Sunday, December 20, 2020

பயண விரும்பிகள் - Travel Freak !!!!

சிலர் எப்போதும் பயணம் 
செய்வதில் நாட்டம் கொண்டிருப்பார்கள்.

பயணம் இருவகைப்படும், குறுகிய பயணம் மற்றும் நீண்ட பயணம்.

குறுகிய பயணம் - சில மணி நேரம் அல்லது குறைந்த தூரம் கொண்ட பயணம்.

நீண்ட பயணம் - Leh Ladak, Manali, கரடு முரடான, சாகசம் செய்யக்கூடிய நோக்கில் மேற்கொள்ளக்கூடிய பயணம்.

லக்கின புத்திநாதன் 3,9 சந்திரன், மிதுனம் மற்றும் தனுசு தொடர்பு கொண்டால் நீண்ட தூற்ற பயணம் செய்வார். வாழ்க்கை முழுதும் பயணம் செய்வதிலேயே போய் விடும்.

லக்கின புத்திநாதன் 3,9 செவ்வாய் தொடர்பு கொண்டால் மலை மற்றும் கரடு முரடான பாதையில் பயணம் செய்வார்.

சனி - நடந்தே செல்வார்
ராகு - விமானம், ரயில் 
குரு - ஆன்மீக பயணம், சட்டம் ஒழுங்கு 
புதன் - கல்வி வியாபாரம்
கேது - ஆன்மிகம், பிறவி பயனை தேடி
சுக்கிரன் - தன சொந்த விருப்ப படி உல்லாச பயணம் 
சூரியன் - அரசு பயணம் 

3,9 பாவ புத்தி நாதன் 2,8 தொடர்பு கொண்டால் ஒரே இடத்தில முடங்கி கிடப்பார்.

3ம் பாவம் 8 , ரிஷபம், விருச்சிகம் தொடர்பு கொண்டால், பயணம் செய்யும் போது மரணிப்பார்.

9ம் பாவம் 8 , ரிஷபம், விருச்சிகம் தொடர்பு கொண்டால், விமான பயணம் செய்யும் போது மரணிப்பார்.

3,9ம் பாவம்  2,8,12 விருச்சிகம் தொடர்பு கொள்பவர்கள் பொதுவாக பயணம் செய்யாமல் இருப்பது, கவனமாக பயணம் செய்வது நல்லது.

9ம் பாவம் ஸ்திர ராசி தொடர்பு கொண்டால் helicopter பயணம்.

9ம் பாவம் 10, உபய மற்றும் மகரம் தொடர்பு astronaut 

ஒருவருடைய ஜாதகத்தில் (விருச்சிக லக்கினம்) 3,7 சனி - 6,10 ராகு , 2,5,8,11 சுக்கிரன் - அவர் 200 முறையாவது விமான பயணம் செய்திருப்பார். இதில் 2,8 என்பது குறுகிய பயணம் அதாவது இந்தியாவிற்குள் என்பதையும், ராகு 6,10 என்பது தொழில் முறை (மகரம் 3ம் பாவம்) பயணம் என்பதையும், ராகு (மிதுனம்) தொடர்பு கொள்வதையும், 2,8, 5,11 என்பது பயணங்களில் சிறு தடை ஏற்பட்டு பிறகு நல்லபடியாக நடப்பதையும் காட்டுகிறது.

இது போல் ஜோதிட ரீதியில் உங்கள் பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதன் படி செயல்படுவது சிறந்த பலனை கொடுக்கும்.
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

1 comment: