Monday, December 21, 2020

மனதின் போக்கும் தெளிவும்

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !
      எந்த ஒரு மனிதக்கும் மனநிலை சரியில்லை ( குழப்ப நிலை)  என்றால் அவர்களால் ஒருமுகத்தன்யுடன் செயல்படுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே, மனம் என்பதை முதலில் ஆய்வு செய்தோமானால், 
       உணர்தல், பார்த்தல், கேட்டல், நுகருதல், ருசித்தல் என்னும் பஞ்சேந்திரியங்களின் இயக்கத்தால் ஏற்படும் புதிய ஒன்றின் மீதான தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குண்டான குழப்பத்தை அடைந்திருக்கும் நிலை அதாவது எதையும் சந்தேகத்திற்கிடமான குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஸ்தான நிலை என்பதால் மனம் என்பதை ஒரு சந்தேகநிலை ( இதுதான் என்று வரையறுக்க இயலாத ஒன்று)  என்று சொல்லலாம்.
        இவ்வாறு பலவிதமான நிகழ்வுகளால் உருவாகும் சந்தேகங்கள் முதலானவைகளும் ஐம்புலன்களால் உணரப்பட்டு சந்தேகமில்லாமல் தனக்குள் சேமித்து வைத்துக் கொண்ட அனுபவப் பதிவுகளைக் கொண்டு சந்தேகமில்லாமல் ஒன்றை தீர்மானித்து சேமித்து வைத்த ஸ்தானத்தை சித்தமென்றும் 
    இதுபோல் சேமித்த தகவல்களைக் கொண்டு தொலைவிலுள்ள பொருளை இதுதான் என்று தீர்மானித்து வெளிப்படுத்தும் . ஒருவேளை சித்தத்தில் சேமிக்கப்படாத புதிய ஒன்றாக இருக்குமானால் அதை அடையாளப்படுத்த இயலாத புதிய ஒன்று என தீர்மானப்படுத்தும். இதையே புத்தி என்றும் இவ்வாறு மூன்று நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தும் நிலையிலே நான் என்னும் அஹங்காரம் தோன்றுவதாகவும் சொல்லலாம். 
      ஆகவே, ஒரு ஜாதகத்தில் லக்ன பாவகமென்னும் ( மனிதன்)  மனமென்னும் இரண்டாம் பாவகத்தில் இறங்கி ( சித்தம் )மூன்றாமிடமாகிய பயணத்தை அடைந்து தெளிவு ( சேமித்தல் )என்னும் நான்காம் பாவகத்தில் சுகப்பட வேண்டுமானால் ஐந்தாம்பாவகமென்னும் ( புத்தி)  சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதாலேயே ஒருவரது குணபாவகங்களைக் கண்டறிய லக்னத்திற்கு 2 , 5 ம் பாவகங்களையும், அந்த பாவக, பாவகாதிபதிகளுடன் தொடர்பு கொண்ட சுபாசுப கிரகங்களை ஆராய்ந்து பார்க்க சொல்லி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். சுத்தமாகக் குழப்பி விட்டேனா? 
       அப்படியானால், சூரியன், சந்திரன், புதன், குரு முதலான கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சுப ஸ்தானங்களில் சுபபலன்களைக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் .
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment