தற்போது நடைபைறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்களா என்பதை கணக்கிட
ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டுரைகள்
Yogi avayogi planets
Yogi avayogi prosperous and destruction.
போன்ற தலைப்புகளில் உள்ளதை காணலாம்.
யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த யாரோ சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்துவைக்கும் ஒரு சிலருக்கு புதனின் தோசம் அதிகமாகவே பற்றுவதால் அவர்களால் இத்திறையில் சிறப்பையும், புகழையும் ஒருகாலமும் அடைய முடியாது. புதன் கொஞ்சம் ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான்.
ஒரு குற்றம் நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன். பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.
பஞ்சாங்கம்:
நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம்.
இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த நட்சத்திரமும், நாளும்தான் தெரியும்.
இதில் உள்ள யோகம் தெரியாது.
மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும் ,யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.( அட்டவணை).
இது எவ்வாறு கணக்கிடுவது?
மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதாவது மேசம்0 to 30,
ரிசபம் 30 to 60 , மிதுனம் 60 to 90, கடகம் 90 to 120 , சிம்மம் 120 to 150, கன்னி 150 to 180, துலாம் 180 to 210, விருச்சிகம் 210 to 240, தனுசு 240 to 270, மகரம் 270 to 300, கும்பம் 300 to 320 பாகை, மீனம் 320 to 360 பாகை என 360 பாகை கொண்ட 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தோகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).
இனி யோகி பாகையை கணக்கிட மேஷத்தில் இருந்து சூரியன் இருக்கும் பாகை+ மேசத்திலிருந்து சந்திரன் இருக்கும் பாகை + 93 20°பாகை கூட்டினால் யோகி பாக கிடைத்துவிடும்.அதை கணக்கிட்டிதான் ரெடிமேடாக நீங்க என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என குறித்து அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள்.
இப்போ பலன்களை பார்ப்போம்.
யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி. அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே!
அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும்.இப்போது சனியே யோகியாவார். சனிதசா சனி கெடுதல் செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம் ,அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.
அவயோகி:
யோகியின் நட்ஞத்திரபாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் ஆறாவது நட்சத்திரமும் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும் கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை தருவார்கள்.அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி.
1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.
2.சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.
3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.
4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.
5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.
6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.
7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.
8. கேது யோகியென்றால் ராகு அவயோகி.
9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.
இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.
இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .
எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.
எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.
உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.
Ambharish gsavithaastro@gmail.com
savithaastro.bolgspot.com
9790111570
No comments:
Post a Comment