Wednesday, April 24, 2024

நட்சத்திர குலம்

 அஸ்வினி - வைசியகுலம்

பரணி - நீச்ச குலம்

கிருத்திகை - பிரம்ம குலம்

ரோஹிணி - க்ஷத்திரிய குலம்

மிருகசீரிடம் - வேடர் குலம்

திருவாதிரை - இராட்சச குலம்

புனர்பூசம் - வைசியகுலம்

பூசம் - சூத்திர குலம்

ஆயில்யம் - நீச்ச குலம்

மகம் - க்ஷத்திரிய குலம்

பூரம் - பிரம்ம குலம்

உத்திரம் - சூத்திர குலம்

ஹஸ்தம் - வைசியகுலம்

சித்திரை - வேடர் குலம்

ஸ்வாதி - இராட்சச குலம்

விசாகம் - நீச்ச குலம்

அனுசம் - க்ஷத்திரிய குலம்

கேட்டை - வேடர் குலம்

மூலம் - இராட்சச குலம்

பூராடம் - பிரம்ம குலம்

உத்திராடம் - சூத்திர குலம்

அபிஜித் - வைசியகுலம்

திருவோணம் - நீச்ச குலம்

அவிட்டம் - வேடர் குலம்

சதயம் - இராட்சச குலம்

பூரட்டாதி - பிரம்ம குலம்

உத்திரட்டாதி - சூத்திர குலம்

ரேவதி - க்ஷத்திரிய குலம்

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

11 ம் பாவமும் 6 ம் பாவமும்

11 ஆம் பாவம் நெருங்கிப் பழகும் நீண்ட கால நண்பர்கள்.                  

6 ம் பாவம் தனிமை.


 11 ம் பாவம் ஜாதகரின் நலன் விரும்பிகள். 

6 ம் பாவம் ஜாதகரின் எதிரிகள்.


11 ம் பாவம் ஒருமித்த கருத்துடையவர்களின் குழு. 

6 ம் பாவம் யாருடைய கருத்துக்களையும் ஏற்காதவருடைய குரல்.  


11 ம் பாவம் கொடுத்தக் கடனை அசல் வட்டியுடன் சேர்த்துப் பெறுவது. 

6 ம் பாவம் புதிய கடனைப் பெறுவது.                                                11 ஆம் பாவம் மருத்துவமனையிலிருந்து முழுவதும் குணமாகி வீடு திரும்புதல். 

6 ம் பாவம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லுதல்.


 11 ம் பாவம் சேமிக்கும் பழக்கம். 

6 ம் பாவம் கடன் பெறும் வழக்கம்.


 11 ம் பாவம் ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள். 

6 ம் பாவம் முதுகிற்குப் பின்னால் குத்த நினைப்பவர்கள்.

               ‌

11 ம் பாவம் முயற்சிகள் திருவினையாதல். 

6 ம் பாவம் முயற்சிகள் போராடி வெற்றி பெறுதல்.


11 ம் பாவம் 7 ம் பாவம் எனும் வாழ்க்கைத்துணைக்கு மிகவும் மகிழ்ச்சியான பாவம். 

6 ம் பாவம் 7 ம் பாவம் எனும் ஜாதகரை அடிமைப் படுத்தும் பாவம். 


11 ம் பாவம் ஜாதகர் மகிழ்ச்சியோடு உறவாடும் நண்பர்கள்.

6 ம் பாவம் ஜாதகரின் அந்தஸ்திற்கு குறைவான வேலைக்காரர்கள், கால்நடைகள்.


11 ம் பாவம் வாழ்க்கைத் துணைக்கு ஜாதகரிடமிருந்து கிடைக்கும் இல்லற வாழ்வில் திருப்தி.

6 ம் பாவம் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை உதாசீனப் படுத்தல்.


11 ம் பாவம் போட்டியில்லாமல், வீழ்த்தாமல் வெற்றி பெறுதல்.

6 ம் பாவம் போட்டியிட்டு பிறரை வீழ்த்தி வெற்றி பெறுதல்.


11 ம் பாவம் வழக்கு, எதிரிகள் இல்லாத திருப்தியான வாழ்க்கை. 

6 ம் பாவம் மறைமுக எதிரிகள், வழக்குத் தொடுத்தல்.


11 ம் பாவம் பிறர் மகிழும் வண்ணம் ஒரே சிந்தனையைப் பெற்றிருத்தல்.

6 ம் பாவம் மற்றவரின் சிந்தனையிலிருந்து மாறுபட்ட சிந்தனைகளைப் பெற்றிருத்தல். 


11 ஆம் பாவம் எப்போதும் கூடி வாழ்தல்.

6 ம் பாவம் தனித்து வாழ்தல்.


11 ம் பாவம் உடல் முழுச் செயல் திறனுடன் உற்சாகமாக இருத்தல்.

6 ம் பாவம் நோயினால் உடல் சோர்வடைந்தல்.


11 ஆம் பாவம் தேவையற்ற சத்துக்களை தன்னுள் வைத்திருப்பதில்லை.

6 ம் பாவம் என்பது ஒரு சத்து கூடவோ, குறையவோ செய்வதே நோய்.


11 ம் பாவம் அதிகமான தாதுக்கள், விட்டமின்கள் எளிதாக உடலைவிட்டு வெளியேறும்.

6 ம் பாவம் மாத்திரைகள் மூலம் பெறப்படும் தாதுக்கள், விட்டமின்கள் உடலை விட்டு வெளியேறுவது சிரமம்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.blogspot.com

9790111570

ஜோதிட_விதிவிலக்கு

 11 பாவத்தில் எத்தனை கிரகம் இருந்தாலும் கிரக_யுத்தம் ஏற்படுவதில்லை..

தனுசு ராசியில் எந்த கிரகமும் பகை பெறுவதில்லை..

சந்திரன் எந்த வீட்டிலும் பகை பெறமாட்டார்..

செவ்வாய் க்கு 6 இல் நீச்சம் கிடையாது .. 

