ஜோதிடத்தில் 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் ஜாதகருக்கு நோய் ,வலி வேதனை ,விபத்து அங்கஈனம் ஆகியவற்றை கொடுக்கும் பாவங்களாகும்.
ஆக அந்த 6,8,12 ஆகிய பாவங்களுக்கு உபநட்சத்திரமாக ராகு (அல்) கேது (அல்) சனி ஆகிய கிரகங்கள் வந்து 8,12 ஆகிய பாவங்களை தொடர்புகொண்டு தசா நடக்கும் காலத்தில் அவர்களுக்கு கேன்சர் நோய் உருவாகக்கூடிய சூழ்நிலை அமையும்.
கேது என்ற கிரகம் கண்ணுக்குத் தெரியாத மற்றும் குணப்படுத்த முடியாத கட்டிகளை குறிக்கும் .ஆக நம் உடலின் உட்புறத்தில் இருக்கக்கூடிய மூளை ,ரத்தம், கர்ப்பப்பை இன்னும் பல உறுப்புகளில் கேன்சர் வருவதற்கு இக்கிரகம் காரணமாகிறது.
ராகு என்ற கிரகம் விகாரம் மற்றும் யாரும் கட்டுப்படுத்த முடியாத மென்மேலும் வளர கூடிய காரகத்துவத்தை கொண்டுள்ளதால் இந்த கிரகம் 6 ,8 ,12 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கண்ணுக்கு தெரியும் கேன்சர் அமைப்பு உருவாகும்.
4,10 ஆகிய பாவங்கள் அதிகப்படியான உற்பத்தியை குறிக்கும் .ஆகையால் இந்த 6 ,8 ,12 ஆகிய பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ராகு/ கேது /சனி வந்து 4,10 ஆகிய பாவங்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் ஏதோ ஒரு விஷயம் அதிகமாக உற்பத்தியாக கூடிய சூழ்நிலை உருவாகும்.
மாறாக 6, 8 ,12 ஆகிய பாவங்கள் சனி/ ராகு /கேது நட்சத்திரத்தில் இருந்து 4,10,8,12 தொடர்பு கொண்டாலும் இப்பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள கிரக மற்றும் பாவ தொடர்புகளை கொண்ட 6 ,8 ,12 ஆகிய பாவங்கள் கால சக்கரத்திற்கு மேஷ தொடர்பு பெற்றால் தலையில் கேன்சர் கட்டி உருவாகும். ரிஷப தொடர்பு பெற்றால் காது, மூக்கு, தொண்டை அல்லது வாயில் கேன்சர் கட்டிகள் வரும். கடக தொடர்பு பெற்றால் நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் வரும். சிம்ம தொடர்பு பெற்றால் இருதய கேன்சர் நோய் வரும். கன்னி தொடர்பு பெற்றால் வயிற்றில் கேன்சர் நோய் வரும். துலாம் தொடர்பு பெற்றால் சிறுநீரகம் அல்லது கர்ப்பப்பை கட்டிகள் வர வாய்ப்புண்டு. விருச்சிக தொடர்பு பெற்றால் பிறப்புறுப்பு அல்லது மலதுவாரத்தில் வர வாய்ப்புண்டு. இப்படி கேன்சர் கட்டிகள் என்பது 12 இராசிகளை தொடர்பு கொள்ளும்போது வெவ்வேறு விதமாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.
ஆக, இப்பிரச்சினையை ஜாதகத்தில் கண்டறிய நிச்சயமாக முடியும்!
No comments:
Post a Comment