எல்லா மனிதர்கட்கும் ஜாதகத்தின் கிரகதோஷ காலங்கள் நடக்கும்போது அது தெஸாபுத்திகள் மூலம் காட்டும் ,
ஜீவிதகாலங்களில் ஜீவித நஷ்டங்கள் உண்டாகும்.
அதற்கான சிற்சில கிரகசாந்தி கர்ம பரிகாரங்கள் செய்தால் கிரகதோஷங்களிலிருந்து ஓரளவிற்கு விடுபட முடியும் என்று ஜோதிஷஸாஸ்த்ரம் சொல்கின்றது.
01. தீர்த்த ஜலஸ்நானம்.
...............................நித்யமும் அதிகாலையில் ஸ்நானம் செய்யும்போது சிறிதளவு ஜலம் வலது கையில் வைத்துகொண்டு அவரவர்கள் நித்யமும் பிரார்த்திக்து கொண்டிருக்கின்ற இஷ்டதேவதை, தேவனினை மனதில் சங்கல்ப்பித்து சங்கல்ப ப்ரார்த்தனை செய்து அந்த உள்ளங்கையில் உள்ள தண்ணிரை தலையில் மூன்று சுற்றி தலையில் தெளித்துவிட்டு ஸ்நானம் செய்ய தொடங்கவேண்டும்.
02. தேவாலயக்ஷேத்ரங்களில் குளத்தில் ஸ்நானம்!
...
.................................................ஜாதகரீதியாக எந்த கிரகத்தின் பாதிப்பால் ஜாதகருக்கு கஷ்டகாலம் நடக்கின்றது? என்று அறிந்துகொண்டு, அந்த கிரகமானது ஜாதகத்தில் எந்த திக்கில் நிற்கின்பதை அறிந்து அந்த திக்கிலுள்ள கிரக தேவன்மார்கள் தேவாலயக்ஷேத்ரங்கள் தேவன்மார்களை தரிசித்து அந்தந்த க்ஷேத்ரகுளத்திலும் ஸ்நானம் செய்து வரவேண்டும்.
03. வஸ்த்ரங்கள்.
.
...........................ஜாதகத்தில் இலக்னக்ஷேத்ரஸேனகன் யார்? அறிந்து அந்த கிரகத்தின் வஸ்த்ரம் சிறிதுகாலம் அணிந்து வரவேண்டும்.
04. யந்திரங்கள் பூஜா ;
..................................நல்ல கிரக யந்திரங்களில் அந்தந்த கிரகத்தின் மந்திர உச்சாடனங்கள் உருவேற்றி வீட்டில் பூஜா அறையில் வைத்து பூஜித்து வரவேண்டும்.
05. கிரக நவரத்னங்கள்.
.
........................................பாதிப்பு உள்ளாயிருக்கின்ற ஜாதகர்கள் நல்ல ஜோதிஷனை கண்டு எந்த கிரகத்தின் தோஷத்தால் பாதிப்பு? என்று அறிந்து அந்த கிரகத்தின் நவரத்னங்கள் சிறிது காலம் அணிந்து வரவேண்டும்!
06. ஹோமகர்மா
.
...............................கிரகதோஷம் பாதிக்குள்ளாயிருக்கின்ற ஜாதகர்கள் தங்களுடைய வீட்டில் தங்களுடைய சக்திக்கேற்றாற்போல் கிரகதோஷம் பரிகாரங்கள் செய்தல் நல்லது, அல்லது தகுந்த குரு மூலம் செய்து கொள்க
07. அதிதேவதா பிரார்த்தனைகள்!
.
.....................................................ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும் அந்தந்த நக்ஷத்ர அதிதேவதா உண்டு! பக்ஷிகள் உண்டு! விருக்ஷம் உண்டு, அவரவர்கள் தங்களுடைய ஜென்மநக்ஷத்ர அதிதேவதா அறிந்து அந்த தேவதா உபாஸனாகளையும், நித்யமும் உபாஸித்து வரவேண்டும்.
அவரவர்கள் விருக்ஷம் பக்ஷிகள் போன்றவைகள் வணங்கி வருதலும் பலன்கள் கிட்டும்
ambharish gsavithaastro@gmail.com
savithaastro.blogspot.com