சுக்ரணுக்கு 6 , 12 இல் மறைவு கிடையாது..

சந்திரனுடன்  எந்த கிரகம் இருந்தாலும்  அந்த பாவத்தின் காரகத்துவத்தில் மனதை உறுதியுடன் மனோபலம் கொண்டிருந்தால்  ராகு , கேது வே உடன் இருந்தாலும் சந்திரன் பலசாலி யாக கருதப்படுவார்..

புதனுக்கு 8 இல் பலம் அதிகம்.. புதன் எங்கும் மறையமாட்டார். 

சனி'யை விட குரு கொடுக்கும் கெடுபலன் சற்று வீரியம் அதிகம் ... 

கேது யாருக்கும் நண்பர் கிடையாது..
Ambharish g 
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790111570

மருத்துவ ஜோதிட விதிகள்

-

3.இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

4.முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

5.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.

-

6. ஜாதகத்தில் செவ்வாய்,சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

-

7.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.

-

8.மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.

-

9.கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.

-

10.லக்கினத்திற்கு 6 ல் சனி,செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்கவோ,தொடவோ கூடாது.இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.

-

11. லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,உள்ள்வர்கள் நோயாளியை பார்ப்பதும்,தொடுவதும் நல்லது.நோய் வரைவில் குணமாகும்.

-

12. லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று வலுத்து நிற்க,6-8க்குடையவர்கள் நீச்சம்,பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.

-

13. லக்கினாதிபதி பகை , நீச்சம் ,அஸ்தமனம் பெற்று நிற்க,6-8க்குடையவர்கள் ஆட்சி ,உச்சம் பெற்று நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

-

14. லக்கினத்திற்கு 6 -8 ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் பல வியாதிகல் ஒன்றாக வந்து தக்கும்.

-

15.நோயாளியின் லக்கினத்திற்கு 6-8 ம் வீடுகளை ஜென்ம லக்கினமாகவோ,ஜென்ம ராசியாகவொ அல்லது பெயர் ராசியாகவோகொண்டவர்கள்.நோயாளியை பார்க்கக்கூடாது.இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணமடையாது.

-

16. லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.

-

17.ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

Sunday, April 14, 2024

யார் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வர்.?


1) 4-ஆம் வீட்டில் 4-ஆம் அதிபதி இருப்பது.(சனி மற்றும் சுக்கிரன் தவிர்த்து).

2)4-ஆம் அதிபதி சூரியன்,சந்திரன்,புதன்,செவ்வாய்,குரு இவர்களுடன் சேர்ந்திருப்பது.(சனி,சுக்கிரனுடன் சேரக்கூடாது.)

3) சந்திரன் 4-ஆம் வீட்டில் இருப்பது(சனி,சுக்கிரனுடன் கூட சேரக்கூடாது)அல்லது சந்திரன் சூரியன்,செவ்வாய்,புதன்,குருவுடன் சேர்ந்திருப்பது.

4) 4-க்குடையவன் லக்னத்திலிருப்பது அல்லது லக்னாதிபதி நாலில் இருப்பது.(சனி, சுக்கிரன் தவிர்த்து)அல்லது லக்னத்திலோ அல்லது லக்னாதிபதியோடோ சந்திரன், சூரியன், செவ்வாய்,புதன்,குரு இருப்பது.

மேலே உள்ள நான்கு நிலைகளும் ஒரு ஜாதகத்திலிருந்தால் அந்த ஜாதகர் மன அமைதியோடும்,மன நிறைவோடும் வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

பாதாகாதிபதிகள் மூலம் வரும் உடல் கோளாறுகள்


இதில் பாதாகாதிபதிகள் பலம் பெற்று, கேந்திரத்தில் அமர, கண் திருஷ்டியினாலும், பில்லி சூனியம் மற்றும் செய்வினை போன்ற கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகளை குறிக்கிறது.

சர லக்னத்துக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) 11 இடமும், ஸ்திர லக்னத்துக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சக்கம், கும்பம்) 9 இடமும், உபய லக்னத்துக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) 7 இட அதிபதிகள் பாதகாதிபதிகள் ஆவார்கள். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று பலம் பெற்று, லக்னாதிபதி மற்றும் திரிகோன அதிபதிகள் பல இழக்க, மேற்சொன்ன உபாதைகள் ஏற்படும்.

ஜோதிடத்தில் 6 மற்றும் 8 பாவங்கள் நோய் தரும் பாவங்கள் என கூறப்பட்டுள்ளது.

இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ஆகும்.

8 பாவம் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய் என அறிந்து கொள்ளலாம்.

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

நோய் நிவர்த்தி

நோய் நிவர்த்தி பாவங்கள்

6 க்கு 12 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

8 க்கு 2 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

11 க்கு 5 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

9 க்கு 3 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

7 க்கு 1 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

-

நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் பாவங்கள் 

-

3 மற்றும் 5 ம் பாவங்கள்

Ambharish g 

savithaastro@gmail.com 

9790111570

savithaastro.blogspot.com

Saturday, April 13, 2024

மருத்துவ ஜோதிட விதிகள்


1.கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

2.நாள்பட்ட வியாதிகளை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

3.இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.

-

4.முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.

-

5.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.

-

6. ஜாதகத்தில் செவ்வாய்,சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

-

7.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.

-

8.மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.

-

9.கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.

-

10.லக்கினத்திற்கு 6 ல் சனி,செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்கவோ,தொடவோ கூடாது.இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.

-

11. லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,உள்ள்வர்கள் நோயாளியை பார்ப்பதும்,தொடுவதும் நல்லது.நோய் வரைவில் குணமாகும்.

-

12. லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று வலுத்து நிற்க,6-8க்குடையவர்கள் நீச்சம்,பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.

-

13. லக்கினாதிபதி பகை , நீச்சம் ,அஸ்தமனம் பெற்று நிற்க,6-8க்குடையவர்கள் ஆட்சி ,உச்சம் பெற்று நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

-

14. லக்கினத்திற்கு 6 -8 ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் பல வியாதிகல் ஒன்றாக வந்து தக்கும்.

-

15.நோயாளியின் லக்கினத்திற்கு 6-8 ம் வீடுகளை ஜென்ம லக்கினமாகவோ,ஜென்ம ராசியாகவொ அல்லது பெயர் ராசியாகவோகொண்டவர்கள்.நோயாளியை பார்க்கக்கூடாது.இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணமடையாது.

-

16. லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.

-

17.ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Ambharish g 

savithaastro@gmail.com 

savithaastro.bligspot.com

Friday, April 5, 2024

தனிஷ்டா பஞ்சமி

தனிஷ்டா பஞ்சமி பற்றிய பதிவுகள்

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதில் தனிஷ்டா பஞ்சமி என்பது கீழ்கண்ட 13 நட்சத்திரங்களை உள்ளடக்கியது ஆகும்.

• அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

• கார்த்திகை மற்றும் உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம் மற்றும் உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

*அடைப்பு என்றால் என்ன ?*

கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். 

தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 

அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

Monday, April 1, 2024

சயன யோகம்


சயன தோஷம் என்பது, இளம் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மையை தற்காலிகமாக ஏற்படுத்தி அதில் நாட்டத்தை குறைக்கும். அல்லது திருப்தியின்மைய தந்து, அதன் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடும். 


இப்படிப்பட்ட தோஷம் இருவரில் ஒருவருக்கு நேரலாம். சில நேரங்களில் அபூர்வமாக இருவருக்கும் நேர்வது உண்டு. விவாக தசவித பொருத்தத்தில் யோனிப்பொருத்தத்தோடு தொடர்பு உடையது இது. இந்த பொருத்தம் முறையாக அமையவில்லை என்றால், அவர்களுக்கு சயன தோஷம் பெரும்பாலும் இருக்கும். 


எனவே யோனிப்பொருத்தம் என்பது முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ஒன்றாகவும், அவசியம் இருந்தாக வேண்டும் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது.


அஸ்திவாரம் பலவீனமானால் அதில் வீடு கட்டினால் தாங்காது என்பது போல, அடிப்படை தோஷமான இது இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு வழி கிடைக்காமல் தடை ஏற்பட்டு விடும். புத்திர பாக்ய தோஷம் என்பது நிரந்தரமாகவோ அல்லது மிக நீண்ட காலமோ இருக்கக்கூடியது. சயன தோஷம் என்பது தற்காலிகமான குறுகிய காலம் கொண்டது. தானாகவே நீங்கிவிடக்கூடியது. உடனடியாக நீங்க பரிகாரவழிபாடுகளை மேற்கொள்ளலாம். 


அதிக பட்சமாக 3 வருஷம் 4 மாதம் நீடிக்கும். குறைந்த பட்சமாக 10 மாதம் நீடிக்கும். 


இதன்  கிரக அமைப்பே சற்று வித்தியாசமானதாகும். சயனஸ்தானம் எனப்படும் விரயத்தோடு (பன்னிரெண்டாம் வீட்டின் ) தொடர்பு உடையது  இது. 

இந்த ஸ்தானத்தில் சுபாவ சுபர்களான குரு, சுக்கிரன், சுப புதன், சுப சந்திரன் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இருந்தால் சயனதோஷம் ஏற்படும். ஸ்ரீ வராகிமிகிரர் தத்துவப்படி, ஒரு பாபஸ்தானத்தில் சுபாவ சுப கிரகம் இருந்தால், அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறையும். அதன் படி விரயஸ்தானத்தில் சுபாவ சுப கிரகங்கள் இருக்கும் போது, அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறைந்து தோஷம் உருவாகிறது.


1. குரு என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும்போது சயனதோஷம் உருவாவதோடு, புத்திரத்தடை ஏற்படுகிறது. ஏனென்றால் குருவின் காரகத்த்துவத்தில் ஒன்று புத்திர பாக்கியம்.


2. சுக்கிரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் உருவாவதோடு, தாம்பத்திய உறவில் திருப்தியின்மையோ அல்லது நாட்டமின்மையோ ஏற்படுகிறது. ஏனென்றால் சுக்கிரனின் காரகத்துவத்தில் ஒன்று காமம்.


3. புதன் என்ற கிரகம் சுபாவ சுபத்தன்மையோடு இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, புத்திர பாக்கிய தடையும் ஏற்படுத்துகிறது. புதனுக்கு புத்ர ஹீனன் என்ற காரகத்துவம் உண்டு. அதாவது ஜனன ஜாதகத்தில் புதன் கெட்டுபோக வேண்டும் அதாவது அஸ்தங்கதம் அடையவேண்டும். அல்லது 6,8,12 ஆகிய இடங்களில் மறைய வேண்டும். அப்போதுதான் புத்ரஹீனமும் கெட்டு மறைந்து புத்ர பாக்கியம் உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்னிலையில் புதனின் தொடர்பு புத்ர பாக்ய ஸ்தானத்திற்கு ஏற்பட்டால் புத்திர தடை இருக்காது. புதன் நல்ல நிலையில் இருந்தால் புத்ர பாக்ய தடை உருவாகும். இங்கு புதன் விரயத்தில் மறைவதால் புத்திர பாக்கியம் இருக்கும். ஆனால் சயனதோஷத்தின் காரணமாக தாமதமாகும்.


4. சந்திரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, பெண்மை குறைவையும் ஏற்படுத்தி, தாம்பத்தியம் கசக்க செய்கிறது. அதாவது, கருமுட்டை முதிர்ச்சியற்ற தனமையுடனோ அல்லது குறைவாகவோ உருவாவது. மேலும் சுரோணித சுரப்பி சரிவர செயல்படாமல் இருப்பது போன்றவை பெண்மை குறைவு எனப்படும். இது பெண்கள் ஜாதகப்படி மட்டுமே நேரும்.

Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

கிரஹங்களின் சில முக்கிய பலன்கள்

1.நீங்கள் எந்த கரணத்தில் பிறந்துள்ளீர்களோ மேற்கண்ட கரண நாதனின் அதிபதிக்குரிய ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள், மேற்கண்ட அதிபதி உச்சம் மற்றும் நீசம் அடையக்கூடிய ராசிகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைய வாய்ப்புண்டு.


2.சுய ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு மறைந்த கிரகத்தின் காரக உறவுகள், அந்த கிரகம் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறதோ அந்த ஆதிபத்தியத்தை குறிப்பிடும் பாவக உறவுகளிடத்தில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.


3.உச்ச சந்திரனுடன் தொடர்பு பெற்ற சனி அல்லது நீர் ராசியில் நின்ற குருவின் பார்வையைப் பெற்ற சனி, கடல் சார்ந்த துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்பினை தருவார்.


4.சுபர் தொடர்பில்லாத சனியின் பார்வை ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை மட்டுப்படுத்த மட்டுமே செய்யும். முற்றிலுமாக இல்லாமல் செய்து விடாது. ஆனால் அந்த கிரகம் பெற்றுள்ள ஆதிபத்தியத்தை பெரிய அளவில் பாதிக்கும்.


5.எட்டாம் வீட்டை சனி, செவ்வாய் பார்த்தாலும் எட்டாம் வீட்டை அல்லது எட்டாம் வீட்டு அதிபதியை குரு பார்க்கும் பொழுது ஆயுளுக்கு பெரிய அளவில் பாதிப்பில் இருக்காது.


6.ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தால் மணவாழ்க்கை பாதிக்குமா?

ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்து விட்டாலே மணவாழ்க்கை பாதிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. மேற்கண்ட ஏழாம் அதிபதியின் தசாக்காலங்கள் வருகிறதா?  வீடு கொடுத்தவரின் நிலை போன்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் களத்திரக்காரகனான சுக்கிரன் வலுத்துவிட்டால் மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை. மணவாழ்க்கை நல்லபடியாகவே செல்லும்.


7.ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகளின் புத்திகள் எப்படிப்பட்ட நிலையில் நல்ல பலன்களை தரும்?

 6, 8, 12 ஆம் அதிபதியின் வீட்டை சுபகிரகங்கள் பார்த்து, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதியையும் சுபர்கள் பார்த்தால் 6,8,12 ஆம் அதிபதியின் புத்திகளும் நல்ல பலன்களைத் தரும்.


8.சகோதரர்கள் வகையில் எதிர்ப்புகளைச் சந்திக்கக் கூடியவர்கள், கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை இல்லாத நிலையில் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் ஆலயங்களில் பக்தர்களுக்கு செவ்வாழைப்பழம் தானம் செய்து வருவது நல்லதாகும்.


9.ஐந்தாம் இடம் உழைப்பில்லாத வருமானம், ஷேர் போன்ற மறைமுக வருமானங்களை குறிக்கக்கூடிய இடம். ஐந்தாம் இடம் வலுவாக இருக்கும் பொழுது ஜாதகர் எளிய முறைகளில் பணம் சம்பாதிப்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்.


10.சுகஸ்தானதிபதியான நான்காம் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது ஜாதகர் தன்னுடைய சுகபோக வாழ்விற்காக எந்த தவறையும் செய்வார்.

Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

உச்சிஷ்ட கணபதி உபாசனை



திருமண தடைகள் நீங்க, காதல் கைகூட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரந்து சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து நெருக்கமாக வாழவும் ,தாம்பத்திய உறவு பலப்படவும், செல்வச் சேர்க்கைக்கும் உச்சிஷ்ட கணபதி உபாசனை மிகச் சிறந்தது.

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு. விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. ‘உச்சிஷ்டம்’ என்றால் எச்சில் படுத்துதல் என்று பொருள்.
 உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருளைக் குறித்தாலும் இந்த உபாசனையை பொருத்தவரை மிகவும் தெய்வீகத்தன்மையாகவே கருதப்படுகிறது. சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் ஒரு யோகி கடக்க வேண்டும். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு இவற்றை புறக்கணிப்பது இல்லை. இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்கள் மட்டுமே தந்திர சாதனத்திற்கும் இந்த உச்சிஷ்ட கணபதி உபாசனைக்கும் தகுதியுள்ளவர்கள். மஹாநிர்வாண தந்திரத்தில் உச்சிஷ்ட கணபதி தனது சக்தி தேவியின் குஹ்யத்தில் (உபஸ்தானத்தில்) தனது தும்பிக்கையை வைத்துள்ள ஆனந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்று கூறுகிறது .இதை உச்சிஷ்ட கணபதி சகஸ்ரநாமாவளி 103 -104-118-119 வரிகள் உறுதிப்படுத்துகின்றன. ) இதன் மூலம், எதுவும் நிசித்தமில்லை ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்திலும் ‘யோனி பூஜை’ என்றொரு வாமாச்சார சம்பிரதாயம் இருந்தது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இங்கு தெரிய வேண்டியது இவர் கிரியா சக்தியை தனது இச்சா சத்தியால் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது என்பதுதான். உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவதும் மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும். ஆனால், கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனிதனின் மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.
தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி தியானம்

நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

குறிப்பு :
இவரது ஹோமத்திற்கு வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகள் சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

இவரது உபாசனையின் பலன்கள்

உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவருக்கும் இடையே பரஸ்பர வசியம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமாகி தாம்பத்திய உறவு (conjugal relationship) வலுப்படும். இருவருக்கும் இடயே திருஷ்டி காரணமாகவோ வேறு நபர்கள் காரணமாகவோ ஏற்பட்ட தடைகள் விலகும். தம்பதி ஒற்றுமை பலப்படும். ( tested ) .குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால் குழந்தைச் செல்வம் உண்டாகும். மேலும் இந்த உபாசனையால் வாக்கு பலிதம் ஏற்பட்டு சொன்னது சொன்னபடி நடக்கும்.
மிக முக்கியமாகக் கவனிக்கவும்: இந்த மஹா மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று , குரு , தெய்வம்,மந்திரம் இம்மூன்றின் மீதும் அசைக்க முடியாத பூரண நம்பிக்கை வைத்து மனஒருமப்பாட்டுடன் மந்திரத்தை உருவேற்றி பூசை செய்துவரவெண்டியது. சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். உபாசகர்கள் கருப்பு,நீல ஆடைகள் தவிற்ககவும். மாறாக சிவப்பு,  பொன்னிற ஆடைகள் அணியவும்.வினாயகருக்கு பிள்ளையார்
சதுர்த்தி தவிர மற்ற நாளில் துளசி வேண்டாம். 

வழிபாட்டின் பலன்கள்: மந்திர உபதேசம் பெற்று இவரை நன்கு வணங்கி , இவரது திரு உருவத்தை மனதில் இருத்தி மந்திர ஜபம் செய்து வேண்டிய வரம் பெற்று வாழவும். தம்பதிகள் ஒற்றுமையுடனும் நலமுடனும் மிக இணக்கமாக வாழ்வதோடு வாழ்வில் தன சேர்க்கையும் ஏற்படும். நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த நன்மைகள் தானே தேடிவரும். ருத்ர யாமள தந்திரம்,உட்டாமரேச தந்திரம்,பேத்கார தந்திரம் போன்ற நூல்கள் உச்சிஷ்ட கணபதி பற்றிக் கூறுவதாக அறியப்படுகிறது...

உச்சிஷ்ட கணபதி  உபாசனை  திருவாரூர் கமலாம்பிகை சந்நிதியில் l தொடங்குவது சிறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மணி மூர்த்திஸ்வரம் என்கிற கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உச்சிஷ்ட மஹா கணபதிக்கு மிகப்பெரிய ஆலயம்
உள்ளது.

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
 

கிரஹங்கள் காட்டும் நோய்கள்


 
ஜோதிடத்தில் 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் ஜாதகருக்கு நோய் ,வலி வேதனை ,விபத்து அங்கஈனம் ஆகியவற்றை கொடுக்கும் பாவங்களாகும். 

ஆக அந்த 6,8,12 ஆகிய பாவங்களுக்கு உபநட்சத்திரமாக ராகு (அல்) கேது (அல்) சனி ஆகிய கிரகங்கள் வந்து 8,12 ஆகிய பாவங்களை தொடர்புகொண்டு தசா நடக்கும் காலத்தில் அவர்களுக்கு கேன்சர் நோய் உருவாகக்கூடிய சூழ்நிலை அமையும். 

கேது என்ற கிரகம் கண்ணுக்குத் தெரியாத மற்றும் குணப்படுத்த முடியாத கட்டிகளை குறிக்கும் .ஆக நம் உடலின் உட்புறத்தில் இருக்கக்கூடிய மூளை ,ரத்தம், கர்ப்பப்பை இன்னும் பல உறுப்புகளில் கேன்சர் வருவதற்கு இக்கிரகம் காரணமாகிறது. 

ராகு என்ற கிரகம் விகாரம் மற்றும் யாரும் கட்டுப்படுத்த முடியாத மென்மேலும் வளர கூடிய காரகத்துவத்தை கொண்டுள்ளதால் இந்த கிரகம் 6 ,8 ,12 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கண்ணுக்கு தெரியும் கேன்சர் அமைப்பு உருவாகும். 

4,10 ஆகிய பாவங்கள் அதிகப்படியான உற்பத்தியை குறிக்கும் .ஆகையால் இந்த 6 ,8 ,12 ஆகிய பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ராகு/ கேது /சனி வந்து 4,10 ஆகிய பாவங்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் ஏதோ ஒரு விஷயம் அதிகமாக உற்பத்தியாக கூடிய சூழ்நிலை உருவாகும். 

மாறாக 6, 8 ,12 ஆகிய பாவங்கள்  சனி/ ராகு /கேது நட்சத்திரத்தில் இருந்து 4,10,8,12 தொடர்பு கொண்டாலும் இப்பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும். 

மேலே குறிப்பிட்டுள்ள கிரக மற்றும் பாவ தொடர்புகளை கொண்ட 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் கால சக்கரத்திற்கு மேஷ தொடர்பு பெற்றால் தலையில் கேன்சர் கட்டி உருவாகும். ரிஷப தொடர்பு பெற்றால் காது, மூக்கு, தொண்டை அல்லது வாயில் கேன்சர் கட்டிகள் வரும். கடக தொடர்பு பெற்றால் நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் வரும். சிம்ம தொடர்பு பெற்றால் இருதய கேன்சர் நோய் வரும். கன்னி தொடர்பு பெற்றால் வயிற்றில் கேன்சர் நோய் வரும். துலாம் தொடர்பு பெற்றால் சிறுநீரகம் அல்லது கர்ப்பப்பை கட்டிகள் வர வாய்ப்புண்டு. விருச்சிக தொடர்பு பெற்றால் பிறப்புறுப்பு அல்லது மலதுவாரத்தில் வர வாய்ப்புண்டு. இப்படி கேன்சர் கட்டிகள் என்பது 12 இராசிகளை தொடர்பு கொள்ளும்போது வெவ்வேறு விதமாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. 

ஆக, இப்பிரச்சினையை ஜாதகத்தில் கண்டறிய  நிச்சயமாக முடியும்!

6,8,12" இந்த மூன்று பாவங்கள்


★6 8 12 பாவங்கள் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளையும் முக்கியமான பிரச்சனைகளையும் கொண்டிருக்கும் பாவங்களாகும்.

★அதாவது ஆறாம் பாவம் என்பது கடன், வம்பு, வழக்கு,கோர்ட், கேசு அடிதடி, சண்டை, போட்டி பொறாமைகள், எதிரிகள் சத்துருக்கள், போன்றவற்றை உள்ளடக்கிய பாவமாகும்.

★எட்டாம் பாவம் என்பது ஆயுள் அசிங்கம் அவமானம் பயத்தை கொடுக்கக்கூடிய பாவம் தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பாவம்.

★பன்னிரண்டாம் பாவம் என்பது விரயச் செலவு அயன சயன போகம் சுகபோக வாழ்க்கை மருத்துவமனை மற்றும் முக்தி எனும் ஸ்தானம் இவற்றை உள்ளடக்கிய பாவங்களாகும்.

★இந்த மூன்று விஷயங்கள் மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு பிரச்சனைகள் என்பது வரும் மற்றும் ஒரு மனிதனின் முக்கியமான தேவைகளும் இந்த பாவங்களும் தான்.இந்த மூன்று பாவம் சார்ந்த விஷயங்களை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவித்தே தீரவேண்டும் என்பதுதான் விதி.

★6 8 12-ஆம் பாவங்கள் எதற்கு அவ்வளவு முக்கியத்துவமான பாவங்கள் என்றால் ஒரு மனிதன் தான் பிறக்கும் பொழுது அவனுடைய முன்ஜென்மத்தில் செய்த தவறை பழிதீர்க்க இந்த ஜென்மத்தில் இந்தப் பிரபஞ்சம்,இந்த இயற்கை 6 8 12 பாவங்கள் மூலமாகத் தான் நம்மை பழி தீர்க்கும்.

★ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அவன் சந்திக்க கூடிய முதல் சவால் அல்லது முதல் படி 6ம் பாவம் மூலமாக இருக்கும்.6ம் பாவம் என்பது உத்தியோகம்.6ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 7ம் பாவம் எனும் திருமணம் அவனுக்கு சுலபமாக விடும்.

★8ம் பாவம் என்பது ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு அவன் சந்திக்கக் கூடிய விஷயங்கள் பயம், negative எண்ணம், மற்றும் அசிங்கம் ,அவமானம் போன்றவைகள் ஆகும்.இந்த 8ம் பாவத்தை ஒருவன் கடந்துவிட்டால் 9,10,11, பாவங்கள் ஒருவனுக்கு சுலபமாகக் கிடைத்துவிடும்.

★12 ம் பாவம் என்பது விரயச் செலவுகள் ஒருவன் தன் வாழ்க்கையில் அவனுடைய குறிப்பிட்ட வயதில் தனக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் விரயச் செலவுகள் ஆகும்.

★இந்த 3 பாவங்களின் ஆதிபத்தியங்கள் தான் ஒருவனுக்கு மிக முக்கியமான தேவைகள் ஆகும்.அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த 6 8 12ம் பாவங்களில் இந்த முக்கியமான ஆதிபத்தியங்களை வைத்திருக்கிறார்கள்.

★இந்த மூன்று பாவங்களில் தான் நமக்கு பிரச்சனைகள் என்பது இருக்கும்.இந்த இயற்கை அல்லது இந்த பிரபஞ்சம் நம்மை சோதிக்க கூடிய இடங்களும் இந்த மூன்று பாவங்கள் தான்.

★ஒரு மனிதன் சாதாரணமாக இந்த மூன்று பாவத்தையும் கடப்பது என்பது கடினமாகும்.ஏனென்றால் நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்தில் இந்த பிரபஞ்சம் இந்த மூன்று பாவங்களை பயன்படுத்தி தான் நம்மை சோதனைக்கு உள்ளாக்கும் அல்லது நம்மை கஷ்டப்படுத்தும்.

★இப்பொழுது ஆறாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதே ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.

1.(6ம் பாவம்)

★ஆறாம் பாவத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன் வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டி பொறாமை எதிரி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

★(6 பாவத்தில் "புதன்")

★புதன் ஆறாம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றின் மூலமாக கடன் பிரச்சினை, வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

★இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றால் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் புதன் இருக்கிறதோ இவர்கள் என்றைக்குமே கடன்,சீட்டு,ஏலம்
loan, sharemarket,stockmarket, trading போன்றவற்றில் முதலீடு செய்வதோ
கடன் வாங்குவதோ கடன் கொடுப்பதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது.

★இவர்கள் என்றைக்குமே தங்களுடைய பெயரில் சீட்டு ஏலம்,loan,போன்றவைகள் எடுக்கக் கூடாது.

★(6ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து உத்தியோகம் இதன் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போட்டிகள் பொறாமைகள் போன்ற பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும்.

★இந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்க இயலும்.

★செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் வீடு வண்டி சொத்து உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் முன்கூட்டியே சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★மேலும் இதனை சார்ந்தது இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதனை அடைவதற்கு சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தந்தை மூலமாகவும் அல்லது அரசாங்கம் மூலமாகவும் மருத்துவ செலவுகள் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

★இந்த விஷயங்களை முன்கூட்டியே நாம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருந்து கொண்டால் இந்த விஷயத் தில் இருந்து தப்பிக்க இயலும்.

★மேலும் சூரியன் ஆறாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் மருத்துவ செலவுகள் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கத்தை சார்ந்தும் சற்று கவனமாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

★மருத்துவ செலவுகள் சார்ந்த இவர்கள் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு படாதபாடு ஆகிவிடும்.

★(6ம் பாவத்தில் "சனி")

★சனி ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தொழில் மூலமாக கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போட்டி பொறாமைகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

★மேலும் தொழில் சார்ந்து இவர்கள் எப்போதுமே கவனமாக இருக்கவேண்டும் தொழிலுக்காக என்றைக்குமே இவர்கள் மற்றவர்களிடம் கடன் வாங்கவே கூடாது வாங்கினால் அதை அடைப்பதற்கு மிகவும் சிரமமாகிவிடும்.

★(6ம் பாவத்தில் "குரு")

★குரு யாருக்கெல்லாம் ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் மூலமாகவும் மற்றும் ஆன்மீக செலவுகள் சார்ந்தும் இவர்களுக்கு கடன் பிரச்சினை வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற பிரச்சனை ஏற்படும்.

★யாருக்கெல்லாம் குரு ஆறாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்கள் கண்டிப்பாக கடன் பிரச்சனையில் சிக்குவார்கள்.

