Friday, December 4, 2020

கர்ம வினை எதனால்

வணக்கம் நண்பர்களே இன்று முக்கியமான சில தோஷங்களையும் அதற்குண்டான தீர்வுகளையும் பற்றி பார்க்கலாம்

மனிதனுடைய கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்
1:சரி செய்யக்கூடிய கர்மா
2:அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மா 
3:கர்மா அழிந்தும் அழியாத கர்மா வளரும் குறையும்
மனிதப் பிறவி எடுப்பதே கர்மாவை கழிக்கத்தான்.
தோஷத்தை ஏற்படுத்துவது திரிகோனாதிபதி1,5,9
அதை செயல்படுத்துவது கேந்திரம்
1,4,7,10.பின் விளைவை உண்டு பண்ணுவது 6,8,12
பொதுவாக தீராத கோபமும் பேராசைகளும் கர்மாவிற்கு வழிவகுக்கும்.
தோஷத்திற்குண்டான கிரகநிலைகள்
1ஒரு பாவ அதிபதியும் பாதகாதிபதியும் சேர்ந்து இருப்பது.
2ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதி சேர்ந்திருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் ராகு கேது சேர்ந்து இருப்பது.
ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதியும் ராகுவும் சேர்ந்து இருப்பது.
இதில் லக்னாதிபதி சம்பந்தப்பட்டால்
ஜாதகருக்கு. அதேபோல் எந்த பாவாதிபதி சம்பந்தப்படுகிறது அந்தப் பாவக காரக உறவுகளுக்கு தோசத்தை ஏற்படுத்துகிறது. 
பிதுர் தோஷம்:இது தலைமுறைகளைப் பாதிக்கும் கடுமையாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது ஜாதகர் தந்தை-மகன் மூவரும் கஷ்டப்பட்டால் பிதுர் சாபம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இதற்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து கொள்ளலாம்.
மாதுர் சாபம்:இது நாலாம் இடத்தை சேர்ந்தது இதற்கு அம்மா வழி குல தெய்வத்தை வணங்கலாம் அல்லது ஏதோ ஒரு அம்மன் கோயிலில் ஜென்ம நட்சத்திரத்தன்று  அபிஷேகம் அன்னதானம் செய்யலாம்.
குரு சாபம்:குரு 6 8 12ல் இருந்து உடன் ராகுஇருந்தால் குரு சாபம் ஒரு நல்ல குருமார்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்து ஆசி வாங்கினால்
குரு தோஷம் நிவர்த்தியாகும்.
குலதெய்வ சாபம்:பிதுர் சாபம் இருந்தால் குலதெய்வ சாபம் இருக்கும்
குலதெய்வம் தெரியாமல் இருந்தால் காவல் தேவதைகளுக்கு வழிபாடு செய்தால் குலதெய்வத்தை காட்டிகொடுக்கும் எதோ ஒரு பிரார்த்தனை வைத்து அதை நிறைவேற்றினால் போதும்.
பொதுவாக தீப வழிபாடு சிறந்தது
தொடர்ந்து தீபம் ஏற்றுவது சிறப்பு
அக்கினி தான் தேவதைக்கு உணவு
மாதா, பிதா, குரு, குல தெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
பெண் சாபம்:3விதமானபென்கள்
1அம்மா ஸ்தானம் 2கன்னிப் பெண்கள்
திருமணமான மற்றும் கரு உருவான பெண்கள்  12ல் சுக்கிரனோ புதனோ இருந்தால் கன்னிப் பெண் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை உயிரோடு எரித்தது புதைத்தது ஊரில் வர விடாமல் துரத்தியது மற்றும் காதலித்த பெண்களை களங்கப் படுத்தியது.
கூட மாந்தி இருந்தால் கொபம் பழி வாங்கும் உனர்ச்ற்சியில் இருக்கிறது
 என்று அர்த்தம்  தீர்வு ஒரு குறிப்பிட்ட
நாள் நட்சத்திரத்தில் தொடர்ந்து சில ஆண்டுகள் படையல் போட்டு கும்பிடலாம் படிப்படியாக விலகும்.
பிரேத சாபம்:எந்த கிரகத்துடன் மாந்தி சேர்ந்து இருந்தாலும் அதை பிரேத சாபம்
(இறக்கும்போது இறந்த மனநிலையைக் குறிக்கும்)சூரியன் அப்பா, சந்திரன் அம்மா, செவ்வாய் பங்காளி, புதன்மாமன், ராகு கேது தாத்தா பாட்டி
தீர்வு புண்ணிய நதிகளில் நீராடல்
மற்றும் புனித நீர் வீட்டில் தெளித்து விடலாம், மேலும் தில ஹோமம் மற்றும் சுமங்கலி பிரார்த்தனை போன்ற விசேஷ பூஜைகளை கொண்டு தோஷங்களின் விளைவுகளை பெருமளவு குறைத்துக் கொள்ளலாம்.
Ambharish.g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment