Friday, November 20, 2020

காதல்திருமணத்தின் காரணங்கள்

 "காதலுக்குண்டானகிரகங்களின் வரிசையில் சுக்கிரன், செவ்வாய், புதன் ,சந்திரன் ,ராகு , இவர்களுக்குள் சேர்க்கை பார்வை எங்கிருந்தாலும்  பொருந்தும்.முக்கியமாக லக்னத்திற்கு 7ல்சுக்கிரன் ராகு ,7ல்சுக்கிரன் செவ்வாய், 7ல்சுக்கிரன் புதன். 7ல்ராகு நின்று சுக்கிரன் பார்ப்பது. சுக்கிரன் சந்திரன் சமசப்தமமாக பார்வை பெறுவது, மற்றும் பரிவர்த்தனை பெறுவது. பாவக முறையில்1,7

பரிவர்த்தனை 5,7பரிவர்த்தனை 7,11

இவைகளெல்லாம்காதலுக்கு உண்டான கிரக நிலைகளாகும். பொதுவாக சுக்கிரன் என்றாலே எல்லாவிதமான 

சிற்றின்பங்களுக்கும்,காமத்திற்கும்,

காரகர் ஆகிறார்.அவர் செவ்வாயுடன் சேரும்போது வீரியம் அதிகமாகிறது.

பொதுவாக களத்திரகாரககிரகங்கள் ஆண்களுக்கு சுக்கிரன்,பெண்களுக்கு செவ் ,இவர்கள் இருவரும் சேர்ந்தாலோ, அல்லது பார்த்தாலோ,அவருடைய தசா பத்தியோ,கோச்சாரமோ,பாகை

முறையில் இனைவோ,வரும்போது

நிச்சயம் சம்பவம் நடக்கும், அதேபோல் சுக்கிரன் ராகு, கேது 7ஆம்அதிபதியுடன் சம்பந்தம் பெறும்போது தன்னைவிட தாழ்ந்த ஜாதி பெண்ணையோ, பையனையோ,காதலிக்க நேரிடும் .

இப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு அந்த வாலிப வயதில்

தசாபுத்தியோ, கோச்சாரமோ,

சம்மந்தமிருந்தால் மட்டும் மேலே சொன்னது அனைத்தும் பொருந்தும்

இந்த விதியில் காதல் திருமணம் ஜெயிக்குமா என்றாள் இந்த கிரக சேர்க்கைகளுக்கு குருவின் பார்வையோ

சேர்க்கையோ,இருக்க வேண்டும்.

சூரியனும் சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்

காதல் திருமணம் 100%பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும். அப்படியில்லாமல் இந்த அமைப்பில் பாதகாதிபதி அஷ்டமாதிபதி ராகு-கேதுக்கள் ஒரு தொடர்பு பெற்றுவிட்டால் காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் மிகப் பெரிய அவமானங்களையும் கேவளங்களையும் சந்திக்க நேரிடும்.இன்னும் ஏகப்பட்ட விதிகள் இருக்கிறது .

savithaastro@mail.com

savithaastro.blogspot.com


No comments:

Post a Comment