Tuesday, September 27, 2016

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்.

வணக்கம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். 
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக joஇருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.
    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.
    எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும்.  மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.
    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment