நாம் இன்று புத்திர தோஷத்திற்கான நிவர்த்திகான வழிகளைப் பற்றி ஆராய்வோம் !
லக்ன, ராசிக்கு 5 ல் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர கோணத்தில் இருந்தால் புத்திர தோஷம் நிவர்த்தியாவதோடு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
5 ல் பாவிகள் நின்றாலும், அவர்களுடன் சுபர் கூடி ஆட்சி, உச்ச பலத்தோடு இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கழித்த பின்னர் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
5 ல் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தால், நாகதோஷத்தால் ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு. ஆனால், புத்திரகாரகன் கேந்திர கோணங்களில் அமர்ந்து ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்த பின்னர் குழந்தை பாக்கியமுண்டாகும்.
5 ல் சுக்கிரன், புதன் முதலானோர் அமர்ந்திருந்தாலும், இவர்கள் ஆட்சி, உச்ச பலத்தோடு இருந்தால் ஜாதகருக்கு புத்திர தோஷம் நிவர்த்தியாகி அழகான பெண் குழந்தைகள் பிறக்கக்கூடிய அதிர்ஷ்டம் வந்து சேரும்.
5. ல் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், இவர்கள் ஆட்சி, உச்ச பலத்துடன் இருக்க, ஜாதகருக்கு புத்திர தோஷம் நிவர்த்தியாகி அழகான ஆண் குழந்தைகள் பிறக்கும்.
5 ல் சனி, ராகு, கேது இருந்தாலும் இவர்கள் ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்தாலும் அல்லது யோக பலத்தில் ஓங்கியிருந்தாலும் ஜாதகரின் புத்திர தோஷம் நிவர்த்தியாகி குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.
5. ம்மிடத்தோன் பகை, நீசம் அடைந்திருக்க, அவரோடு பாவிகள் கூடியிருக்க, குரு ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்து அவரோடு சுபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஜாதகருக்கு தோஷம் நிவர்த்தியாகி 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
5 மிடத்தோன் பகை, நீசம் பெற்று பாவிகளுடன் சம்பந்தப்பட்டிருக்க, 5 மிடத்தோன் நின்ற நட்சத்திர நாதன் ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்து குருவால் பார்க்கப்பட்டாலும், 5 மிடத்தோன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்று குருவுடனும், 5 மிடத்தோன் நின்ற நட்சத்திர நாதனோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் ஜாதகருக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
5 ல் சுபர்கள் இருந்தாலும், 5 மிடத்தை சுபர்கள் பார்த்தாலும், 5 மிடத்தோன் பலமாக இருந்தாலும், 5 மிடத்தோன் சுபர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், குரு ஆட்சி உச்சமாக இருந்து 5 மிடத்திற்கோ, 5 மிடத்தோனுக்கோ தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் நின்ற ராசி நாதன் பலமாக இருந்து 5 மிடத்தையோ, 5 மிடத்தோனையோ தொடர்பு கொண்டாலும் புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
லக்னப் பிரகாரம் 5 ல் பாவிகள் இருக்க, 5 மிடத்தோனும் பலவீனத்தோடிருக்க, ராசிப் பிரகாரம் 5 ல் சுபர்கள் நின்று 5 ம் அதிபதி பலமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஒரே ஒரு குழந்தை பிறந்து தீர்க்காயுளோடு இருக்கும்.!
Ambharish.g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
No comments:
Post a Comment