Wednesday, March 26, 2025

குருவைப் பற்றி

" குரு" பகவான் பற்றி சற்று வித்தியாசமான தகவல்கள் ஜோதிஷ கௌமுதி என்னும் மலையாள கிரந்த சுவடியில் உள்ளது இது உங்களுக்கு சரிவருகிறதா என்று பாருங்கள் கலியுகத்தில் சுக்கிரனுக்கு மட்டுமே அதிக முக்கியத் துவம் என்று கூறுகிறது இந்நூல் . குரு உச்சமாக இருப்பவன்  எளிமையாக இருப்பான் ஆனால் தன்மானத்துடன் இருப்பான் .பல சிரமங்கள் பட்டாலும் பிறரிடம் கையேந்த மாட்டான் .சுக்கிரன் கலியில்  எந்த இடத்தில் ஜாதகத்தில் இருப்பினும் நன்மையே செய்வார் ."எட்டில் சுக்கிரன் கொட்டி கொடுப்பான்" என்பது பழமொழி.உண்மையாக பரிகாரம்

 செய்யும் சாமியாருக்கு குரு நல்ல இடத்தில் இருக்கும் நாம் அவரை நம்ப மறுப் போம்.ஆனால் சுக்கிரன் நன்கு இருந்து சுகபோகங்களை  அனுபவிக்கும் கார்ப்பரேட் சாமியார்களை மட்டுமே நாம் நம்புவோம் .இது கலியுகத்தில் எழுதப்படாத  விதி .அசுர குரு சுக்கிரன் அள்ளித் தரும் யோகங்கள் அளவே இல்லை அவரையும் நாம் குறைவாக மதிப்பீடு செய்ய கூடாது. இனி குரு சம்பந்தமான  வித்தியாசமான கருத்துக்களை காண்போம் .இவை பலர் வாழ்வில் உண்மையாகவும் அமைந்து உள்ளன .விவரம் இனி  காண்போம்.


★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் குரு பகவானைப் பற்றி தவறான புரிதலும் முரண்பட்ட தகவல்களும் மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன.

உண்மையில் குருபகவான் நமது ஜாதகத்தில் எவ்வாறு வேலை செய்வார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


★குருபகவான் யாரென்றால் தேவகுரு பிரகஸ்பதி அவர்.தேவகுரு பிரகஸ்பதி என்றைக்குமே அவர் தனக்கென்று எதையும் ஆடம்பரமாக வைத்துக் கொள்ள மாட்டார்.


★என்றைக்குமே குருபகவான் அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பாரே தவிர  தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள அவர் விரும்பமாட்டார்.


★அதே போன்று நமது ஜாதகத்தில் குரு பகவான் எந்த பாவத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த பாவம் சார்ந்த விஷயமும் மற்றும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயமும் என்றைக்குமே நம்மால் நமக்காக அனுபவிக்கவே முடியாது.அடுத்தவர்களுக்கு தான் அது பயன்படும்.


★குரு இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்கள் என்றைக்குமே நமக்காக அதனை பயன்படுத்த முடியாது மீறி நமக்காக நம்முடைய சுய நலத்திற்காக அந்த பாவம் சார்ந்து நாம் அனுபவிக்க நினைத்தால் குருபகவான் அனைத்தையும் அழித்து விடுவார்.


★அதாவது குரு எந்த பாவத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடுத்தவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நாம் உதவுகிறோமோ அதன் மூலம் நம்மால் அந்த பாவத்தை அனுபவிக்க முடியும்.


★மேலும் நாம் முன்ஜென்மத்தில் எந்த பாவம் சார்ந்து நாம் தர்மத்தையும் நியாயத்தையும் ஒழுங்காகக் கடைப் பிடிக்க வில்லையோ அந்த பாவம் அனைத்தும் இந்த ஜென்மத்தில் குரு பகவானின் controlக்கு சென்றுவிடும்.


★இந்த ஜென்மத்தில் நமது ஜாதகத்தில் குரு பகவான் எந்த பாவத்தில் இருக்கிறாரோ மற்றும் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த பாவம் சார்ந்த விஷயத்திலும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்திலும் நமக்கு தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றமும் தான் அடைவோம்.


★இந்த சூட்சமம் நமது லக்னத்திலிருந்து குரு பகவான் எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறதோ அதற்கும் இது பொருந்தும்.குரு பார்வைக்கு இந்த சூட்சுமம் பொருந்தாது.


★இப்போது நமது ஜாதகத்தில் குரு பகவான் எந்த எந்த பாவத்தில் இருந்தால் என்ன ஆகும் என்பதையும் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் என்ன ஆகும் என்பதையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


★(லக்னத்தில் "குரு")


★லக்னத்தில் குரு இருந்தால் இவர்களே மிகப்பெரிய தர்மசங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றத்தையும் தங்களுடைய வாழ்வில் நிறைய அனுபவித்து இருப்பார்கள்.


★மேலும் இவர்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு ஒழுங்காகத் திதி கொடுத்து இருக்க மாட்டார்கள்.

முதலில் இவர்கள் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்க வேண்டும் கொடுத்தால் தான் இவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.


★(2ம் பாவத்தில் "குரு")


★இரண்டாம் பாவத்தில் குரு இருந்தால் இவர்களின் குடும்பம் மூலமாக  தர்மம் சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் இவர்கள் கண்டிப்பாக அடைவார்கள்.


★இவர்களால் என்றைக்குமே தனக்கு வரக்கூடிய வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்தப் பணத்தை அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும்.


★(3ம் பாவத்தில் "குரு")


★மூன்றாம் பாவத்தில் குரு இருந்தால் இளைய சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களின் மூலமாக தர்மசங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றத்தையும் அடைவார்கள்.


★இவர்களைச் சார்ந்து என்றைக்குமே இவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.


★(4ம் பாவத்தில் "குரு")


★நான்காம் பாவத்தில் குரு இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு தாய்வழி உறவுகள் இது சார்ந்த விஷயங்களின் மூலமாக இவர்களுக்கு தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் அடைவார்கள்.


★ஒன்று வீடு வாகனம் சொத்து இது இல்லாமல் போவது அல்லது இதனை வாங்குவதற்கு தாமதப்படுத்துவது அல்லது இது அனைத்தும் இருந்தும் அதன் மூலமாக பிரச்சினைகளை ஏற்படுத்துவது இதுபோன்ற பிரச்சினைகள் நான்காம் பாவத்தில் குரு  இருந்தால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.


★மேலும் இது சார்ந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட ஜாதகர்  முன்கூட்டியே கவனமாக இருந்தால் ஒரளவுக்கு தப்பிக்க இயலும்.


★(5ம் பாவத்தில் "குரு")


★ஐந்தாம் பாவத்தில் குரு இருந்தால் குழந்தைகள் மூலமாகவும் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலமாகவும்   தர்ம சங்கடங்களையும் பிரச்சனைகளையும் ஏமாற்றத்தையும்

அடைவார்கள்.


★மேலும் இவர்கள் என்றைக்குமே share market, stock market, trading இது போன்ற விஷயங்களில் இவர்கள் பணத்தை முதலீடு செய்யக் கூடாது மீறி செய்தார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.


★(6ம் பாவத்தில் "குரு")


★ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் கடன்பிரச்சினை, வம்பு,வழக்கு, கோர்ட் ,கேஸ்,உத்தியோகம்(job) இதன் மூலமாக தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களையும் அடைவார்கள்.


★மேலும் ஆறாம் பாவத்தில் குரு இருப்பவர்களெல்லாம் உத்தியோகத்தின்(job) மூலம் வரும் வருமானத்தை என்றைக்குமே இவர்களால் தங்களுக்காக தங்களின் விருப்பத்திற்காக அந்த பணத்தை அனுபவிக்கவே முடியாது.


★மேலும் இவர்களுக்கு உத்தியோகத்தின் மூலம் தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றமும் ஏற்படும்.ஒன்று உத்தியோகம் கிடைக்காமல் இருப்பது அல்லது கிடைத்த உத்தியோகத்தில் நிலைக்காமல் இருப்பது.


★ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் குழந்தைகள் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு கோர்ட் கேசு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.


★(7ம் பாவத்தில் "குரு")


★ஏழாம் பாவத்தில் குரு இருந்தால் திருமண வாழ்க்கை மற்றும் partnership business, lover, girl friend இவர்களின் மூலமாக தர்ம சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் அடைய நேரிடும் 


★இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருந்தால் ஓரளவுக்கு பிரச்சினைகளை சமாளிக்க இயலும்.


★மேலும் ஏழாம் பாவத்தில் குரு இருப்பவர்கள் எல்லாம் கூட்டு தொழில் செய்ய வேண்டாம்.

மேற்கொண்டவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினை இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.


★(8ம் பாவத்தில் "குரு")


★குரு எட்டாம் பாவத்தில் இருந்தால்

ஆணாக இருந்தால் மனைவியின் குடும்பம் மூலமாகவும் பெண்ணாக இருந்தால் கணவன் குடும்பம் மூலமாகவும் இவர்களுக்கு தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது சற்று கவனமாக இருக்கவும்.


★PF pension retirement Life Insurance life 

இது அனைத்தும் இவர்கள் பெயரில் இருந்தால் இதன் மூலமாக தர்மசங்கடங்களும் பிரச்சினைகளும் ஏமாற்றங்களும் அடைய நேரிடும்.


★இவர்களின் பெயரில் இது அனைத்தும் இருந்தால் அந்தப் பணம் இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக என்றைக்குமே அனுபவிக்க முடியாமல் போய்விடும்.


★மேற்கொண்டவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினை இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.


★(9ம் பாவத்தில் "குரு")


★குரு ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தந்தை மூலமாகவும் தந்தைவழி குடும்பத்தின் மூலமாகவும் தந்தைவழி சொத்துக்கள் மூலமாகவும்  தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களையும் அடைவார்கள்.


★மேலும் இவர்களுக்கு தொலைதூரப் பயணம்(வெளிநாட்டு பயணம்) மற்றும்   உயர்கல்வி(higher education) இது சார்ந்த விஷயங்கள் மூலமாக தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களையும் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.


★(10ம் பாவத்தில் "குரு")


★குரு பத்தாம் பாவத்தில் இருந்தால் தொழில் மூலமாக தர்ம சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் கண்டிப்பாக சந்திக்க நேரிடும்.


★பத்தாம் பாவத்தில் குரு இருப்பவர்களுக்கெல்லாம் என்றைக்குமே இவர்களால் தொழில் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் விருப்பத்திற்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்த பணத்தை அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும் இவர்களுக்கு பயன்படாது.


★(11ம் பாவத்தில் "குரு")


★குரு பதினோராம் பாவத்தில் இருந்தால் மூத்த சகோதரர்கள் மூலமாகவும் அல்லது சித்தப்பா மூலமாகவும் தர்மசங்கடங்களையும் பிரச்சனைகளையும் ஏமாற்றத்தையும் 

சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இவர்களைச் சார்ந்து இவர்கள் சற்று கவனமாக இருந்து கொள்ளவும்.


★மேலும் இவர்களுக்கு வரக்கூடிய லாபத்தையும் இவர்களுக்காக பயன்படுத்த முடியாது.


★(12ம் பாவத்தில் "குரு")


★குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் அயன சயன போகம் காதல் அல்லது காமம் சார்ந்த விஷயங்கள் மற்றும்  வெளிநாட்டு வாழ்க்கை இதன் மூலமாக தர்ம சங்கடங்களையும் பிரச்சனைகளையும் ஏமாற்றங்களையும் அடைவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு மிக அதிகம்.


★மேலும் குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் குழந்தைகள் அல்லது ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் இவற்றின் மூலமாக இவர்களுக்கு விரயச் செலவுகள் என்பது அதிகமாக இருக்கும்.


Ambharish G

Savithaastro@gmIl.com 

savithaastro.blogspot.com

9790111570

No comments:

Post a Comment