Monday, April 1, 2024

Sri chakram


ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. எதிரிகள் தொல்லை போன்றவைகளுக்கு வாய்ப்புகளே இல்லை. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை வேலை செய்யாது கட்டுப்படும். ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு எந்த விதமான ஜாதக, கிரக தோசங்களும்  பாதிக்காது.


பிரம்ம புராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஸ்ரீ சக்கரத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பூஜித்து எல்லா பௌதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை (முக்தி/ மறுபிறவி சுழற்சி விடுதலை) அடைய முடியும்.


சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும் கூட, ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!


பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் ஸ்ரீ சக்கரத்தை விதிமுறைப்படி ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!


வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலி. அவனைவிட அதிர்ஷ்டசாலி ஸ்ரீ சக்கரத்தை முறையாக தர்சனம் செய்பவனே. அப்படிவனையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!


சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் ஸ்ரீ வித்யா தந்திரம் எனும் வாலை பரமேஸ்வரியை, முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


இரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.


இரசசமுச்சயம் என்ற நூலில், ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்த உபாயமுமில்லை. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. 


இந்த ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வாலை தாயின் ஸ்ரீ சக்கர உபாசனை தீக்ஷை புண்ணியம் செய்தவர்களுக்கும், ஆசை இல்லாதவர்களுக்கும், இதுவே கடைசி பிறவியாக பிறந்தவர்களுக்கும், மறுபிறவி இன்றி பிறப்பு இறப்பு சுழற்சியில் விடுதலை பெற்று பிறவாமை வேண்டுபவர்களுக்கும், தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்க முடியும்.சில  யந்திரங்கள் முறைப்படி சுத்தி செய்யப்படாத சாபநிவர்த்தி செய்யப்படாதவைகளே கிடைக்கின்றன.  


தங்களுக்குக்காக குருமார்களால் உருவாக்கி தரும் ஸ்ரீ யந்திரத்தை பூஜிக்கலாம்.


இதைத்தவிர வேறெந்த முறையிலும் வாங்கி உபயோகிப்பதால் பலனில்லை


ஏற்கனவே சித்தி செய்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சக்கர யந்திரத்தை உருவாக்க வேண்டும்.


வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். 48 நாட்கள் விரதமிருந்து இவ்வழிபாட்டினை நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.


ஸ்ரீ சக்ரத்திற்கு துளசியாலும், தாமரையிதழ்களாலும் அர்ச்சனை செய்து, 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.


அதேபோல், சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.


மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும்.


ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.


அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் (திதி நித்யா பூஜை), தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர்.


நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.


ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை (ஸ்ரீ தாரா தேவி) மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம்.


பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.


ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது, கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.


Ambharish g

savithaastro@gmail.com

savithaastro.blogspot.com

9790111570

No comments:

Post a Comment