சந்திரன் #சூரியனின் சாரத்தில் நின்றால் பேச்சில் அதிகாரமும், மமதையும் இருக்கும்.
தன் #சுய சாரத்தில் நின்றால் தன் தாயை பற்றி அதிகம் பேசுவார்கள். போற்றுவார்கள்.
#அங்காரஹன் சாரத்தில் நின்றால் அதிக உஷ்ணமும், ஆணவ பேச்சும் இருக்கும்.
#புதனின் சாரம் வாங்கினால் படிக்காவிட்டாலும் பெரிய புத்தி சாலியை போல் பேசுவார்கள். பிறரை புறம் சொல்வார்கள். மிமிக்ரி செய்வார்கள்.
#குருவின் சாரம் நின்றால் பேச்சில் தெளிவு இருக்கும். எப்போதும் தெய்வ ஸ்லோகம் ஒன்றை முணுமுணுப்பார்கள். வேதாந்தம் பேசுவார்கள்.
#சுக்ரன் சாரம் பெற்றால் பேச்சில் ஒரு கவர்ச்சியும், இனிமையும் இருக்கும்.
#சனி சாரம் பெற்றால் பேச்சில் ஒரு கவலையும் விரக்தியும் இருக்கும். தன் குடும்ப பாரம்பர்யத்தையும் பட்ட கஷ்டங்களையும் அடிக்கடி பேசுவார்கள்.
#ராகு சாரம் வாங்கினால் பேச்சில் அலங்காரம் இருக்கும். பேச்சு பிரம்மாண்டமாய் இருக்கும்.
#கேது சாரம் வாங்கினால் பேச்சில் விஷம் இருக்கும். வதந்தி பேசுவார்கள். அடிக்கடி மாற்றி பேசுவார்கள்.
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment