உங்கள் மரணம் எப்படி என்று அறிய !
22வது திரேக்காணம்.
22 வது திரேக்காணம் என்பது ஒருவரின் இறப்பின் தன்மையினை அறிய பயன்படுகிறது. இது கர திரேக்காணம் என அழைக்கப்படுகிறது. 22 வது திரேக்காணம் என்பது எட்டாவது ராசியில் அமையும் திரேக்காணமாகும்.
22வது திரேக்காணத்தினை எவ்வாறு அறிவது???
திரேக்காணத்தில் லக்னம் விழுந்த இடத்திற்கு 8 ம் இடத்து அதிபதியே 22வது திரேக்காண அதிபதி ஆவார்.
திரேக்காண லக்னம் மேஷம் எனில் விருச்சிகம் 22வது திரேக்காணம் ஆகும். ரிஷபம் எனில் தனுசு 22வது திரேக்காணம் ஆகும்.
உதாரணமாக மேஷ ராசிக்கு முதல் பத்து பாகையின் திரேக்காண லக்கினம் ஆனது மேஷம், இரண்டாவது பத்து பாகையின் திரேக்காண லக்கினம். ஆனது சிம்மம், மூன்றாவது பத்து பாகையின் திரேக்காண லக்கினம் ஆனது தனுசு என முன்னரே கண்டோம். இந்த ராசிகளில் தான் திரேக்காண லக்கினம் விழுகும்.
இதனின் 8ம் இடத்து அதிபதியான மேஷத்திற்கு- விருச்சிகம், சிம்மத்திற்கு- மீனம், தனுசுவிற்கு- கடகமே 22வது திரேக்காணம் ஆகும். இதன் அதிபதியே 22வது திரேக்காண அதிபதியாவார்.
இதனை இன்னொரு விதமாக கூறவேண்டுமானால் எந்த ஒரு ராசிக்கும் 22வது திரேக்காண அதிபதியானது முதல் பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 8ம்மிடத்து அதிபதியும், இரண்டாவது பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 12ம்மிடத்து அதிபதியும், மூன்றாவது பத்து பாகைக்குள் லக்கினம் அமைந்தால் அந்த ராசிக்கு 4ம்மிடத்து அதிபதியும் திரேக்காண அதிபதி ஆவார்கள்.
உதாரணமாக முதல் பத்து பாகை- 8ம்மிடத்து அதிபதி செவ்வாய்இரண்டாவது பத்து பாகை- 12ம்மிடத்து அதிபதி குருமூன்றாவது பத்து பாகை- 4மிடத்து அதிபதி சந்திரன் இவையே முறையே மேஷ ராசியின் 22வது திரேக்காண அதிபதியாவார்கள்.
22வது திரேக்காணம் ராசியின் முதல் திரேக்காணத்தில் லக்னம் அமைந்தால் 8வது ராசியில் முதல் திரேக்காணமும், ராசியின் 2வது திரேக்காணத்தில் லக்கினம் அமைந்தால் 8வது ராசியில் 2வது திரேக்காணமும், 3வது திரேக்காணத்தில் லக்கினம் அமைந்தால் 8வது ராசியில் 3வது திரேக்காணமும் 22வது திரேக்காணமாக அமையும். இனி ஒவ்வொரு லக்கினத்திற்கும் எந்த திரேக்காணத்தில் லக்கினம் விழுகிறதோ அதற்க்கான வியாதி, நோயினை அறிவோம்.
மேசம்
1வது திரேக்காணம்-நீர் நிலை, பாம்பின் விஷம், விஷக்கடி
2வது திரேக்காணம்-நீர்,புழுக்கள், பனித்துளி, காடு
3வது திரேக்காணம்-கிணறு அல்லது நீர் நிலைகளில் விழுதல்
ரிஷபம்
1வது திரேக்காணம்-யானை, குதிரை, ஒட்டகம்
2வது திரேக்காணம்-பித்தம் , தீ , வாதம் , திருடர்கள்
3வது திரேக்காணம்-வாகனம் அல்லது இருக்கை அல்லது குதிரையிலிருந்து விழுதல், ஆயுதம் தாக்கி விழுதல்
மிதுனம்
1வது திரேக்காணம்-இருமல் , ஆஸ்த்துமா
2வது திரேக்காணம்-எருது, விஷம், வைரஸ் போன்ற கிருமி ஜுரம்
3வது திரேக்காணம்-காட்டு விலங்குகள்,மலை, பாம்புகள், யானைகள், காட்டுவாசி அல்லது காடு
கடகம்
1வது திரேக்காணம்-முதலை, மது, முட்கள், தூக்கம்
2வது திரேக்காணம்-அடித்தல் ,விஷம் அருந்துதல்,
3வது திரேக்காணம்-பறவைகள், சர்க்கரை வியாதி, கட்டி, இரத்தம் கெடுதல், மயக்கம், அதீத தூக்கம்
சிம்மம்
1வது திரேக்காணம்-நீர், விஷம், கால் நோய்
2வது திரேக்காணம்-நீர் கோத்தல் அல்லது வீக்கம், வயிற்றுப்போக்கு, காடு
3வது திரேக்காணம்-விஷம், ஆயுதங்கள், அறுவைச்சிகிச்சை, சாபம், விழுதல்
கன்னி
1வது திரேக்காணம்-தலை அல்லது மூளை நோய்.
2வது திரேக்காணம்-காட்டு யானை , பாம்பு, காடு, மலை, இளவரசனின் அதிருப்தி.
3வது திரேக்காணம்-பாழ்க்கிடங்கு, உணவு மற்றும் மது, பெண், ஆயுதம், தன்னீர் நிலை, குரங்கு,யானை
துலாம்
1வது திரேக்காணம்-இளம் பெண், விலங்கு, விழுதல்.
2வது திரேக்காணம்-வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்.
3வது திரேக்காணம்-பாம்பு, நீர் நிலை
விருச்சிகம்
1வது திரேக்காணம்-விஷம், ஆயுதம், பெண், உணவு
2வது திரேக்காணம்-துணி, பாரம், விழுதல், நோய்
3வது திரேக்காணம்-மண்கட்டி மற்றும் கற்களால் ஏற்படும் வலி, கெண்டைக்கால் எலும்பு முறிதல்.
தனுசு
1வது திரேக்காணம்-குதம் சம்பந்தப்பட்ட நோய், வாத கோளாறு
2வது திரேக்காணம்-விஷம், வாத நோய்3வது திரேக்காணம்-தண்ணீரில் அல்லது தண்ணீரால் பிணி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்
மகரம்
1வது திரேக்காணம்-அரசரால் துன்பம், புலி, தொடையில் எழும்பு முறிவு, நீர் வாழ் விலங்குகள், விஷம், பாம்பு, விலங்குகளால் உதை படுதல்
2வது திரேக்காணம்-தீ, ஆயுதம், திருடர்கள், காச்சல், கால் ஆணி, கூரிய ஆயுதத்தால் குத்துதல்.
3வது திரேக்காணம்-பெண்
கும்பம்
1வது திரேக்காணம்-பெண், நீர் நிலை, வயிற்று கோளாறு, கொடூரமாக தாக்குதல்.
2வது திரேக்காணம்-பெண், பால்வினை நோய்கள்
3வது திரேக்காணம்-காம மிகுதி, நான்கு கால்களைகொண்டவைகளால் ஆபத்து, முகம் சார்ந்த நோய்கள்
மீனம்
1வது திரேக்காணம்-கட்டி, வயிற்றுப்போக்கு, நீரிழிவு நோய், இளம் பெண், முழங்கால் மற்றும் நீர்யானை, திருஷ்டி மற்றும் சூன்யம்,
2வது திரேக்காணம்-கப்பல் உடைதலால் அல்லது நீர் புகுதலால் ஆபத்து
3வது திரேக்காணம்-மேலிருந்து விழுதலால் ஆபத்து.
இங்கு மேலே கூறியவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேசத்தின்
1வது கர திரேக்காணம் விருச்சிகம் எனவே -நீர் நிலை, பாம்பின் விஷம், விஷக்கடி
மேசத்தின் 2வது கர திரேக்காணம் மீனம் எனவே -நீர்,புழுக்கள், பனித்துளி, காடு
மேசத்தின் 3வது கர திரேக்காணம் கடகம் எனவேதான் கிணறு அல்லது நீர் நிலைகளில் விழுதல் போன்றவை பலனாக கூறப்பட்டுள்ளது
கர திரேக்காணம் பற்றிய வேறு சில முக்கிய குறிப்புகளை காண்போம்.
1. 22வது திரேக்காணதிபதி தசா/ புத்தி கிரஹமாக இருந்தால் தன்னுடைய தசா புத்தியில் உடல் ரீதியான பிரச்சினையை தருவார்.
2.22வது திரேக்காணதிபதி சனி, செவ்வாய், ராகு, கேதுவாக இருந்து அது மேலும் 5,9 ஆதிபத்தியம் பெறாமல் இருந்தால் அது தீமை தரும் அமைப்பு ஆகும்.
3.22வது திரேக்காணாதிபதி லக்கினாதிபதிக்கு பகை கிரஹமாக இருந்து 6ம் பாவம் சம்பந்தபட்டாலும், பாதகஸ்தானம் சம்பந்தம் ஏற்பட்டாலும் உடலில் மிகப்பெரிய வடுவை உண்டாக்கும்.
4.22வது திரேக்காணத்தின் அதிபதி இருக்கும் வீட்டை கோட்சாரத்தில் சனி கிரஹம் கடக்கும் போது ஒருவருக்கு உடலில் இறப்பிற்கு சமமான வேதனைகள், ஆபரேஷன் போன்றவற்றினை சந்திக்க நேரிடும்.
5. திரேக்காண லக்கினாதிபதி நீசம், 6,8,12ம் பாவத்தில் திரேக்காணத்தில் இருந்தால் 22வது (கர) திரேக்காணாதிபதி மிகுந்த கெடுதல் செய்வார். திரேக்காணத்தில் திரேக்காண லக்கினாதிபதி பலமாக இருந்தால் 22வது (கர) திரேக்காணாதிபதியால் கெடுதல் அவ்வளவாக இருக்காது.
Ambharish sasthri
Savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment