1.நீங்கள் எந்த கரணத்தில் பிறந்துள்ளீர்களோ மேற்கண்ட கரண நாதனின் அதிபதிக்குரிய ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள், மேற்கண்ட அதிபதி உச்சம் மற்றும் நீசம் அடையக்கூடிய ராசிகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைய வாய்ப்புண்டு.
2.சுய ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு மறைந்த கிரகத்தின் காரக உறவுகள், அந்த கிரகம் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறதோ அந்த ஆதிபத்தியத்தை குறிப்பிடும் பாவக உறவுகளிடத்தில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
3.உச்ச சந்திரனுடன் தொடர்பு பெற்ற சனி அல்லது நீர் ராசியில் நின்ற குருவின் பார்வையைப் பெற்ற சனி, கடல் சார்ந்த துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்பினை தருவார்.
4.சுபர் தொடர்பில்லாத சனியின் பார்வை ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை மட்டுப்படுத்த மட்டுமே செய்யும். முற்றிலுமாக இல்லாமல் செய்து விடாது. ஆனால் அந்த கிரகம் பெற்றுள்ள ஆதிபத்தியத்தை பெரிய அளவில் பாதிக்கும்.
5.எட்டாம் வீட்டை சனி, செவ்வாய் பார்த்தாலும் எட்டாம் வீட்டை அல்லது எட்டாம் வீட்டு அதிபதியை குரு பார்க்கும் பொழுது ஆயுளுக்கு பெரிய அளவில் பாதிப்பில் இருக்காது.
6.ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தால் மணவாழ்க்கை பாதிக்குமா?
ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்து விட்டாலே மணவாழ்க்கை பாதிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. மேற்கண்ட ஏழாம் அதிபதியின் தசாக்காலங்கள் வருகிறதா? வீடு கொடுத்தவரின் நிலை போன்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் களத்திரக்காரகனான சுக்கிரன் வலுத்துவிட்டால் மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை. மணவாழ்க்கை நல்லபடியாகவே செல்லும்.
7.ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகளின் புத்திகள் எப்படிப்பட்ட நிலையில் நல்ல பலன்களை தரும்?
6, 8, 12 ஆம் அதிபதியின் வீட்டை சுபகிரகங்கள் பார்த்து, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதியையும் சுபர்கள் பார்த்தால் 6,8,12 ஆம் அதிபதியின் புத்திகளும் நல்ல பலன்களைத் தரும்.
8.சகோதரர்கள் வகையில் எதிர்ப்புகளைச் சந்திக்கக் கூடியவர்கள், கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை இல்லாத நிலையில் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் ஆலயங்களில் பக்தர்களுக்கு செவ்வாழைப்பழம் தானம் செய்து வருவது நல்லதாகும்.
9.ஐந்தாம் இடம் உழைப்பில்லாத வருமானம், ஷேர் போன்ற மறைமுக வருமானங்களை குறிக்கக்கூடிய இடம். ஐந்தாம் இடம் வலுவாக இருக்கும் பொழுது ஜாதகர் எளிய முறைகளில் பணம் சம்பாதிப்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்.
10.சுகஸ்தானதிபதியான நான்காம் அதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது ஜாதகர் தன்னுடைய சுகபோக வாழ்விற்காக எந்த தவறையும் செய்வார்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
No comments:
Post a Comment