Wednesday, December 2, 2020

ஸந்தியாவந்தன மஹிமை

சந்தியாவந்தன மகிமை – 1: 

சோம்பல் நீக்கம்

கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியாவந்தன மகிமை – 2: 

ஆரோக்கியம் பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

சந்தியாவந்தன மகிமை – 3: 

தவறான செயல்களுக்கு தடை
அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.
பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியாவந்தன மகிமை – 4:

 சரியான செயல்களுக்கு ஊக்கம்
நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்
.
சந்தியாவந்தன மகிமை – 5: 

பாதையில் கவனம் 
 சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

சந்தியாவந்தன மகிமை – 6:

 இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.

சந்தியாவந்தன மகிமை –7:
 மனதில் சாந்தமும் தெளிவும் உண்டாகும்.தன் நம்பிக்கை வளரும்

சந்தியாவந்தன மகிமை – 8: 
மூக்கு ,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்
ஸ்ரீமகாபெரியவா அவர்கள் கூறியது
              பிராமணர்கள் பூஜை செய்யும்போது அடிக்கிற மணி சப்தத்தைவிட ஸந்த்யாவந்தனம் செய்யும்போது வருகிற பஞ்ச பாத்திர உத்தரணி சப்தம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
savithaastro@gmail.com
savithastro.blogspot.com

No comments:

Post a Comment