Friday, September 16, 2016

அஸ்வினியின் குணங்கள்


     அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும்  ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை  விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு ஆலுமைக்கும் பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணமிருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுபடாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை பேச்சுக்களில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.
    கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து  செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும்  மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.
    எந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும். இதனால் உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள்.
    அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைல்ஸ், முதுகு தண்டு பிரச்சனை, கணுக்கால் வலி, ஒற்றை தலை வலி, மூளை காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கபடுவார்கள்.(மனவாழ்கை)
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
நன்றி.

அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment