Tuesday, September 27, 2016

இந்த உடலை விட்டு பிரியும் வாசலகள் 11,

​இந்த உடலை விட்டு பிரியும் வாசலகள் 11,

அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது.
1.பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது
2.பாவஞ் செய்தவரகளுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும் 

இந்த உயர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.
3.பாவம் நிறயவும், புணணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும.

இந்த உயிர்கள் மறுபிறப்பில் கஷ்டபட்டவனாகவும்,நோயாளியாகவும்,

அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினயை கழிக்கும்.
4.பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப்பிரியும்.

இவை மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும் சாப்பாட்டு ராமர்களாகவும் பிறப்பார்கள்.
5,6.இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் 

அதிக பாவம் செய்யாத உயிர்கள்.

இவை மறுபிறப்பில் நற்மணத்தையே விரும்பும்
7,8.இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள்.

இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும்.
9,10.இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும்.
11. சவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து,  பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமந்திர வழியை திறந்து கபால வழயாக ஔிமயமாகச் செல்லும்.

அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.
அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment