............
களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு செய்யும்
எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.
பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோஷத்தை செய்வார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.
களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோஷம் தான்.
2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.
சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.
பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.
7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.
Ambharish gsavithaastro@gmail.com
9790111570
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment