Wednesday, May 22, 2024

சூரியன்..........

        சூரியனும் அவரைச் சுற்றுகின்ற அனேக கிரகங்களு டன் சேர்ந்துகொண்டு  கோடிகணக்கில்  தூரம் உள்ள ஆகாயகங்கையில் (milky way) ஒரு பிரகாசமான கிரகம்தான் சூரியன்கிரகம்.

சூரியன் என்கிற தேவதா சைன்யத்தை பன்னிரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர்.
அதாவது பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாஸமும் துவாதஸ சூரியன்மார்கள் 
அதாவது,
மேடமாதம்
என்கிற சித்திரைமாதத்தில் மேடராசிக்ஷேத்ரத்தில், தாதா,  என்கிற பெயரில் சூரியன்  அறியப்படுகின்றார்.
அதற்கு அடுத்த இராசிக்ஷேத்ரமான இடபராசிக்ஷேத்ரத்தில் அதாவது வைகாசி மாதத்தில் சூரியன்,
, அர்யமா
என்கிற பெயரில் அறியப்படுகின்றார்.
மிதுனத்தில், மித்ரன்,
கற்கிடகத்தில், வருணன்.
தனது சுயக்ஷேத்ரம் ஆன சிம்மத்தில் 
, இந்த்ரன்,
கன்னியில், வி வஸ்வான்,
நீச்சக்ஷேத்ரம் ஆகிய  துலாமில்
 பூஷ்மா.
விருச்சிகத்தில் பர்ஜ்ஜன்யன், தனுசுவில் 
,அம்சஸ்,
மகரத்தில் பகன், கும்பத்தில் த்ருஷ்மா, மீனராசிக்ஷேத்ரத்தில் விஷ்ணு, என்று ஒவ்வொரு இராசிக்ஷேத்ரங்களிலும் ஒவ்வொரு பெயரிலும் சஞ்சரிக்கின்றார்,
அந்த சூரியன் ஒவ்வொரு இராசிக்ஷேத்ரங்களிலும் ஒவ்வொரு பெயர்களோடு
நுழைகின்ற நாளை சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது.
அதாவது தனது உச்சக்ஷேத்திரம் ஆன மேடத்தில் சூரியன் சஞ்சாரம் மேற்கொள்ளுகின்றமுதல்நாளை அதாவது சித்திரை முதல்நாளை  சித்திரைசங்கராந்தி என்கிற பெயரில் அறியப்படுகின்றது.
அந்த சங்கராந்தியின் நாளை தேவலோகத்தில் ஒரு உ த்சவ கோஷமாக கொண்டாடப்படுகின்றது.
அந்த கோஷயாத்ரையின் போது  ரிஷிமார்கள் வேதமந்திரங்கள் சொல்லியும். காந்தர்வர்கள் கானங்களை பாடியும், அப்ஸர சுந்தரிகள் நிருத்தங்கள் நாட்டியம்  செய்தும், நாகங்கள் சூரிய ரதத்தின் கயிறுகளாகவும், யக்ஷர்கள் தேரை பூட்டவும், ரக்ஷஸர்கள் அந்த தேரை தள்ளி கொடுத்தும், ஸ்ருதி பாட பால வித்யாதர் சிறுமிகளும் என்று தேவலோகத்தில் எல்லா மாதங்களிலும் சூரியன் ஒரு இராசிக்ஷேத்ரத்திலிருந்து மற்றொரு இராசிக்ஷேத்ரத்திற்கு மாறுகின்ற போது ஒரு 
 உ த்சவமாகத்தான் கொண்டாடப்படுகின்றது என புராணம் கூறும்
ஆதியும், மத்தியமும், அந்தமும் இல்லாத விஷ்ணுபகவான் தான் சூரியனின் அம்சக சைதன்யம் ஆவார்.
தேவர்கள் உணர்ந்து துயில் எழுகின்ற உத்தராயண காலத்தின் தொடக்கமாக மகராசிக்ஷேத்ரத்தில் சூரியன் சஞ்சரிக்க தொடங்க போகின்ற தொடங்க நாளை,
மகரசங்கராந்திரி,,
என்கின்ற பெயரில் பூலோக தேவாலயக்ஷேத்ரங்களில் சொல்லப்படும் விசேடம் ஆகும். 
அதேபோல்தான் ஒவ்வொரு இராசிக்ஷேத்ரதிலும் சூரியன் சஞ்சாரம் கொள்ளப்படும்போது எவ்வாறு வெவ்வேறு பெயர்களிலும் அறியப்படுகின்றாரோ அதேபோல்தான் அந்த இராசிக்ஷேத்ரத்திற்கும் தனிதனி பெயர்களில் அறியப்படுகின்றது.
அதேபோல் ஒவ்வொரு சூரியன் இருக்கின்ற மாதத்தில் ஜனனமாகின்ற மனுஷ்யர்களுக்கு, அந்தந்த ரிஷி ஆச்சார்யர்கள் அனுக்கிரகங்கள் உண்டாகும்,
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெயர் மாறுபடுவது போல,
ரிஷி ஆச்சார்யர்களும் மாறுபட்டு சூரியனை அந்த இராசிக்ஷேத்ரங்களில் சூரியனை,
ஸ்வாகதம், வரவேற்பு செய்கின்றனர்.
 01. மேடமாஸம்,
மாதத்தின் பெயர் ; மது மாஸம் 
அடையாளம் ஆடு.
சூரியன் பெயர் ; தாதா,
ரிஷிஆச்சார்யன் ; அகஸ்தியன்.
அப்ஸரஸ் ; க்ருஸ்தனி கன்யகா,
காந்தர்வன் ; ஹேதி,
நாகம் ; வாசுகி,
சங்கீத உபகரணம் ; தம்பூரா.

02. இடபமாஸம்.
அடையாளம் ; ரிஷபகாளை,
மாதத்தின்பெயர் ; மாதவமாஸம்.
சூரியன்பெயர் ; ஆத்மா
ரிஷிஆச்சார்யன் ; ஆங்கிரஸ்.
அப்ஸரஸ் ; பூத்ஜகஸ்தனீ,
நாகம் ; கச்ச நீரம்.

03. மிதுனமாஸம்,
அடையாளம் ; ஒரு யுவனபுருஷனும் ஒரு யுவதி ஸ்த்ரியும்,
மாதத்தின்பெயர் :சுக்லமாஸம்,
சூரியன்பெயர் ; மித்ரன்.
அப்ஸரஸ் ; மேனகா,
காந்தர்வன் ; ஹாஹா,
நாகம் ; தக்ஷகன்.

04. கற்கிடகம் மாஸம்,
அடையாளம் ; நண்டு,
மாதத்தின்பெயர் ; சூச்சி மாதம்,
சூரியன்பெயர் ; வருணன்.
ரிஷிஆச்சார்யன் ; வஸிஷ்டன்.
அப்ஸரஸ் ; ரம்பா 
காந்தர்வன் ; சித்ரஸேனன்,
நாகம் ; ஹுஹூ,

05. சிங்கமாஸம்,
அடையாளம் ; சிங்கம்,
மாதத்தின்பெயர் ; நமோ மாஸம்.
சூரியன்பெயர் ; .
ரிஷிஆச்சார்யன் ; அம்கிரா,
அப்ஸரஸ் :ப்ரமீளா,
காந்தர்வன் ; விஸ்வாஸு,
நாகம் ; ஏலாத பத்ரன்.

06. கன்னிமாஸம்.
அடையாளம் ; படகை ஓட்டுகின்ற வஞ்சி ஸ்த்ரீ.
சூரியன்பெயர் ; விவ
ஸ்வான் 
மாதத்தின்பெயர் ;நமஸ்யா மாஸம்,
ரிஷிஆச்சார்யன் ;ப்ருகு,
அப்ஸரஸ் ;
ஆலோசனா,
நாகம் ; சங்கபாலகன்.

07. துலாமாஸம்,
அடையாளம் ; துலாக்கோல்.
மாதத்தின் பெயர் ; பூஷ்மா,
ரிஷிஆச்சார்யன் ; கௌதமன்.
சூரியன்பெயர் பூஷ்மா.
மாதத்தின்பெயர் ;தபோமாஸம்..
ரிஷிஆச்சார்யன் ;ஸுவேஷணன்.
அப்ஸரஸ் ; க்யுதாச்சி,
காந்தர்வன் ;ஸுவேஷணன்.
நாகம் ; தனஞ்சயன்.

08. விருச்சி கமாஸம்.
அடையாளம் ; தேள்.
மாதத்தின்பெயர் ; தப்ஸ்ய மாஸம்.
சூர்யன்பெயர் ; பார்ஜ்ஜயன்.
அப்ஸரஸ் ;விஸ்வா வசி.
ரிஷிஆச்சார்யன் ; பரத்வாஜன் 
காந்தர்வன் : ஸேனாஜித்.
நாகம் ; தைவராவத்.

09. தனூமாஸம்.
அடையாளம் - வில் அம்பு)
மாதத்தின்பெயர் ;அஹஸ்மாதம்.
சூரியன்பெயர் ; ஆங்கிரஸ்.
ரிஷிஆச்சார்யன் ; கஸ்பன்.
அப்ஸரஸ் : ஊர்வசி.
காந்தர்வன் ; ருதுஸேனன்.
நாகம் ;தார்க்ஷயன்.

10.மகரமாஸம்.
அடையாளம் ;முதலை.
மாதத்தின்பெயர் ;புஷ்யமாஸம்,
சூரியன்பெயர் ; பகன்.
ரிஷிஆச்சார்யன் : ஊர்ஜனன்.
அப்ஸரஸ் : பூர்வ சித்ரா,
காந்தர்வன் :அரிஷ்டனேதி.
நாகம் ; கார்கோடகன்.

11. கும்பமாஸம்.
அடையாளம் ; நிறைகுட கும்பகல ச  ஜலம்.
மாதத்தின்பெயர் ; இஷமாஸம்.
சூரியன்பெயர் ;த்வ்யமா
ரிஷிஆச்சார்யன் ; ப்ரஹோபோதன்.
அப்ஸரஸ் : திலோத்தமா.
காந்தர்வன் ; கதனித்.
நாகம் ; த்ருதராஷ்டரன்.

12..மீனமாஸம்.
மாதத்தின்பெயர் :ஊர்ஜ்ஜ மாஸம்
அடையாளம் ; இரட்டை மீன்கள்.
சூரியன் பெயர் ; விஷ்ணு.
ரிஷிஆச்சார்யன் ; விஸ்வாமித்ரர்.
காந்தர்வன் ; ஸத்யஜித்.
நாகம் :சாசயதன்.
இவ்வாறு ஒவ்வொரு இராசிக்ஷேத்ரங்களிலும் மாறும்போது சூரியனுடைய சுபாவகுணங்கள் அந்த இராசி பொறுத்தும். ரிஷி , காந்தர்வன், நாகம், பெயர் போன்றவைகள் பொறுத்து சுபாவம்  மாறுபடும்.
சூரியன் 
பகவான் நாராயணனின் அம்சம் ஆகும்.
விஷ்ணுவின் விராட் ரூபத்தில் ஒரு பாகம்தான் சூரியன்.
அத்வைதத்தின் சத்தியத்தின் ஒரு உதாரணம், சூரியன்.
துவாதஸ சூரியன்மார்கள், தேவன்மார்களின்,அசுரன்மார்களும் பிதாவாகிய கஸ்யபனும், மாதா அதிதி ஆவாள்.
ambharish g
savithaastro@gmail.com 
savithaastro.blogspot.com
9790112570

No comments:

Post a Comment