அன்பு நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தின் மூலமாக உங்களை தொடர்ப்பு
கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன் .
ஜோதிட சம்பந்தமான சில முக்கிய குறிப்புகளை உங்களுக்கு தெரிவிப்பதின்மூலமாக அவை உங்கள் வாழ்க்கைக்கு
பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை கொள்ளகிறேன் .
இனி விஷயத்திற்கு வருவோம் .
திதி ,வாரம்,நக்ஷத்திரம் ,யோகம் ,கரணம் ,வருடம், மாதம்,இராசி,முக்குணங்கள் ஆகிய 9 பாகங்களும்
ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக உள்ளன .
இவைகளின் பெயர்களையும் ,மற்றும் பயன்களையும் முதலில் காண்போம்.
திதிகள் 30:
பிரதமை
திவிதியை
திருதியை
சதுர்த்தி
பஞ்சமி
ஷஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
த்வாதசி
த்ரயோதசி
சதுர்த்தசி
பௌர்ணமி -- அமாவாஸ்யை
இவைகள் திதிகளின் பெயர்களாகும் . பௌர்ணமி வரையில் வளர்பிறை
அமாவாஸ்யை வரை தேய்பிறையும்ஆகும் .
இனி இவைகளில் சுபகாரியங்களுக்கு ஏற்ற திதிகளை காண்போம் .
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, மற்றும் ஏகாதசி ஆகிய திதிகள்
அனைத்து சுபகாரியங்களுக்கும் ஏற்றதாக உள்ளது .
இந்த நாட்களில் செய்யப்படும் சுபமான செயல்கள் அனைத்தும் பூரணத்துவம்
வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது .
இந்தநாளில் எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் வீண் போகாது .
ஏனெனில் திதிஸ்து ஸ்ரியமாப்னோதி , என்று கூறப்பட்டுள்ளதால்
ஏதாவது ஒரு வகையில் இந்த நாட்கள் நமக்கு வரவுகளை
ஈட்டித்தருதாகவே அமையும் .
அடுத்து நாம் பார்ப்பது சுபகாரியங்களுக்கு தவிர்க்க வேண்டிய திதிகள்.
சதுர்த்தி,ஷஷ்டி,அஷ்டமி,நவமி,த்வாதசி,திரயோதசி,சதுர்த்தசி
ஆகிய
திதிகள் சுபகாரியங்களுக்கு
விலக்க வேண்டும் .
அமாவாஸ்யை
அன்று முன்னோர்களை ப்ரார்த்திப்பதர்க்கும்
பௌர்ணமி அன்று
தெய்வீக பிரார்த்தனைக்கும் மட்டும்
எடுத்துக்கொள்ளவேண்டும்
.
சதுர்த்தசி
ச சதுர்த்தீச்ச ஷஷ்டி ச த்வாதசீ ததா
அஷ்டமி நவமிசைவ
சுபகார்யே விவர்ஜயேத்.
என்று காலப்ரகாசிகையில்
கூறியபடி மேற்க்கண்ட திதிகளில்
முக்கிய சுப
நிகழ்ச்சியையும் முக்கியமான முடிவுகள் எடுப்பதையும்
தவிர்க்கவேண்டும்
அடுத்து நாம்
பார்ப்பது குறிப்ப்பிட்ட திதிகளில் என்ன செய்யலாம்
என்பதை பார்க்கலாம்.
வளர்பிறை
ஆனாலும் தேய்பிறை ஆனாலும் பிரதமை ,ஷஷ்டி ,ஏகாதசி
ஆகிய மூன்று
நாட்களிலும் முதல் முதலில் ஆரம்பிக்கக்கூடிய எந்த
முயற்ச்சியும்
முழுமை அடையாது .ஆகவே இந்த நாட்களில் எந்த
முதல் முயற்சிகளையும்
ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லது .
அஷ்டமி ,தேய்பிறை
துவாதசி ,சதுர்த்தசி ,வளர்பிறை பிரதமை ஆகிய
நாட்களில்
நாம் படிக்கவிரும்பும் ஏதோ ஒரு கல்வியை முதன் முதலில் ஆரம்பிக்கக் கூடாது .
அஷ்டமியிலோதினால்
ஆசானுக்கு ஆகாது ( ஆசிரியருக்கு கெடுதல்)
சிஷ்டருக்கு
பன்னாங்கும் தீதாகும் (அதாவது சதுர்த்தசி திதியில்)
படிக்கக்கூடிய
மாணவர்களுக்கு உபயோகம் இல்லாமல் போகும் .
கெட்ட
உவா வித்தைக்கு நாசம் ( தேய்பிறை துவாதசி ) இந்த நாளில்
ஆரம்பிக்கப்பட்ட
வித்தை நல்ல வழியில் உபயோகப்படாது .
விளங்கு
பிரதமையில் பித்தரும் பேசார் பிறை (வளர்பிறை பிரதமை )
இந்தநாளில்
கற்கக்கூடிய வித்தையானது சாதாரண பாமரரிலிருந்து
உலகத்தை உணர்ந்த ஞானிகள் வரை யாராக இருப்பினும் அவர்களுக்கு பயன்படாது .
ஆகவே இந்தநாட்களில்
எந்த ஒரு புதிய கல்வி முறையையும் படிக்க ஆரம்பிக்காதீர்கள்.
திருதியை
பஞ்சமி சப்தமி ஆகிய திதிகளில், புதிய நகைகள் வாங்கவும்
புதிய தொழில்கள்
ஆரம்பிக்கவும் ,ஆடை ஆபரணங்களை வாங்கவும்
வீடுகட்ட
ஆரம்பிக்கவும் , தொழில்ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்கவும்
வெகுகாலமாக
முழுமை அடையாத காரியங்களை திரும்பவும் முயற்சி
செய்து முடிக்கவும்
மிகவும் பலமான நல்ல நாளாகும் .
வளர்பிறை
அஷ்டமி , பஞ்சமி , தசமி ,பௌர்ணமி , அமாவாசை ஆகிய
நாட்களில்,
முக்கியமான தெய்வ வழிபாடுகள் நடத்தவும் , முக்கியமான பரிகார ஹோமங்கள் செய்யவும் ,
பித்ரு தோஷ நிவர்த்திகளை செய்யவும் மிகுந்த சக்தி வாய்ந்த நாட்களாகும் ,
ஆகவே அன்பர்கள்
இந்த நாட்களை அனுசரித்து அவரவருக்கு தகுந்த
செயல்களுக்கு
தகுந்தாற்போல் இந்த நாட்களை தேர்ந்து எடுத்துக்
கொள்ளவும்
.
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056__9790111570
.
No comments:
Post a Comment