சயன தோஷம் என்பது, இளம் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மையை தற்காலிகமாக ஏற்படுத்தி அதில் நாட்டத்தை குறைக்கும். அல்லது திருப்தியின்மைய தந்து, அதன் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
இப்படிப்பட்ட தோஷம் இருவரில் ஒருவருக்கு நேரலாம். சில நேரங்களில் அபூர்வமாக இருவருக்கும் நேர்வது உண்டு. விவாக தசவித பொருத்தத்தில் யோனிப்பொருத்தத்தோடு தொடர்பு உடையது இது. இந்த பொருத்தம் முறையாக அமையவில்லை என்றால், அவர்களுக்கு சயன தோஷம் பெரும்பாலும் இருக்கும்.
எனவே யோனிப்பொருத்தம் என்பது முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ஒன்றாகவும், அவசியம் இருந்தாக வேண்டும் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது.
அஸ்திவாரம் பலவீனமானால் அதில் வீடு கட்டினால் தாங்காது என்பது போல, அடிப்படை தோஷமான இது இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு வழி கிடைக்காமல் தடை ஏற்பட்டு விடும். புத்திர பாக்ய தோஷம் என்பது நிரந்தரமாகவோ அல்லது மிக நீண்ட காலமோ இருக்கக்கூடியது. சயன தோஷம் என்பது தற்காலிகமான குறுகிய காலம் கொண்டது. தானாகவே நீங்கிவிடக்கூடியது. உடனடியாக நீங்க பரிகாரவழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
அதிக பட்சமாக 3 வருஷம் 4 மாதம் நீடிக்கும். குறைந்த பட்சமாக 10 மாதம் நீடிக்கும்.
இதன் கிரக அமைப்பே சற்று வித்தியாசமானதாகும். சயனஸ்தானம் எனப்படும் விரயத்தோடு (பன்னிரெண்டாம் வீட்டின் ) தொடர்பு உடையது இது.
இந்த ஸ்தானத்தில் சுபாவ சுபர்களான குரு, சுக்கிரன், சுப புதன், சுப சந்திரன் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இருந்தால் சயனதோஷம் ஏற்படும். ஸ்ரீ வராகிமிகிரர் தத்துவப்படி, ஒரு பாபஸ்தானத்தில் சுபாவ சுப கிரகம் இருந்தால், அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறையும். அதன் படி விரயஸ்தானத்தில் சுபாவ சுப கிரகங்கள் இருக்கும் போது, அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறைந்து தோஷம் உருவாகிறது.
1. குரு என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும்போது சயனதோஷம் உருவாவதோடு, புத்திரத்தடை ஏற்படுகிறது. ஏனென்றால் குருவின் காரகத்த்துவத்தில் ஒன்று புத்திர பாக்கியம்.
2. சுக்கிரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் உருவாவதோடு, தாம்பத்திய உறவில் திருப்தியின்மையோ அல்லது நாட்டமின்மையோ ஏற்படுகிறது. ஏனென்றால் சுக்கிரனின் காரகத்துவத்தில் ஒன்று காமம்.
3. புதன் என்ற கிரகம் சுபாவ சுபத்தன்மையோடு இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, புத்திர பாக்கிய தடையும் ஏற்படுத்துகிறது. புதனுக்கு புத்ர ஹீனன் என்ற காரகத்துவம் உண்டு. அதாவது ஜனன ஜாதகத்தில் புதன் கெட்டுபோக வேண்டும் அதாவது அஸ்தங்கதம் அடையவேண்டும். அல்லது 6,8,12 ஆகிய இடங்களில் மறைய வேண்டும். அப்போதுதான் புத்ரஹீனமும் கெட்டு மறைந்து புத்ர பாக்கியம் உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்னிலையில் புதனின் தொடர்பு புத்ர பாக்ய ஸ்தானத்திற்கு ஏற்பட்டால் புத்திர தடை இருக்காது. புதன் நல்ல நிலையில் இருந்தால் புத்ர பாக்ய தடை உருவாகும். இங்கு புதன் விரயத்தில் மறைவதால் புத்திர பாக்கியம் இருக்கும். ஆனால் சயனதோஷத்தின் காரணமாக தாமதமாகும்.
4. சந்திரன் என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, பெண்மை குறைவையும் ஏற்படுத்தி, தாம்பத்தியம் கசக்க செய்கிறது. அதாவது, கருமுட்டை முதிர்ச்சியற்ற தனமையுடனோ அல்லது குறைவாகவோ உருவாவது. மேலும் சுரோணித சுரப்பி சரிவர செயல்படாமல் இருப்பது போன்றவை பெண்மை குறைவு எனப்படும். இது பெண்கள் ஜாதகப்படி மட்டுமே நேரும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
No comments:
Post a Comment