குரு சுக்கிரன் சனி கிரகயுத்தங்கள்:
குரு
குரு சுக்கிரனால் வெற்றிகொள்ளப்பட்டால் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள், பாகிஸ்தானின் Potohar பகுதிகள்,ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாபின் வடமேற்குப் பகுதிகள், மதுரா, சாளுவம், கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதிகளான அலகாபாத்தின் தென்மேற்குப் பகுதிகள்,வங்கதேசம் ஆகியவைகளும் கால்நடைகளும் உணவுதானியங்களும் சேதமடையும்.
குருவை செவ்வாய் ஜெயிக்குமானால் நாட்டின் மத்தியப்பகுதிகளும் அவற்றை ஆட்சி செய்பவர்களும், பசுக்களும் பாதிக்கப்படுவார்கள்.
சனி குருவை வெற்றிகண்டால் ராஜஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்கள், பாகிஸ்தானின் பகவல்பூர்,பலுசிஸ்தான் மற்றும் முல்தான் பகுதிகள் ஆகியவையும் பிராமணர்களும் பாதிக்கப்படுவார்கள்.
புதன் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள், நேர்மையாளர்கள், படைவீரர்கள் மற்றும் நாட்டின் மத்தியப்பகுதிகள் பாதிப்படையும். மேலும் யானை,குதிரை, முதல்வர் மற்றும் மந்திரிகள், சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், பண்டிதர்கள், தொண்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், இலக்கணப்பண்டிதர்கள், தத்துவ ஞானிகள், வேதபண்டிதர்கள், அரசியல்வாதிகள், உயர்ரக ஆயுதங்கள் ஆகியவை பாதிப்படையும்.
சுக்கிரன்
சுக்கிரனைக் குரு வென்றால் நாட்டின் எல்லையோர மாநிலங்களை ஆட்சி செய்பவர்கள் அழிந்து போவார்கள். பிராமணர்களும் அரசவம்சத்தினர்களும் சிக்கலைச் சந்திப்பார்கள். மழை பெய்யாது. அயோத்தி பைசாபாத் பகுதிகள்,ஒரிசா மற்றும் ஆந்திராவின் வடபகுதிகள், வங்கதேசம்,அலஹாபாத் பகுதிகள், நாட்டின் மத்தியப்பகுதிகள்,உத்தரப்பிரதேசத்தின் Braj பகுதிகள் ஆகியவை பலவிதத்திலும் பாதிக்கப்படும்.
செவ்வாய் சுக்கிரனை வெற்றிகண்டால் இராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். ஆட்சியாளர்கள் போர் காரணமாக சிறைப்படுவார்கள்.
சுக்கிரனை புதன் ஜெயித்தால் மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் பாதிக்கப் படுவார்கள். மழை பெய்யாது. பாலுக்கு பற்றாக்குறை உண்டாகும்.
சனியால் சுக்கிரன் தோற்கடிக்கப்பட்டால் நிறுவனங்களின் தலைவர்கள்,இராணுவ வீரர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், நீர்வாழ் விலங்குகள் மற்றும் பொருட்கள் ஆகியவை பாதிக்கப்படும். மேலும் மவுண்ட் அபு, புஷ்கரம், சௌராஷ்டிரா ஆகிய பகுதிகள், சூத்திரர்கள், ரைவதக மலைக்கு அருகில் வசிப்பவர்கள், தவறான செய்கையுடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள்,காட்டுப்பன்றி வேட்டையாடுபவர்கள், விதவைகள், திருடர்கள், எருமை,கழுதை, ஒட்டகம் முதலானவைகளும் பாதிக்கப்படும்.
சனி
சனியைச் சுக்கிரன் வென்றால் விலைவாசி ஏற்றமடையும். பாம்புகள், பறவைகள் மற்றும் பிரபலமான மனிதர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
சனியைச் செவ்வாய் வென்றால் தக்காணம்,ஆந்திரா, இந்துகுஷ் மலைப் பகுதிகள், பஞ்சாப் மற்றும் வடகாசி ஆகியவை பாதிக்கும்.
புதன் சனியை வெற்றிகொள்ளுமானால் பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும் வியாபாரிகள், பறவைகள், கால்நடைகள், யானைகள் போன்றவையும் பாதிக்கப்படும்.
சனி குருவிடம் தோற்றால் பெண்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களும், பெண்களால் நிர்வகிக்கப்படும் மாநிலங்களும் பாதிக்கப்படும்
Ambharish gsavithaastro@gmail.com
savithaastro.blogspot.com
9790111570
No comments:
Post a Comment