இனிய நண்பர்களுக்கு.
சுவாதியில் முத்தெடுத்து ராதாவில் ( விசாகம் நட்சத்திரம்) சேர்ந்த முத்து அனுராதாவில் ( அனுஷம் நட்சத்திரம் ) பயிராகி கேட்டையில் கோட்டை கட்டும் என்பது ஜனன விதி. ஆகையால்தான் குழந்தைப் பிறப்பில் தாமதமாகியிருக்கும் தம்பதிகளை சுவாதியில் இணையச் சொல்லும் கணிதத்தை ஜோதிடத்தில் சொல்லி வைத்தார்கள். இது பொதுவான கண்ணோட்டமாகக் கொண்டாலும் உள்ளிருக்கும் சூட்சுமத்தை அறிய வேண்டுமென்று சிந்தனையில் அமர்ந்தபோது கிடைத்த இன்னுமொரு வழிப்பாதையையும் காணலாம்.
அதாவது, பரணியில் அனல் மூட்டி கிருத்திகையில் நெய்கூட்டி ரோகிணியில் ஒளிர்ந்திடும் பொழுது மிருகசீரிஷத்தில் வளம் சேர்க்கும் என்று எடுத்துச் சொல்வதும் சரியாகவே இருக்குமென நினைக்கிறேன்.
சரி வாங்க, விசயத்திற்குப் போவோம்.
சூரியன் உத்திராடத்தில் வந்து சந்திரன் திருவோணத்தில் உலவும் நாளில் உத்திராயண புண்ணிய காலத்தையும்,
சூரியன் புனர்வசுவின் 4ல் வந்து சந்திரன் கிருத்திகையில் உலாவும் நாளில் தட்ஷிணாயன புண்ணிய காலம் என்று வகுத்திருப்பதைப்போலவே இந்த புண்ணியகாலத்திற்குள் அடைபட்டு வரும் மாதங்களின் பருவ நிலையைத்தான் ருதுக்களாகப் பிரித்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அந்த வகையில் மழைக்காலம் குறைந்து பனிக்காலம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் உருவாகும் முன்பனியால் சூரியனின் மறைவுக்குப்பின் காணும் இருள் மிகவும் வெளிச்சம் குறைந்ததாகக் காணப்படுவதால் உருவாகும் புதிய உயிரினங்கள் மனிதர்களில் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்காமல் இருக்கும் பொருட்டு வெளித்தைச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒளிப்பிழம்பு என்று அறிவியல் ரீதியாக சொன்னாலும் , துலாம் மாதத்தில் நீசமாகி மீண்டுவரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிறுகச் சிறுக வெப்பத்தைக்கூட்டி ச்ராவண மாதத்தில் உத்திராயண காலம் முதல் தனது வெப்பக் கதிர்களை அதிகமாக வெளிவிடுவதைப்போல் மனிதர்களின் ஆத்மாவும் மழைக்காலக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு மீண்டும் ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட புனித நாளாக சூரியன் அனுஷம் நட்சத்திரத்தில் வந்து சந்திரன் கிருத்திகையில் உலவும் காலத்தில் மஹாதீபமாக ஒளிப்பிரவாகத்தை உருவாக்கி அதில் இறை பக்தியை வளர்த்தார்கள் என்றும் எடுத்துக் கொள்கின்றேன். அதுபோலவே சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சூரியன் கார்த்திகை மாத அனுஷத்தில் புதிய பருவகால மாற்றங்களை உருவாக்கம் செய்வதால் கார்த்திகைப் பெண்கள் ( சந்திரன் - கார்த்திகை நட்சத்திரத்தில்) ஆறுபேராக உவமானித்து காத்திகைத் தீப ஒளியில் மக்களின் மனதில் உருவாகும் பத்தி என்னும் இறைவனின் சிந்தனை ஆறுமுக வேலவனாக ( முருகப் பெருமானாக) அழகிய தோற்றங்களைக் கொடுத்து வாழ்க்கை முறையை செம்மையுடன் வாழ வழியமைத்துச் சொல்லி வைத்திருக்கலாம் என்றே எடுத்துக் கொள்வதோடு இன்னும் ஒரு துணுக்குச் செய்தியாக,
செவ்வாய், ராகு, குரு ( மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் ; சித்திரை, சுவாதி, விசாகம், அவிட்டம், சதயம், பூரட்டாதி) இவர்களிடமிருந்து ( பூசம், அனுஷம், உத்திரட்டாதி ) சனிபகவானுடன் சூரியன் பயணிக்கும் பொழுது புதிய பிரபஞ்ச இரகசியங்களைத் தோற்றுவிக்கின்றது என்பதை சூட்சுமமாக உணர்த்திடவே கார்த்திகைத் தீபத் திருநாள், வைகாசி விசாகத் திருநாள், ஆடிப் பெருக்கு, தீபாவளி, தைப் பொங்கல், சித்திரைப் பௌர்ணமி போன்ற ஆன்மீகத் திருவிழாக்களையும் ஏற்படுத்தி வாழும் கலையை வளர்த்திருக்கின்றார்கள் என்பதை எண்ணி பெருமிதம் கொள்வோம்!
இதை இன்னும் ஜோதிட ரீதியாக நுணுக்கமாக ஆராய்ந்தால் நீண்ட பதிவாக நீண்டு கொண்டே பயணப்படும் என்பதால் நண்பர்களின் ஆராய்ச்சிக்கு விட்டு விடுகிறேன்.
அனுஷம் நட்சத்திரம் - பனைமரம் = கார்த்திகையில் வரும் அனுஷம் நட்சத்திரத்தில் சூரியனும், கிருத்திகையில் சந்திரனும் இருக்க, சொக்கப்பனை கொளுத்தப்படுவதும் வழக்கமாகி வந்திருப்பதையும் நினைவு கொள்வோம்!
மேலும் இந்தப் பதிவு உங்களுப் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் அப்போதுதான் உங்கள் நண்பர்களுக்கும் காணும் பாக்கியம் கிடைக்கும் !
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment