#ஸ்ரீருத்ர_மகிமை...
#ருத்ரம் என்னும் துதி
யஜுர் வேதத்தில் உள்ளது...
இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.
இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணருபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.
இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் #நல்ல_தூக்கத்தையும்_தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம்........
பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக #சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.
#நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை
#சதருத்ரீயம் என்று அழைப்பர்.
#சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் காதால் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும்.
சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் #ருத்ரபாராயணம் நடைபெறும்.
#நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
#சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும் அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 #மஹாமந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் நடுவிலுள்ள ஐந்தாவது அநுவாகத்தில் #நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.....
11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் #ம்ருயுஞ்ஜயமந்திரம்
(ஓம் த்ரயம்பகம் யஜாமஹே--------)
வருகிறது.
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்..........
#ஓம்நமசிவாய........
மஹாபெரியவாசரணம்.....
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment