Sunday, December 20, 2020

புனர் பூ தோஷம்

     பொதுவாகவே ஜனன ஜாதகத்தில் சந்திரன் சனி சம்பந்தம் ஏற்பட்ட ஜாதகருக்கு புனர்பூ தோஷம் இருப்பதாகச் சொல்லி விடுகின்றோம்.  அப்படிப்பட்ட ஜாதகர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி மனதிற்குள் நினைத்துப்பார்க்கையில் சற்றே சங்கடமான விசயமாகத்தான் இருக்கின்றது.  
        காலபுருஷ தத்துவத்தின்படி சுகாதிபதியான மனோகாரகனுக்கு கர்ம, பாதகாதிபதியான சனிபகவான் 7 , 8 ம் ஆதிபத்தியமாக அமைந்து அவரே மாரகாதிபதியாகவும், மான, அவமான, மர்மங்களைக் குறிக்கும் ஆயுள் ஸ்தானாதிபதியுமாக அமைந்து விடுகிறார். 
     இந்நிலையில் சந்திரன் சனி சேர்க்கை என்பது சற்றே ஆயுள் பந்தமான கர்மவினையின் தொகுப்பாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். 
      அதாவது , சனிபகவான் தான் இருக்குமிடத்தை சுருக்கி சிறியதாக்கும் தன்மையும் , தான் பார்க்கும் இடங்களை பாழ்படுத்தும் குணத்தையும் கொண்டவர்.  இந்நிலையில் மனோகாரகனாகிய சந்திரனை தொடர்பு கொள்ளும்போது அந்த ஜாதகர் தனது சுயபுத்தியையும் பிறர் கூறும் அறிவுரைகளை ஆராய்ந்து வழிநடக்கும் எண்ணங்களும் இல்லாம் தனக்கென தனியொரு சிந்தனையை மனதிற்குள் ஏற்படுத்திக்கொண்டு தன்னிச்சையாக வாழத்தொடங்கி விடுகின்றார். 
     காரணம் யாதெனில், காலபுருஷனுக்கு 3 , 6 க்குடைய மூளைகாரகனென்னும் புதபகவான் கடகத்திற்கு 12, 3 ஆகவும், மகரம், கும்பம் ஆகிய ஸ்தானங்களுக்கு முறையே  6 , 9 மற்றும் 5 , 8 ம் ஆதிபத்தியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதால் இந்த சந்திரன் சனி சேர்க்கை பெற்ற ஜாகருக்கு தனது பெரும்பான்மையான உதவிகளை செய்து கொடுக்க முன்வருவதில்லை என்பதே என்னுடைய கருத்து.  மேலும், இப்படியான அமைப்புள்ள ஜாதகர்களே கண்ணை திறந்து கொண்டே படுகுழியில் விழுகின்ற விபரீத ஆராய்ச்சிகளில் இறங்கி விடுகிறார்கள்.  
      சரி, இப்படிப்பட்ட இணைவுள்ள ஜாதகர்களும் மேன்மையடைய என்னதான் தீர்வு என்று சிந்தித்தால் சனி -- காலபைரவன் அதாவது சிவம் .சந்திரன்  -- அன்னை பராசக்த்தி அதாவது கங்காதேவியாகிய அம்பாளையும் குறிக்கும் என்பதால் சந்திரமௌலீஸ்வரையோ அல்லது காலை பைரவரையோ அவரவர் ஜாதகப்படியான தோஷத்தின் தன்மைக்கேற்ற எண்ணிக்கையான நாட்கள் வழிபட்டு வருவதாலும், கிரக ராசிக்கற்களை முறைப்படி பூஜித்து அணிந்து கொள்வதாலும் ஓரளவு பாதிப்புக்களை குறைத்து வாழ்க்கையில்  வெற்றிவாகை சூடலாம். அல்லது வேறு சில தாந்திரீக முறைகளில் பூஜைகளை மேற்கொண்டும் இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகர்கள் வெற்றிவாகை சூடலாம் ! 
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment