்ப்பு, ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், வைதீகம், ஆன்மிக தொடர்பான புத்தகம், பூஜை பொருள் விற்பனை செய்வது நன்று. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்:  ஆலங்குடி, பைரவர் வழிபாடு, மிருகத்திற்கு உணவு அளிப்பது, குரு மற்றும்  சித்தர்களை  நமஸ்கரிப்பது மிகுந்த நற்பலனைத்தரும்.

10. நாகவ கரணம்

நாகவத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி நோயின் பிணிக்கு உள்ளாவர்கள் ஆத்திரக்காரன், உணர்ச்சியினால் முன்கோபம், பெண் பித்தன், தெளிவற்ற புத்தியுள்ளவன். சிறந்த உணவு வகைகளை உண்பான். துன்பத்தை எதிர்த்து வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர். இவருக்குரிய ஊர்வனம் பாம்பு.

இவர்களின் கரணநாதன் ராகு ஆவார். நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பல்வேறு தொழில் செய்து பொருள் ஈட்டுவார் தொழில்நுட்ப அறிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் தொடர்புடைய தொழில்கள், துப்பறியும் முகவர், ஸ்கேன் சென்டர், மதுபான கடை, உரம் தயாரிக்கும் நிறுவனம், விமான துறை, வேதியியல் ரசாயனங்கள்/ மருந்து தயாரித்தல், கமிஷன் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்: சர்ப்ப வாகனம் கொண்ட அனைத்து தெய்வங்கள், நாகத்தம்மன்,  திருவேற்காடு கருமாரி, திருமால், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா. பல்வேறு மதத்தினருக்கு ஈமச்சடங்கிற்கு தங்களால் முடிந்த அளவு உதவுதல் நன்று.

11. கிம்ஸ்துக்ன கரணம்

கிம்ஸ்துகினத்தில் பிறந்தவர்கள் சண்டை இருந்து கொண்டே இருக்கும், பெரியவர்கள், மாதா பிதாக்களுடன் அன்பு பாராட்டி மகிழ்வான். ஒரு சிலர் பெரும் காமாந்துக்காரன், விலைமகளிடம் விருப்பம் கொண்டு களிப்பான். மேன்மையுடையவன் உலகியல் வாழ்க்கையின் நடைமுறையெல்லாம் அறிந்திருப்பான், யோக சாஸ்திரப்பயிற்சி உடையவர். நண்பர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கரணத்தில் பிறந்தவர்க்கு எதாவது ஆவண பிரச்சனை இருக்கும்.  இவர்களின் ஊர்வன விலங்கு  புழு, அட்டை ஆகும் 

இந்த கரணத்தில் ஆதிக்கம் செலுத்துபவர் புதன் பகவான். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் நோயைக் குணப்படுத்தும் வைத்தியர், பட்டு வளர்த்தல், மூலிகை மருத்துவர், கலை, கணித மேதை, ஸ்டேஷனரி கடை, அச்சு பொறியாளர்,  ஜோதிடம், பத்திரிகை/எழுத்து /தகவல் தொடர்பு துறை, விளம்பரம், தரகு வேலை, பங்குச் சந்தை என்று தொழில் உயர்வைக் கொடுக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்:  வைதீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் தன்வந்தரி, குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி வழிபாடு. மனநிலை குன்றியவர், திருநங்கைக்கு உதவுவது நன்று.

கரணநாதனை எப்படிச் செயல்படுத்துவது:ஒவ்வொருவருக்கும் ஒரு கரண நாதன் உண்டு, அந்த கரணநாதன் நல்ல நிலையில் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை ஜாதகரின் கரணநாதன் சரியில்லை என்றால் அவரை நன்கு செயல்பட தானம் மற்றும் அதற்குரிய பரிகாரம் செய்து,  துர் செயல் வராமல் தடுக்க முடியும். கரணநாதன் நன்றாக பலம் பெற்றால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்பது விதி. கரணம் பற்றிய மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அவரவர் ஜாதகத்தில் கரணநாதன் ஆட்சி உச்சம் பெற்று பலமாக இருந்து, அவரவர் தொழிலில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். கரணத்துக்கு உரிய மிருகம், கண்ணில் படும்மாதிரி படங்களாகவோ, உருவமாகவோ, பொம்மையாக அல்லது அந்த மிருகத்திற்கு உணவு கொடுப்பதன் மூலமாக கரணநாதனை செயல்படுத்தலாம். எடுத்துக்காட்டாக வீட்டு விலங்கு என்றால் அதனை துன்ப படுத்தாமல் அதற்கு உணவு கொடுக்கலாம். சுபம்.
ambharish G 
Savithaastro@gmIl.com 
savithaastro.blogspot.com
9790111570

ஐந்து தியான முறைகள்

ஐந்து தியான
முறைகளைப் பற்றி பார்ப்போமா.
கேசரி, பூசரி, மத்திய லட்சணம்,
ஷண்முகீ, சாம்பவி . இது ஏதோ
இனிப்பு வகைகளின் பெயரோ
அல்லது இடத்தின் பெயரோ,
நடிகையின் பெயரோ அல்ல
இதுதான் அந்த தியான
முறைகளின் பெயர்.
1 - கேசரி - யோகி தனது இரு
கண்களின் கருவிழிகளை நடுவில்
நிறுத்தி, அசையாமல் மேல்
நோக்கி, அருள் வெளியாகிய
சிதம்பரத்தை மனதில் நிறுத்தி
பார்த்துக் கொண்டிருப்பது.
2- பூசரி - இதில் யோகியானவர்
அசைக்காமல் இருகண்களின்
கருவிழிகளால் மூக்கின்
நுனியைப் பார்த்துக்
கொண்டிருப்பது.
3 - மத்திய லட்சணம் -
இருகண்களையும்
அரைப்பார்வையாக மூடிக்
கொண்டு, அசையாமல்
கருவிழிகளால் மூக்கின்
மத்தியைப் பார்த்துக்
கொண்டிருப்பது.
4 - ஷண்முகீ - இதில்
யோகியானவர் தன் மூக்கு, கண்கள்,
வாய்,காது இவற்றை
கைவிரல்களால் மூடிக்
கொண்டு. வெளிப்
பார்வையையும் மனதையும்
உள்முகமாகத் திருப்பி,
இருகருவிழிகளையும்
அசையாமல் நடுவில் புருவ
மத்தியில் நிறுத்தி பார்க்க
வேண்டும்.
5 - சாம்பவி - சிதாகாசம் என்கிற
சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி
இரு கண்களையும் மூடாமல்
கருவிழிகளை மேல் நோக்கி
பார்த்தபடி அசையாமல்
சொக்கியிருப்பது. இதில்
எல்லாமே நாம் உள்ளிருந்துதான்
தியானம் செய்கிறோம் என்றாலும்
மனமானது வெளியில்
இருப்பதாக பாவித்துக் கொள்ள
வேண்டும். எல்லாமே பழகப்பழக
கைகூடும்.
இந்த சகஸ்ராரமே
பிந்துஸ்தானம்.இதையே
தேவலோகம் என்று சித்தர்கள்
மறைபொருளாகக் கூறுவார்கள்.
இங்குதான் சோம்பானம் என்னும்
தேவாமிர்தம் சுரக்கின்றது.
கோவில்களில் தீர்த்தம்
வழங்கப்படுவது இது சுரப்பதை
நினைவில் கொள்ளவே. பெரிய
கோவில்களில் ஏழு பிரகாரங்கள்
வைத்துக் கட்டப்படுவது, மனித
உடலில் உள்ள முக்கியமான ஏழு
ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவே.
Ambharish 
Savithaastro@gmIl.com
savithaastro.blogspot.com
9790111570