★குரு ஆறாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் என்றைக்குமே இவர்களுக்கு உத்தியோகம் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் விருப்பத்திற்காக அந்த பணத்தை என்றைக்குமே
அனுபவிக்கவே முடியாது.

★(6ம் பாவத்தில் "சுக்கிரன்)

★ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவி மூலமாகவும் காதலி அல்லது காதலன் மூலமாகவும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு கோர்ட் கேசு அடிதடி சண்டை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

★மேலும் இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருந்து கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க இயலும்.

★இவர்கள் என்றைக்குமே மனைவி மற்றும் காதலன் காதலி இவர்களை சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★ஆறாம் பாவத்தில் "ராகு,கேது சந்திரன்" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

2.( 8ம் பாவம்)

★எட்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்தும் அந்த கிரக உறவு காரகத்துவம் சார்ந்தும் நமக்கு பயம் என்பது இருக்கும்.

★(8ம் பாவத்தில் "புதன்")

★8ம் பாவத்தில் புதன் இருப்பவர்களுக்கெல்லாம் படிப்பு சார்ந்த விஷயங்களிலும்,mathematics accounts, documents,இது சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★பத்திரப் பதிவு,ஆவணங்கள், படிப்பு சார்ந்த விஷயங்கள் இவர்களுக்கு பயம் என்பது சற்று இருக்கும்.

★(8ம் பாவத்தில் "சனி")

★சனி எட்டாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ இவர்கள் வாழ்க்கையில் எதற்குமே பயப்பட மாட்டார்கள்.

★என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் வருவதை நாம் எதிர்கொள்வோம் என்ற மனோபாவம் இவர்களுக்கு இருக்கும்.

★(8ம் பாவத்தில் "செவ்வாய்")

★எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்களெல்லாம் பயத்தின் மூலமாக வீரத்தை வெளிப்படுத்துபவர்கள்.

★மேலும் அவர்களுக்கு உத்தியோகம் மூலமாகவும் வீடு வண்டி சொத்து  மூலமாகவும் பயம் இருக்கும்.

★(8ம் பாவத்தில் "குரு")

★யாருக்கெல்லாம் குரு எட்டாம் பாவத்தில் இருக்கிறதோ இவர்களுக்கு குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் பயம் என்பது இருக்கும்.

★குரு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் வாகனம் ஓட்டும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இவர்களுக்குத் தான் அதிகம்.

★(8ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மனைவியை சார்ந்தும் காதலன் அல்லது காதலியை சார்ந்தும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

★(8ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் மருத்துவம் சார்ந்த விஷயங்களிலும்
தந்தையை சார்ந்த விஷயங்களிலும் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★சூரியன் எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள்.

★(8ம் பாவத்தில் "சந்திரன்")

★சந்திரன் எட்டாம் பாவத்தில்
 இருப்பவர்களுக்கெல்லாம் தண்ணீரைக் கண்டால் பயம் என்பது இவர்களுக்கு இருக்கும்.

★மேலும் இவர்கள் தண்ணீர் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★(8ம் பாவத்தில் "ராகு")

★ராகு எட்டாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் அமானுஷம் சார்ந்த விஷயங்களிலும் ஆவிகள் பேய்கள் இதனை சார்ந்த விஷயங்களிலும் இவர்களுக்கு பயம் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் மின்சாரம் மற்றும்
electrical and electronics  சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போதும் 
மற்றும் வாகனம் ஓட்டும்போதும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

★கேது எட்டாம் பாவத்தில் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

3.(12ம் பாவம்)

★பன்னிரெண்டாம் பாவத்தில் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்து நமக்கு
விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★(12ம் பாவத்தில் "சூரியன்")

★சூரியன் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்தும் தந்தையை சார்ந்தும் அரசாங்கம் சாந்தும் நமக்கு விரயச் செலவுகள் என்பது கண்டிப்பாக வரும்.

★மேலும் சூரியன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக விரயச் செலவுகள் என்பது வரும்.

★இதனை சார்ந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சனி")

★சனி பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் தொழில் மூலமாக விரயச் செலவுகளும் பணக் கஷ்டங்களும் இவர்களுக்கு ஏற்படும்.

★மேலும் சனி 12 ஆம் பாவத்தில் இருந்தால் தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டும்.தொழிலுக்காக அவர்கள் கடன் வாங்கவே கூடாது.

★(12ம் பாவத்தில் "புதன்")

★புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால்
கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் போக கூடாது.மற்றும் இதனை சார்ந்து இவர்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "சுக்கிரன்")

★சுக்கிரன் 12ம் பாவத்தில் இருந்தால் மனைவி மூலமாகவும் அல்லது காதலன் மற்றும் காதலி மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★இதனை சார்ந்த விஷயங்களில் இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "செவ்வாய்")

★செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து உத்யோகம் இதனை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரைய செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இந்த விஷயங்களை சார்ந்து இவர்கள் முன்கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★(12ம் பாவத்தில் "குரு")

★குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் குழந்தைகள் மூலமாகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் விரயச் செலவுகள் என்பது இருக்கும்.

★மேலும் இவர்கள் குழந்தைகள் சார்ந்த விஷயத்திலும் ஆன்மீகம் சார்ந்த விஷயத்திலும் விரயச் செலவுகள் செய்ய முன் கூட்டியே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

★பன்னிரெண்டாம் பாவத்தில் "சந்திரன், ராகு, கேது" இந்த மூன்று கிரகங்கள் இருந்தால் அதற்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

★6,8,12ம் பாவத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அந்த பாவத்தின் அதிபதி எந்த எந்த வீட்டில் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்தின் மூலமாக அந்த பாவங்கள் செயல்படும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

முற்பிறவிகளில் ஏற்பட்ட சாபங்கள், பாவங்கள்


 லக்னத்திற்கு
2ல் செவ்வாய், ராகு, கேது, சனி இவர்கள்
இருந்து சுபகிரகம் பார்வை பெறாவிட்டால் இந்த ஜாதகருக்கு வாழ்வில் சுகம் என்பதே இராது. 

2ல் செவ்வாய் இருந்தால்                  
பிறர் செய்வினை செய்திருப்பார்கள். கேது இருந்தால் இவரே இவரது மனைவிக்கு
செய்வினை செய்திருப்பார்.
சனி இருந்தால் ஜாதகரின் முன்னோர்கள் பிறருக்கு
செய்வினை செய்திருப்பார்கள். ராகு 2ல்
இருந்தால் பிறரின் செல்வத்தை வஞ்சித்தவனாவன். இதனால் வேலையில் தடை, குடும்பம் அமை
யாத சூழலை உருவாக்கும்.              5ல் செவ்வாய் இருப்பது முன்ஜென் மாவில் சீடன்  கேட்ட
கேள்விக்கு சரியான பதில்கூறாததினால் ஏற்பட்ட சாபத்தால் வந்ததாகும். இதனால் இப்பிறவியில் சின்ன விஷயத்திற்கெல்லாம் சத்தம் போட்டு பேசுவார். ஐந்தில சனி
இருந்தால் ஒருமுறைக்கு பலமுறை கேட்ட
பின்பே பதில்கூறுவார். இது புத்திரதோஷ அமைப்பாகும். ராகு இருந்தால் எந்நேரமும் போதையில் இருப்பான். 5ல் கேது இருந்தால் ஞானிபோல் பேசுவான்.  முன் பிறவியில் குழந்
தைகளை அடித்ததாலும், படிக்காதவர்களை ஏளனமாக பேசியதாலும் வந்ததாகும். தாயை மதிக்காததினாலும் இந்த அமைப்புகள் வருவதாகும்.8ல் செவ்வாய் இருப்பது பிறர்மனை, வீடு நிலத்தை அபகரித்ததால் வந்தது. சனி இருப்பது பொய்சாட்சி சொன்னதால் வருவது. இது அஷ்டம
சனி மூலம் ஆட்டிப்படைக்கும்.8ல் ராகு இருப்பது பிறர்மனைவியின் மீது இச்சைக்
கொண்டதாலும், அவற்றின் மூலம் பெற்ற
சாபத்தினால் வருவது  ஆகும். எட்டில் கேது இருப்பது வயோதிக காலத்தில் பிறர்மனைவி மீதும்,
இளம்பெண்கள் மீதும் இச்சை கொண்டதால் வந்தது. இதனால் ஜாதகருக்கு மாரக
தோஷமும், மனைவிக்கு மாங்கல்ய தோஷமும் ஏற்படும். 11ல் செவ்வாய் இருப்பது
லாபத்திற்காக பிறரை வஞ்சித்ததால் வந்ததாகும். சனி இருப்பது வேலை எதுவும்
செய்யாமல் முன்னோர்களின் சொத்துக்
களை அனுபவித்ததால் வந்தது.. ராகு இருப்பது முன்னோர்கள் வஞ்சகமாக சேர்த்
தசொத்துக்களை அனுபவித்ததினால் வந்ததாகும். கேது 11ல் இருப்பது முன்னோர்கள் உயர்பதவியில் இருந்து தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை அனுபவித்து அழித்ததனால் வந்ததாகும். இது
தான் கர்ம அமைப்புக்கள் என்று சொல்லத் தக்கன

Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570

Sri chakram


ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. எதிரிகள் தொல்லை போன்றவைகளுக்கு வாய்ப்புகளே இல்லை. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை வேலை செய்யாது கட்டுப்படும். ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு எந்த விதமான ஜாதக, கிரக தோசங்களும்  பாதிக்காது.


பிரம்ம புராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஸ்ரீ சக்கரத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பூஜித்து எல்லா பௌதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை (முக்தி/ மறுபிறவி சுழற்சி விடுதலை) அடைய முடியும்.


சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும் கூட, ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!


பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் ஸ்ரீ சக்கரத்தை விதிமுறைப்படி ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!


வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலி. அவனைவிட அதிர்ஷ்டசாலி ஸ்ரீ சக்கரத்தை முறையாக தர்சனம் செய்பவனே. அப்படிவனையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!


சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் ஸ்ரீ வித்யா தந்திரம் எனும் வாலை பரமேஸ்வரியை, முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


இரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.


இரசசமுச்சயம் என்ற நூலில், ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்த உபாயமுமில்லை. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. 


இந்த ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வாலை தாயின் ஸ்ரீ சக்கர உபாசனை தீக்ஷை புண்ணியம் செய்தவர்களுக்கும், ஆசை இல்லாதவர்களுக்கும், இதுவே கடைசி பிறவியாக பிறந்தவர்களுக்கும், மறுபிறவி இன்றி பிறப்பு இறப்பு சுழற்சியில் விடுதலை பெற்று பிறவாமை வேண்டுபவர்களுக்கும், தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்க முடியும்.சில  யந்திரங்கள் முறைப்படி சுத்தி செய்யப்படாத சாபநிவர்த்தி செய்யப்படாதவைகளே கிடைக்கின்றன.  


தங்களுக்குக்காக குருமார்களால் உருவாக்கி தரும் ஸ்ரீ யந்திரத்தை பூஜிக்கலாம்.


இதைத்தவிர வேறெந்த முறையிலும் வாங்கி உபயோகிப்பதால் பலனில்லை


ஏற்கனவே சித்தி செய்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சக்கர யந்திரத்தை உருவாக்க வேண்டும்.


வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். 48 நாட்கள் விரதமிருந்து இவ்வழிபாட்டினை நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.


ஸ்ரீ சக்ரத்திற்கு துளசியாலும், தாமரையிதழ்களாலும் அர்ச்சனை செய்து, 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.


அதேபோல், சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.


மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும்.


ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.


அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் (திதி நித்யா பூஜை), தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர்.


நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.


ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை (ஸ்ரீ தாரா தேவி) மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம்.


பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.


ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது, கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.


Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570