புனர்பு (Being renewed) என்பதன் பொருள் சம்ஸ்கிருதத்தில் அடிக்கடி புதுப்பித்து கொண்டு இருத்தல் அல்லது தான் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுதல் என்பதாகும்.
சனியின் வேலை என்ன ?? ஆங்கிலத்தில் இன்வெர்ஸ் என்ற வார்த்தை உண்டு. அதாவது இருப்பதை தலைகீழாய் காட்டுவது. சனியின் வேலையும் இதுவே. சனி பார்வை அல்லது இருப்பு அல்லது சாரம், இவை எதுவாக இருந்தாலும், அது எந்த கிரகத்தின் மீது இருக்கிறதோ.. அதன் காரகத்தன்மையை மாற்றிவிடும். அதற்க்கு உதாரணம் ராஜா கிரகமான குருவை (ஆன்மீகம் காரகம்) சனி பார்க்க, குருவின் காரகன் தலைகீழாய் மாறி, நாத்திகம் பேசுவான் அல்லது கடவுள், சாஸ்திரம் சம்பரதாயம் இல்லை என்பான்.
புனர்பு தோஷம் எப்படி உண்டாகிறது.
எந்த ஒரு கிரகத்திற்க்கும், அதன் இயக்க பலம் கேந்திரம் (மையம் சம்ஸ்கிருதத்தில்) என்ற மைய புள்ளியில் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. பல முன்னணி யோகம் சந்திரன் கேந்திரத்தில் தான் உண்டாகிறது. உதாரணமாக கஜ கேசரி யோகம் போன்ற பல யோகககள் சந்திரனின் பலத்தால் உண்டாகின்றன. இதற்கு மாறாக, சந்திரன் கேந்திரத்தில் தனக்கு எதிரி என கருத்தும் சனி நிற்க மற்றும் பார்க்க, மற்றும் சாரம் பெற, சந்திரன் பாதிக்கப்படுகிறார். சந்திரன் காரகத்தில் மாற்றம் ஏற்படுகிறது. சந்திரன் மிக வேகமாக இடம் மாறும் தன்மை பெற்றது அது போல தான் நாம் மனமும்.. மேலும் அந்த மனத்தின் மேல், சனி தாக்கம் உண்டானால், மனம் சரியான நிலையில் இருப்பதில்லை, மனத்தில் சஞ்சலம் மற்றும் சலனம் ஏற்படுத்துகிறார் சனி. இதனால், முடிவுகளை சரியாக எடுக்க முடியாமை மற்றும் மன குழப்பம் ஏற்படுத்தி, திருமணம் மற்றும் மாத்ரு வழி ஆதரவு இல்லாமல் செய்தால், மன நோய் அல்லது மன குழப்பம் போன்ற சந்திர கரகத்துவ பாதிப்புகளை தருகிறது இந்த புனர்பு. சனி என்பவர் கர்ம காரகன், பூர்வ ஜென்ம மற்றும் தற்போதய பாவங்களின் பாதிப்பை தருபவர். இந்த புனர்பு தோஷம் நாம் செய்த பாவத்தால் ஏற்படுகிறது என்பது என் கருத்து. மேலும், சனியின் எதிரியான சூரியன் மற்றும் செவ்வாய் அல்லது லக்ன மற்றும் ராசியின் யோகாதிபதி, இவர்கள் சந்திரன் மற்றும் சனியின் இடையே நிற்க.. புனர்பு தோஷ பங்கம் ஏற்படுகிறது.
அம்பரீஷ் ஸாஸ்த்ரி
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment