Saturday, August 6, 2016

ஶ்ரீ குரு பகவான்

ஸ்ரீ குரு பகவான்
*****************

ஒரு மனிதனுக்கு பணம்,பட்டம்,பதவி,புகழ்,குழந்தை பாக்கியம்,திருமண நோக்கம்(குருநோக்கம்) ,கல்வி,காரிய சிறப்பு மற்றும் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்கும் காரகர் ஆவார்.

குருவின் மூல கடவுள் தெட்சினாமூர்த்தி(தென்முக கடவுள்)

குருவின் ஆட்சி வீடுகள்:- மீனம்,
                                               தனுசு
உச்ச வீடு.                        :- கடகம்
நீச
வீடு.                             :-மகரம்

மூல திரிகோனம்;-தனுசு

நட்பு வீடுகள்.         :-மேசம்,,கடகம்,சிம்மம்,விருட்சகம்

பகை வீடுகள்:-ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்
சம வீடுகள்:-மகரம்,கும்பம்

மலர்;-முல்லை
கல்;- புஷ்பராகம்
வண்ணம்:-மஞ்சள்
மரம்;- அரசு

நைவேத்தியம்:-சுண்டல்
வாகனம்:-யானை

நட்சத்திரங்கள்:-புணர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

தசை அளவு;-பதினாறு ஆண்டுகள்

வழிபட உகந்த கிழமை;-குரு வாரம் எனப்படும் வியாழ கிழமை

சிறப்பு பட்டம்;-புத்திரகாரகர்,தனகாரகர்,தர்மகாரகர்,ஆன்மீக செம்மல் என பல பட்டங்கள் உண்டு.

சூரியனுக்கும்,குருவிற்கும் உள்ள இடைவெளி தூரம் 77,77,94,020 கிலோ மீட்டராகும்.

குருவின் வேறுபெயர்கள்:-
அந்தணன்,மந்திரி,பொன்னன்,அரசன்,பீதமகன்,சீலன்,வியாழன் மற்றும் இறைவன் ஆகும்.

குருவால் கிடைக்கும் யோகங்கள்:

குருசந்திரயோகம்

 குருவும் ,சந்திரனும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ  குருசந்திர யோகம் ஆகும்.

விதிவிலக்கு : எல்லோருக்கும் குருசந்திர யோகம் பலனளிப்பதில்லை.இரு கிரகங்களில் யாராவது ஒருவர் பாதகாதிபதியாகவோ,மறைவுஸ்தான அதிபதியாகவோ ,நீசம்,வக்ரமடைந்து இருந்தாலோ அல்லது இவர்கள் சேர்ந்து இருக்கும் ராசியாதிபதி நீசம்,மறைவு பெற்றிருந்தாலோ பலனளிக்காது.மேலும் இந்த யோகம் அவ்விரு கிரக திசை நடைபெறும் காலத்திலே அந்த யோகத்தை வழங்கும்.

குருமங்கள் யோகம்; குருவும் செவ்வாயும் இணைந்தநிலை அல்லது சமசப்தம பார்வை.

சகடை யோகம்

குருவுக்கு சந்திரன் அல்லது சந்திரனுக்கு குரு ஆறு ,எட்டு மற்றும் பணிரெண்டில் இருப்பின் இவ்விதயோகமாகும்.
இதன் பலன், :ஏற்ற இறக்கமான வாழ்க்கை.

கஜகேசரி யோகம்.
குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பது ஆகும்.

குருசண்டாள யோகம்
குருவுடன் சனி அல்லது ராகு சேர்வது இவ்விதயோகமாகும்.
இதன் பலன்;குருவிற்கு மாறான பலன்.சிலர் நாத்திகவாதியாவதற்கும் இவைதான் காரணமாகும்.

குரு மற்றும் சனி சமசப்தம பார்வை.

சனிபகவானும்,குருபகவானும் சமசப்தம பார்வையானது குருவின் சுயத்தன்மை இழந்து சனி ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது.

ஆன்மீக சிந்தனை
குருபகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் சனியை பார்க்கும்போது நல்ல ஆன்மீகவாதியாக ஒருவரை மாற்றுகிறது.

வாக்குபலிதம்

குருவோடு கேது பகவான் இணைந்திருந்தாலோ அல்லது கேதுபகவானை குருபகவான் பார்த்துநின்றால் வாக்கு பலிக்கும்.புதனும் பலன் பெற்று குருபார்வை பெறும் நிலையில் ஒருவனை நல்ல சோதிடராக,பேச்சாளராக ,கலை ஆர்வம் உள்ளவராக மற்றும் வேதவிசாரணை செய்பவனாக மாற்றுகிறது.

இனி
பணிரென்டு ராசிகளுக்கும்  குருவின் பங்கு என்ன என்பதை மாறுபட்ட கோணத்தில் ஆய்வோம்.

மேஷம்;-
+++++++

மேஷ லக்கனத்திற்கு குரு 9,12 க்கு உடையவர்.இவர் இந்த லக்கனத்திற்கு யோகர் ஆவார்.

தனகாரகர் குரு 2- ம் இடத்தில் அமர்வது நல்லது.இவர்களுடன் சுக்கிரன் இணைவதும்,லக்கனாதி செவ்வாய் இணைவது யோகம் ஆகும்.
          மேச லக்கனத்திற்கு உடைய குரு 10-ல் இருப்பின்  குருவே மாரகம் செய்வார். ஏனெனில் 10,11
உடையவர் சனி பகவான் சர ராசிக்கு 11-ம் மிடம் பாதகஸ்தானம்
மேலும் பத்தாமிடமான மகர ஸ்தானம் குரு நீச்சமடையும் இடம்.

ஆகவே குரு வலுவிழந்து பாதகாதியின் வீடான மகரத்தில் சனியின் வீட்டில் சனியுடன் கூடி இருந்தால் அவரும் கெட்டு மாரகத்தை செய்ய துணிவர்.

மேலும் இந்த ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் கொடுக்காது..
9,10 க்குடையவர்கள் குரு,சனி
இணைந்து இருந்தாலோ அல்லது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலோ மற்றும் பரிவர்த்தனை பெற்றுக்கொண்டால் இவ்வகை யோகமாகும்

ஆனால் இந்த ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யாது.ஏனெனில் சனி 10,11
என இரு ஆதிபத்தியம் பெற்று இருப்பதால் சர ராசிக்கு பதினொராம் இடம் பாதகஸ்தானம் என்பதால் ஆகும்.குரு பத்தில் இருப்பின் சனிக்கு நிகரான மாரகத்தை செய்யும்.சனியுடன் சேராமல் தனித்து இருப்பின் சமநிலை அடையும்.

குரு 9-ல் ஆட்சி பெற்று இருந்தாலோ அல்லது கடகத்தில் உச்சம் பெற்று  இருந்தால்(உடன் செவ்வாய் இருப்பின் நீச பங்க யோகம்) அவருக்குரிய சுப பலனை கொடுக்கும்.ஆனால் சனியுடன் சேர்ந்தால் யோகம் இல்லை.

மேஷ லக்கனத்திற்கு11-ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் அவ்விடத்தில் குரு இருப்பது நல்லதல்ல.பதகாதிபதியைவிட. பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் அதிக பாதகங்களை செய்யும்.

குரு 12-ல் ஆட்சி பெறுவது வெளிநாட்டு யோகத்தை தரும்.


அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment